Wednesday, 16 July 2014

சிறுபான்மையின மாணவ, மாணவிகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்



சிறுபான்மையின மாணவ, மாணவிகள் உதவித்தொகை பெற விண்ணப் பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்ட பிற் படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அதிகாரி மாலா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:-

கல்வி உதவித்தொகை

தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 11-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ., பாலிடெக்னிக், பட்டயப் படிப்புகள், இளங்கலை, முது கலை பட்டப்படிப்புகள், எம். பில் மற்றும் ஆராய்ச்சி படிப்பு படிக்கும் கிறிஸ்தவர், இஸ்லாமி யர், சீக்கியர், புத்தமதத்தினர், பார்சி மற்றும் ஜெயின் மதத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு மேற்படிப்பு கல்வி உதவித்தொகை 2014- 2015-ம் கல்வி ஆண்டுக்கு வழங்கப்படுகிறது. கல்வி உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கும் மாணவ, மாணவிகள் கடந்த ஆண்டு நடந்த தேர்வில் குறைந்த பட் சம் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருத்தல் வேண்டும்.மாணவ, மாணவிகளின் பெற் றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட் சத்துக்கு அதிகம் ஆகாமல் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கலாம்

கல்வி உதவித்தொகை பெறு வதற்கான விண்ணப்பத்துடன் மதிப்பெண் சான்றிதழ், சாதி, மற்றும் வருமான சான்றிதழ் ஆகியவற்றின் நகல், கல்விக் கட்டணம் செலுத்திய ரசீது, இருப்பிட முகவரி, வங்கி கணக்கு எண்ஆகிய விவரங் களை இணைத்து கல்வி நிலை யங்களில் வருகிற செப்டம்பர் மாதம் 25-ந் தேதிக்குள் விண் ணப்பிக்க வேண்டும். ஏற் கனவே விண்ணப்பித்தவர்கள் புதுப்பித்தலுக்கான விண்ணப் பத்தை அக்டோபர் மாதம் 20-ந் தேதிக்குள் கல்வி நிலை யங்களில் சமர்ப்பிக்க வேண் டும்.

வங்கி கணக்கு எண் அவசியம்

கல்வி உதவித்தொகை மாணவ, மாணவிகளின் வங்கி கணக்குகளில் செலுத்தப்படும் என்பதால், வங்கி கணக்கு எண் மற்றும் வங்கி குறியீடு எண் ஆகியவற்றுக்கான விவ ரங்களை விண்ணப்பத்துடன் இணைப்பது அவசியம் ஆகும். கல்வி நிலையங்கள் மாணவர் களின் விண்ணப்பங்களை பரி சீலித்து தகுதி பெற்ற விண் ணப்பங்களை அக்டோபர் மாதம் 5-ந் தேதிக்குள் திருவா ரூர் மாவட்ட கலெக்டர் அலு வலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலு வலரிடம் சமர்பிக்க வேண்டும். புதுப்பித்தலுக்கான விண் ணப்பங்களை அக்டோபர் 31-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment