Monday 14 July 2014

திருவாரூர் மாவட்டத்தில் வாய்க்கால் தூர்வாரும் பணிகள்

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
திருவாரூர் மாவட்டத்தில் ரூ.1¾ கோடியில் வாய்க்கால் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருவதாக கலெக்டர் மதிவாணன் கூறினார்.

தூர்வாரும் பணிகள்

திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உள்ள ஆறு, வாய்க்கால்களை தூர் வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கொரடாச்சேரி ஒன்றியம் ஊர்குடி 18 தலைப்பு வாய்க்கால் பகுதியில் ரூ. 6 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் பணிகள் நடைபெற்று முடிந் துள்ளன. இதேபோல் வலங் கைமான் ஒன்றியம் நரிக்குடி கிராமத்தில் மாணிக்கமங்கலம் வாய்க்கால் ரூ. 6 லட்சத்திலும், நீடாமங்கலம் ஒன்றியம் ரிஷி யூர் வாய்க்கால் ரூ. 2 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலும், நார ணமங்கலம் வாய்க்கால் ரூ. 2 லட்சம் மதிப்பிலும், மன்னார் குடி ஒன்றியம் அகமலனார் வாய்க்கால் ரூ. 8 லட்சம் மதிப் பிலும், மேலப்பாலம் உள்ளூர் வாய்க்கால் ரூ. 3 லட்சம் மதிப் பிலும், செருமங்கலம் கிராமத் தில் கட்டாதி வாய்க்கால் ரூ. 5 லட்சம் மதிப்பிலும் தூர் வாரப்பட்டுள்ளன. தூர்வாரப் பட்டுள்ள வாய்க்கால்களை நேற்று கலெக்டர் மதிவாணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கலெக்டர் பேட்டி

ஆய்வின்போது பணிகள் முழுமையாக நடைபெற்றுள் ளதா? என்பது பற்றி அவர் அதிகாரிகளிடம் கேட்டறிந் தார். ஆய்வை தொடர்ந்து கலெக்டர் மதிவாணன் நிருபர் களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறிய தாவது:-

திருவாரூர் மாவட்டத்தில் வெண்ணாறு, காவிரி வடி நிலக்கோட்டத்துக்கு உட்டப் பட்ட 27 கிளை ஆறு வாய்க் கால் மூலமாக தண்ணீர்ப் பாசனம் நடைபெற்று வரு கிறது. இதன் மூலம் 3 லட்சத்து 76 ஆயிரம் எக்டேர் விளை நிலம் நீர்ப்பாசனம் பெறுகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டுக் கான தூர்வாரும் பணிகள் ரூ. 1 கோடியே 86 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் நடை பெற் றது. மொத்தம் 179 கிலோ மீட் டர் தூரத்துக்கு தூர்வாரும் பணி நடைபெற்றது.

முழுமையாக...

தேர்வு செய்யப்பட்ட 40 தூர்வாரும் பணிகளில் 27 பணிகள் முழுமையாக முடி வடைந்துள்ளன. வாய்க்காலில் அடைப்பு பலகைகள் 22 இடங்களில் அமைக்கப்பட்டு வருகின்றன. கரை பலப்படுத் தும் பணி 18 இடங்களில் நடை பெற்று வருகிறது. பணிகள் அனைத்தும் நிறைவு பெறும் நிலையில் உள்ளன. தூர்வாரும் பணிகள் முழுமையாக நிறை வேற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

ஆய்வின்போது வெண்ணாறு வடிநிலக் கோட்ட செயற்பொறியாளர் கள் குணசேகரன், ரவிச் சந்திரன், உதவி செயற் பொறியாளர்கள் மாரி முத்து, மணிமோகன், குண சேகரன், சுப்பையன், பொறியாளர்கள் முருகேசன், ராஜேந்திரன், தியாகேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment