Friday, 11 July 2014

உதவித்தொகை: வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்


திருவாரூர் மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகைப் பெற விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (பொ) கு. திருஞானசம்பந்தம். வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

2009-ம் ஆண்டு ஜூன் 30-ம் தேதி அல்லது அதற்கு முன்பு பதிவு செய்து 5 ஆண்டுகள் பூர்த்தியாகி இருக்க வேண்டும். 9-ம் வகுப்பு தேர்ச்சிப் பெற்று பள்ளி இறுதி வகுப்புத் தவறியவர்களுக்கு மாதம் ரூ. 100, எஸ் எஸ்எல்சி தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு ரூ. 150, பிளஸ்-2 முடித்தவர்களுக்கு ரூ. 200, பட் டப்படிப்பு முடித்தவர்களுக்கு ரூ. 300 உதவித் தொகையாக வழங்கப்படுகிறது. தாழ்த்தப்பட்ட, பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள் 45 வயதுக்குள்ளும், இதரப் பிரிவினர் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 50,000 க்குள் இருக்க வேண்டும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு எஸ்எஸ்எல்சி படித்தவர்களுக்கு மாதம் ரூ. 300, பிளஸ்-2 முடித்தவர்களுக்கு ரூ. 375, பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு ரூ. 450 உதவித்தொகையாக 10 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.
உதவித்தொகைப் பெரும் காலத்தில் எந்தவொரு கல்வி நிறுவனத்திலும் முழுநேர மாணவராக இருக்கக் கூடாது

தொலைத்தூரக் கல்வியில் படிக்கலாம். முழுமையாக வேலையில்லாதவராக இருக்க வேண்டும். தகுதியானவர்கள் வேலைவாய்ப்பு அலுவல கத்தில் விண்ணப்பம் பெற்று அனைத்துக் கல்வி சான்றிதழ்களுடன் ஆக. 29-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

No comments:

Post a Comment