Wednesday, 30 July 2014

திருவாரூர் மாவட்டத்தில் நோன்பு பெருநாள் சிறப்பு தொழுகை

















ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு திருவாரூர் பகுதிகளில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை செய்தனர்.
ரம்ஜான் பண்டிகை
சந்திரனை அடிப்படையாக கொண்டு கணக்கிடப்படும் இஸ்லாமிய நாட்காட்டி யின் படி ஆண்டின் 9–வது மாத மாக வரும் ரமலான் மாதத்தை, முஸ்லிம்கள் இறைவனுக்கு நன்றி செலுத்தும் மாதமாக கருதி நோன்பு இருக்கிறார்கள். இந்த நோன்பு முஸ்லிம்களின் 5 கடமைகளுள் 3–வது கடமை ஆகும். இந்த ஆண்டுக்கான ரமலான் நோன்பு கடந்த மாதம் (ஜூன்) 30–ந் தேதி தொடங்கியது. நேற்று ரம்ஜான் பண்டிகை கொண்டா டப்பட்டது.
திருவாரூர் மாவட்டத்தில் முஸ்லிம்கள் நேற்று ரம்ஜான் பண்டிகையை குதூகலத்துடன் கொண்டாடினார்கள். இதை யொட்டி பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகைகள் நடை பெற்றன. அதில் கலந்து கொண்ட முஸ்லிம்கள் தங்கள் நண்பர்கள், உறவினர்களுடன் ரம்ஜான் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். சிறிய வர்கள், பெரியவர்களிடம் ஆசி பெற்று ரம்ஜான் வாழ்த்து பெற்றனர்.
திருவாரூர்
திருவாரூர் கொடிக்கால் பாளையம் முகைதீன் ஆண்ட வர் பள்ளி வாசலில் ஊர் உறவின்முறை ஜமாத் சார்பில் ரம்ஜான் பண்டிகையை முன் னிட்டு நேற்று இமாம் அப் துல்நாசர் தலைமையில் சிறப்பு தொழுகை நடை பெற்றது. இதற்கான ஏற்பாடு களை ஜமாத் நாட்டாண்மை ரபியுதீன், செயலாளர் ஜாகீர்உசேன் மற்றும் நிர்வாகிகள் செய்து இருந்தனர். இதேபோல் மேலத்தெரு ஜாமியுல்மஸ்ஜித் பள்ளி வாசலில் இமாம் அப் துல்சலாம் தலைமையில் நடைபெற்ற சிறப்பு தொழுகை யில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். இதற் கான ஏற்பாடுகளை ஜமாத் நாட்டாண்மை ஜெய்னுலாவு தீன், செயலாளர் முகமதுகஜ் ஜாலி மற்றும் நிர்வாகிகள் செய்து இருந்தனர். திருவாரூர் விஜயபுரம் மஸ்ஜிதுல்பிர்தவுஸ் பள்ளி வாசலில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் இமாம் சாகுல்அமீது தலைமையில் சிறப்பு தொழுகை நடை பெற்றது. நிகழ்ச்சி ஏற்பாடு களை ஜமாத் நாட்டாண்மை சலாவுதீன், செயலாளர் ஜப ருல்லா மற்றும் நிர்வாகிகள் செய்து இருந்தனர். இதில் திருவாரூர் அடியக்கமங்கலம் ஜாமியுல் மஸ்ஜித் பள்ளி வாசலில் இமாம் பீர்முகமது தலைமையில் சிறப்பு தொழுகை நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை ஜமாத் நாட் டாண்மை பஷிர்அகமது மற் றும் நிர்வாகிகள் செய்து இருந் தனர்.

No comments:

Post a Comment