Wednesday, 2 July 2014

திருவாரூரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை நகரசபை கூட்டத்தில் வலியுறுத்தல்

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
திருவாரூரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நகரசபை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

நகரசபை கூட்டம்


திருவாரூர் நகர சபை கூட் டம் நகர சபைத்தலைவர் ரவிச் சந்திரன் தலைமையில் நடை பெற்றது. நகராட்சி ஆணையர் உமாமகேஸ்வரி, துணைத் தலைவர் செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பொறியாளர் தர்மலிங்கம், சுகாதார அலுவலர் குமார், இளநிலை தவியாளர் சிவசங் கரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் உறுப்பினர் களிடையே நடைபெற்ற விவாதம் வருமாறு:-

வரி நிர்ணயிக்க வேண்டும்


செந்தில் (துணைத்தலை வர்):- கடந்த முறை நகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தப் பட்ட கோரிக்கைளை நிறை வேற்ற வில்லை. நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து உண் ணாவிரதம் இருந்தும் எந்த பயனும் இல்லை. மக்கள் வரி செலுத்த தயாராக உள்ள நிலையில் வரி நிர்ணயிக்கப் படாமல் உள் ளது. இதுகுறித்து நகராட்சி கவனம் செலுத்த வேண்டும்.

ஆக்கிரமிப்புகள்

அசோகன் (தி.மு.க.):- தெற்குவீதியில் இருந்து அங் காளம்மன் கோவில் செல்லும் வழியில் சாக்கடை தடுப்பு பழுதடைந்து நீண்ட கால மா கியும் சீரமைக்கப்பட வில்லை. அம்மா உணவகத் துக்கு ரூ.40 லட்சம் வரை செலவிடப்பட உள்ளது. மலிவு விலையில் உணவு தருவ தால் நகராட்சிக்கு இழப்பு ஏற் படும்.

ஆர்.டி.மூர்த்தி (அ.தி. மு.க.):- அம்மா உணவகத்தால் நக ராட்சிக்கு இழப்பு ஏற் படாது. இது பொதுமக்களுக்கு மிகுந்த பயனுள்ள திட்ட மாகும்.

மடப்புரம் சம்பத் (காங் கிரஸ்):- சத்துணவு மையங்கள் நடைபெறுவது போல் அம்மா திட்டம் நடைமுறைப் படுத் தப்படும். எனவே இழப்பு ஏற்படாது. திருவாரூர் கடை வீதியில் ஆக்கிரமிப்புகள் அதி கமாக உள்ளது. ஆக்கிரமிப் புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்களை நேரடியாக சந்தித்து...

வரதராஜன் (சுயேச்சை):-

கம்பர் தெருவில் சுகாதார வளாகம் கட்ட வேண்டும்.

அன்வர்(தி.மு.க.):- மேட்டு பாளையம் பகுதியில் மழைநீர் வடிகால் கட்ட வேண்டும்.

ரவிச்சந்திரன் (தலைவர்):-

கவுன்சிலர்களின் கோரிக் கைகள் உடனே நிறைவேற்றப் படும். வரி நிர்ணயிப்பது தொடர்பாக அனைத்து வார்டுகளிலும் முகாம் நடத்தி, பொதுமக்களை நேரில் சந் தித்து வரி நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

தீர்மானம்

கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் வரலாறு காணாத வெற்றியை பெற்று தந்ததற்கும், திருவாரூரில் அம்மா உண வகம் அமைப்பதற்கு உத்தர விட்டதற்கும், திருவாரூர் பனகல் சாலையில் உள்ள சோமசுந்தரம் பூங்காவில் மனுநீதிசோழனுக்கு மணி மண்டபம் அமைக்க உத்தர விட்டதற்கும் முதல்- அமைச் சர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

No comments:

Post a Comment