திருவாரூர் மாவட்டத்தில் சிறு வாய்க்கால்கள் மற்றும் பாசனக் கால்வாய்களை தூர்வார ரூ. 76 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன்.
வலங்கைமான் ஒன்றியத்தில் அரவூர், திருவோணமங்கலம், தென்குவளவேலõ, ஆலங்குடி, மாத்தூர், மாணிக்கமங்கலம், கண்டியூர் ஆகியப் பகுதிகளில் நடைபெற்றுவரும் நீர்செறிவூட்டும் திட்டம், தாய் திட்டம், பசுமை வீடு கட்டும் திட்டம், பண்ணைக் குட்டை அமைக்கும் திட்டப் பணிகள் குறித்து புதன்கிழமை ஆய்வு மேற்கொண்ட அவர் அளித்த பேட்டி:
மாவட்டத்தில் கடந்த 2013-2014-ம் நிதியாண்டில் 20,659 பணிகள் ரூ. 272 கோடியில், 2014 - 2015-ம் நிதியாண்டில் 11,280 பணிகள் மேற்கொள்ள ரூ. 96 கோடியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் செய்ய அனுமதிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பெருக்கும் வகையில் நீர்மட்டத்தை உயர்த்த 100 நாள் வேலைத் திட்டத்தின்கீழ் மாவட்டத்திலுள்ள 430 ஊராட்சிகளில் 5,160 பண்ணைக் குட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் சிறிய, பெரிய பாசன வாய்க்கால்கள் ஊரக வளர்ச்சி முகமைத் திட்டத்தின் கீழ் தூர்வார ரூ. 76 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வலங்கைமான் பகுதியில் 2014-2015-ம் நிதியாண்டில் ரூ. 10 கோடியில் 1,286 பணிகள் செய்ய அனுமதிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார் மதிவாணன்.
ஆய்வின்போது ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட அலுவலர் உ. தமிழரசி, வலங்கைமான் வட்டார வளர்ச்சி அலுவலர் தில்லை நடராஜன் ஆகியோர் உடனிருந்தார்.

No comments:
Post a Comment