திருவாரூர் அரசு கல்லூரியில் காலியாக உள்ள இள நிலை பட்டப்படிப்புகளு க்கு பி.சி மற்றும் எம்.பி.சி மற்றும் சிறுபான்மையின மாணவர்கள் வரும் 12ம்தே திக்குள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கல்லூரி முதல்வர் விஸ்வலிங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :
திருவாரூர் அருகே கிடாரங்கொண்டானில் இயங்கி வரும் திரு.வி.க அரசு கலைக் கல்லூரியில் கடந்த மாதம் பி.ஏ, பி.எஸ்.சி, பி.காம், பி.பி.ஏ ஆகிய இளநிலை பட்டபடிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு நடைபெற்றது. இதில் இதுவரை நிரப்பப்படாமல் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை யின மாணவ, மாணவிகளுக்கான காலி இடங்க ளுக்கு வரும் 14ந்தேதி மீண்டும் கலந்தாய்வு நடைபெறுகிறது.
இந்த இடங்களுக்கு ஏற்கனவே விண்ணப்பித்து கலந்தாய்வில் கலந்து கொள்ளாதவர்கள் மற்றும் இடம் கிடைக்காதவர்கள், கடந்தமுறை விண்ணபிக்க தவறியவர்கள், துணை தேர்வுகள் எழுதி தற்போது தேர்ச்சி பெற்றவர்கள் ஆகியோர் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வரும் 12ந்தேதி கடைசி. மேலும் திரு.வி.க. கல்லூரியில் எம்.ஏ, எம்.எஸ்.சி, எம்.காம் ஆகிய முதுநிலை பாட பிரிவுகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
எம்.பில் பாடப்பிரிவுகளில் சேர விரும்பு வர் கள் விண்ணப்ப படிவத்தை திருச்சி பாரதிதாசன் பல்கலைகழகத்தில் பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு கல்லூரி முதல்வர் விஸ்வலிங்கம் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment