ருவாரூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை தேவை''
ஊழியர்களின் வேதனைக் குரல்
'எத்தனை கோடி செலவுகள் செய்து மருத்துவமனை கட்டினாலும், அந்த மருத்துவமனையில் மருத்துவர்கள், ஊழியர்கள் பற்றாக்குறையாக இருந்தால் நோயாளிகளுக்கு என்ன பிரயோஜனம்? மருத்துவக் கல்லூரி முதல்வர் அராஜகமாக அத்துமீறி லஞ்சம் பெறுக¤றார். இதை யாருமே கண்டுகொள்ள மாட்டார்களா?’ - திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஊழியர்களின் கூட்டமைப்பு சார்பில் இப்படியோர் அங்கலாய¢ப்பு கடிதம் ஜூ.வி அலுவலகத்துக்கு வந்தது.
திருவாரூர் மருத்துவக் கல¢லூரி மருத்துவமனைக்குச் சென்று விசாரித்தோம். அகில இந்திய ஜனநாயக மாணவர் பெருமன்றத்தின் திருவாரூர் மாவட்டச் செயலாளர் பாலசுப்பிரமணியன் நம்மிடம் விரிவாகப் பேசினார்.
''மருத்துவமனையில் டாக்டர்கள்தானே முக்கியம். அதுவே, பற்றாக்குறையாக இருந்தால், நோயாளிகளுக்கு எப்படி நோய்கள் குணமாகும்? மருத்துவமனை கண்காணிப¢பாளர், மருத்துவமனை நிலைய அதிகாரி, உதவி நிலைய அதிகாரி முதல் ஊழியர்கள் வரை பணியிடங்கள் நிறைய காலியாக இருக்கின்றன. மருத்துவர்கள் பற்றாக்குறையாக இருக்கும்போது, இருக்கிற மருத்துவர்களாவது சரியான நேரத்துக்கு வந்து நோயாளிகளைக் கவனிக்க வேண்டும். ஆனால், அப்படி செய்வது இல்லை.
போதுமான வசதிகள் இல்லாததால் எலும்பு முறிவு, சாலை விபத்துகள் ஏற்பட்டால் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத¢துவமனைக்குப் பரிந்துரை செய்கிறார்கள். மருத்துவமனை தொடங்கி நான்கு ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றன. பக்கத்தில் உள்ள மருத்துவமனைக்குப் பரிந்துரை செய்யும் அளவுக்கு, இன்னும் பின்தங்கிய மருத்துவமனையாகவே இருக்கிறது. மருத்துவர்கள் பக்கத்திலேயே இருக்க வேண்டிய எமர்ஜென்சி வார்டுகளில், ஒருமுறை மட்டுமே விசிட் அடித்துவிட்டுச் செல்கிறார்கள். அட்மிஷன் போட வேண்டிய நோயாளியாக இருந்தால், 'வார்டை போய் பாருங்கள். ப¤டித்திருந்தால் அட்மிஷன் போட்டுக்கொள்ளுங்கள்’ என்று தட்டிக்கழித்து விடுகிறார்கள்.
ஆபரேஷன் செய்வதற்கு உடனடி ரத்தம் தேவைப்பட்டால், வெள¤யில் இருந்துதான் வாங்கிக்கொடுக்க வேண்டும். இல்லையென்றால், எவ்வளவு சீரியஸான அறுவைசிகிச்சையாக இருந்தாலும் செய்வது இல்லை. மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் வசதி இல்லை. 108 மற்றும் அறக்கட்டளை ஆம்புலன¢ஸ்கள்தான் பயன்படுத்தப்படுகின¢றன. நிறைய ஊசி மற்றும் மருந்துகளை மருத்துவமனை உள்ளே இருக்கும் பிரைவேட் மெடிக்கல் ஷாப்பில் வாங்கிவரச் சொல்கிறார்கள்.
அமைச்சர்கள், ஆட்சியர் விசிட் வரும்போது மட்டும், ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருந்து மருத்துவர்களை அழைத்து வந்து டாக்டர்கள் இருப்பதாக கணக்கு காட்டிவிடுகிறார்கள். சுகாதாரமான குடிநீர் வசதி கிடையாது. மருத்துவமனையில் கொடுக்கப்படும் சாப்பாட்டை நோயாளிகள் யாரும் சாப்பிடுவது இல்லை. வெளியில் இருந்தும், வீட்டில் இருந்தும் எடுத்து வந்துதான் சாப்பிடுகிறார்கள். போதுமான கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இப்போதுதான் கட்டமைப்பு வசதி அவசர அவசரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அதைக் காரணமாக வைத்து இப்போதுதான் மாணவர் சேர்க்கைக்கான அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது'' என்றார்.
''மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் சின்னப்பன் அராஜக நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார். மருத்துவமனை சம்பந்தப்பட்ட எல்லாவற்றிலும் கமிஷன் வாங்குகிறார். எதற்கு இவ்வளவு பணம் என¢று கேட்டால், நீங்கள் கொடுக்கிற பணத்தை கீழிருந்து மேல்மட்டம் வரை கொடுக்க வேண்டும் என்கிறார்'' - இப்படியோர் அதிர்ச்சி தகவலும் அந்தக் கடிதத்தில் பதிவாகி இருந்தது.
மருத்துவக் கல்லூரி முதல்வர் சின்னப்பனைச் சந்தித்துப் பேசினோம். ''ஹாஸ்டல் வசதி மாணவர்களுக்குப் போதுமானதாக இல்லை என்று சொல்லி மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி அளிக்கவில்லை. இப்போது கட்டமைப்பு வசதியை ஏற்படுத்திவிட்டதால், மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கிவிட்டார்கள். நான் நேர்மையாகத்தான் இருக்கிறேன். நேர்மையாகத்தான் செயல்படுகிறேன். மருத்துவமனை ஊழியர்களிடம் கண்டிப்பு காட்டுவேன¢. என்மீது சுமத்தப்படுகிற அனைத்து குற்றச்சாட்டுகளும் என் மேல் உள்ள காழ்ப்பு உணர்ச்சியால் சொல்லப்படுவது. இங்கு உள்ளவர்கள் யாரோ ஏதேதோ எழுதி அனுப்பியிருக்கிறார்கள். அதெல்லாம் பொய்யான தகவல்'' என்று மறுத்தார்.
மருத்துவ சேவை என¢பது புனிதமானது. அந்தப் புனிதமான சேவையில் லஞ்சம் புரையோடினால் மனித சமுதாயம் சீரழியும் என¢பதை உணர்ந்து செயல்பட வேண்டும்!
- ஏ.ராம்
படங்கள்: கே.குணசீலன்
|
Please wait while we process your request ...