Tuesday 22 July 2014

நல்ல சமுதாயத்தை உருவாக்குவது மாணவர்களின் கடமை

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


நல்ல சமுதாயத்தை உரு வாக்குவது மாணவர் களின் கடமை என்று அமைச்சர் காமராஜ் கூறினார்.

விலையில்லா மடிக்கணினி-சைக்கிள்

திருவாரூரை அடுத்த புலி வலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கொடிக்கால் பாளையம்  பள்ளி உள்ளபட 10 மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள், விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு திருவாரூர் உதவி கலெக்டர் பரம சிவம் தலைமை தாங்கினார். கோபால் எம்.பி., மாவட்ட ஊராட்சி தலைவர் ஜெயலட் சுமிஅம்பிகாபதி, திருவாரூர் ஒன்றியக்குழு தலைவர் மலர் மணிகண்டன், நகரசபை தலைவர் ரவிச்சந்திரன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். விழாவில் உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி களையும், விலையில்லா சைக் கிள்களையும் வழங்கி பேசி னார். அப்போது அவர் கூறிய தாவது:-

மாணவர்களின் கடமை

மாணவர்கள் தங்கள் அறி வுத்திறனை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் தமிழக முதல்- அமைச்சர் ஜெயலலிதா மடிக் கணினி வழங்கி வருகி றார். இதை மாணவர்கள் முழு மையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். திரு வாரூர் மாவட்டத்தின் வளர்ச் சியில் மாண வர்களுக்கு முக் கிய பங்கு உள்ளது. எனவே மாணவர்கள் நன்றாக படிக்க வேண்டும். மடிக்கணினி மூலமாக நல்ல விஷயங்களை கற்று, நல்ல சமுதாயத்தை உரு வாக்க பாடுபட வேண்டும். நல்ல சமுதாயத்தை உருவாக் குவது மாணவர்களின் கடமை. மாணவர்கள் தொடர்ந்து முயற்சி செய்தால் லட்சியத்தை அடையலாம். வாழ்க்கையில் வெற்றி அடைய கல்வி மிகப் பெரிய அடித்தளம். அதை சரி யாகப் பயன்படுத்தி கொள்ள வேண்டும். பெற்றோரின் கன வுகளை மாணவர்கள் நினை வாக்க வேண்டும்.

புரட்சி

தமிழக அரசின் 3 ஆண்டு கால ஆட்சியில் திருவாரூர் மாவட்டத்துக்கு ரூ.52 கோடியே 64 லட்சத்து 58 ஆயிரத்து 504 மதிப்பில் 31 ஆயிரத்து 988 மடிக்கணினிகள் மாணவர்களுக்கு வழங்கப்பட் டுள்ளன. இதேபோல் ரூ.15 கோடியே 30 லட்சத்து 10 ஆயிரத்து 728 மதிப்பில் 40 ஆயிரத்து 716 சைக்கிள்களும் வழங்கப்பட்டுள்ளன. தமிழக அரசு கல்வியில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தி உள்ளது. மாணவர்களுக்கு காலணி முதல் கணினி வரை வழங்கி வருகிறது. இந்தியாவே பாராட் டுகின்ற வகையில் தமிழகத்தில் திட்டங்கள் செயல்படுத் தப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் கூட்டுறவு சங்க தலைவர்கள் மணிகண்டன், முருகானந்தம், ஒன்றியக்குழு துணைத்தலைவர் சிவசுப்பிர மணியன், ஊராட்சி மன்ற தலைவர்கள் செந்தில்வேல், கலாராணி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கிருஷ்ண மூர்த்தி, வனிதாஜோதிபாசு, ராஜா, கண்ணன், அ.தி.மு.க. முன்னாள் மாவட்ட பிரதிநிதி வைப்பூர்தன்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக முதன்மை கல்வி அலுவலர் நிர்மலா வரவேற் றார்.

முடிவில் பள்ளி தலைமை ஆசிரியர் ராஜன் நன்றி கூறி னார்.

No comments:

Post a Comment