Sunday, 20 July 2014

திருவாரூர் மருத்துவக்கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி

திருவாரூர் மருத்துவக்கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கல்லூரி முதல்வர் சின்னப்பன் கூறினார்.
 
அனுமதி மறுப்பு

திருவாரூரில் அரசு மருத்துவக்கல்லூ மருத்துவமனை கடந்த 2007–ம் ஆண்டு தொடங்கபட்டது. கடந்த 2010–ம் ஆண்டு மத்திய அரசின் அனுமதியின்பேரில் மருத்துவக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது. கடந்த 3 ஆண்டுகளாக மருத்துவப்படிப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்திய மருத்துவக்கழகம், திருவாரூர் மருத்துவக்கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி மறுத்தது. இதனால் இந்த கல்வி ஆண்டில் 100 இடங்கள் கொண்ட திருவாரூர் மருத்துவக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெறாமல் இருந்தது.
 
அனுமதி

இந்த நிலையில் மத்திய அரசு திருவாரூர் மருத்துவக்கல்லூரிக்கு மாணவர் சேர்க்கைக்கான அனுமதியை மீண்டும் வழங்கி உள்ளது. இதுகுறித்து திருவாரூர் மருத்துவக்கல்லூரி முதல்வர் சின்னப்பன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
திருவாரூர் மருத்துவக்கல்லூரியில் இந்த கல்வி ஆண்டு மருத்துவப்படிப்புக்கு 100 மாணவர்களை சேர்த்துக் கொள்ள அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதன்பேரில் மாநில ஒதுக்கீட்டின்படி 85 மாணவர்களுக்கும், இந்திய அளவில் 15 மாணவர்களுக்கும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

 

No comments:

Post a Comment