திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்துக்கு குடியரசுத் தலைவர் வரவுள்ளதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். காளிராஜ் மகேஷ்குமார் தலைமையில் சனிக்கிழமை பாதுகாப்புக் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
2009 செப் 30-ம் தேதி திருவாரூரில் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட து. மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தாற்காலிக கட்டடத்தில் அப்போதைய தமிழக முதல்வர் திமுக தலைவர் மு. கருணாநிதி தலைமையில் நடைபெற்ற விழாவில் பல்கலைக்கழ கத்தை அப்போதைய மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்த கபில்சிபல் திறந்து வைத்தார்.
பல்கலைக்கழகம் திருவாரூர் - மயிலாடுதுறை சாலையில் நாகக்குடி, நீலக்குடி கிராமத்தில் ரூ. 1,000 கோடியில் மத்தியப் பல்கலைக்கழகம் அமைக்கப்படுமென்று அப்போது அறிவிக்கப்பட்டது. அதன்படி 12-வது ஐந்தாண்டு திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்து நீலக்குடி கிராமத்தில் 412 ஏக்கர் பரப்பில் நூலகம், இணையதளவசதி, மாணவர், மாணவிகளுக்கென தனித் தனி விடுதிகள், ஆய்வகம், பன்நோக்கு வளாகம், ஏடிஎம் வசதியுடன் வங்கி உள்ளிட்ட பல்கலைக்கழக வளாகமும், நாகக்குடியில் 104 ஏக்கர் பரப்பில் பல்கலைக் கழக ஊழியர்கள் குடியிருப்பு வளாகம் கட்டப்பட்டு வருகிறது.
கட்டடப் பணிகள் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் மாணவர்கள் விடுதி, குடியிருப்புகள், ஆய்வகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கான புதியக் கட்டடத்தை திறந்து வைக்க இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப்முகர்ஜி ஜூலை 19-ம் தேதி மத்தியப் பல்க லைக்கழகத்துக்கு ஹெலிகாப்டரில் வருகிறார்.இதற்கான பல்கலைக்கழக வளாகத்தில் ஹெலிகாப்டர் இறங்கு தளம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நிகழ்ச்சி அரங்கம், குடியரசுத் தலைவர் வரும் வழிகள் தார் சாலை மூலம் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் பல்கலைக்கழகம் முழுவதும் காவல்துறையின் கட்டுப்பாட்டில் வந்து கொண்டிருக்கிறது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். காளிராஜ் மகேஷ்குமார் தலைமையில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பல்கலைக்கழக வளாகத்தை சல்லடையாக ஆய்வு செய்தனர். பல்கலைக்கழக வளாகத்துக்குள் எங்கெங்கு என்னென்ன அலுவலகங்கள் உள்ளது, அதில் தங்கியிருப்பவர்களின் விவரம் சேகரிக்கப்பட்டன.பல்கலைக்கழக வளாகம் மேடும் பள்ளமாக சில இடங்களில் முள்மரங்கள் முளைத்து இருப் பதால் அனைத்து இடங்களில் தீவிரமாக சோதனை செய்யப்பட்டது. சுமார் 520 ஏக்கரில் அ மைந்துள்ள பல்கலைக்கழக வளாகத்தில் 100 பேர் கொண்ட காவல்துறையினர் பல்வேறு குழுக்களாக சென்று ஆய்வு செய்தனர்.
குடியரசுத் தலைவரின் வருகைக்கு சில நாள்களுக்கு முன்பு பல்கலைக்கழக வளாகம் முழு வதுமாக காவல்துறையின் கட்டுப்பாட்டில் வரவுள்ளது. காவல்துறையினர் பல்கலைக்கழக வளாகத்தில் தங்கியிருந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கண்காணித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment