Thursday, 3 July 2014

திருவாரூரில் மாவட்ட தொழில் மைய அலுவலகம்

மாவட்ட தொழில் மையம் புதிய அலுவலகம்
இடம் :மாவட்ட ஆட்சியர் பெரு திட்ட வளாகம் 



திருவாரூர் மாவட்ட தொழில் மையத்தை முதல்வர் ஜெ ஜெயலலிதா அவர்கள் திறந்து வைத்தார்கள் .


தொழில் மையம் கட்டும் பணி

திருவாரூர் மாவட்ட கலெக் டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் மாவட்ட தொழில் மைய அலுவலகத் துக்கு புதிய கட்டிடம் கட்டப் பட்டுள்ளது. திருவாரூர் மாவட்ட கலெக்டர் மதிவா ணன் பார்வையிட்டு, பணிகள் அனைத்தும் தரமாக உள்ளதா? என்பது பற்றி ஆய்வு செய் தார். இதையடுத்து நிருபர்களிடம் கலெக்டர் கூறியதாவது:-

2 தளங்களுடன்...

திருவாரூர் மாவட்ட தொழில் மையத்துக்கு ரூ.1½ கோடி மதிப்பீட்டில் புதிய அலுவலகம் கட்டப்பட் டுள் ளது. இதன் முதல் தளத்தில் சிறு-குறு தொழில் முனை வோர்கள் தொழில் மேம் பாட்டு திறன் வளர்ப்பு பயிற்சி பெற வீடியோ படக்காட்சி வசதியுடன் கூடிய கருத்தரங்க கூடம், வரவேற்பு அறை, அலுவலக அறை, சிறு-குறு தொழில் முனைவோர்கள் தங் களுடைய தயாரிப்பு பொருட் களை காட்சிப்படுத்துவதற் கான காட்சிக்கூடம் ஆகிய வற்றை அமைப்பதற்கான பணிகள் நடைபெறுகின் றன.

சாய்வு தள நடைபாதை

முதல் தளத்தில் மாவட்ட தொழில் மைய பொதுமேலா ளர் மற்றும் அலுவலர்களுக் கான அறைகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளி கள் அலுவலகத்துக்கு வந்து செல்ல வசதியாக சாய்வுதள நடைபாதையும், கழிவறை வசதிகளும் அமைக்கப்பட் டுள்ளன.

இவ்வாறு கலெக்டர் கூறி னார்.

ஆய்வின்போது மாவட்ட வருவாய் அதிகாரி மணிமாறன், பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் ரெத்தினவேல், உதவி பொறியாளர் சுப்பிர மணியன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சண்முகராஜன், பொறியாளர் ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment