Tuesday, 30 September 2014
முள் முதரிலிருந்து பச்சிளம் குழந்தை மீட்பு
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் முள்புதரில் ஆதர வற்றுக் கிடந்த பச்சிளம் குழந்தை செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகி ச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாவட்ட விளையாட்டு மைதானம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் செயல் பட்டு வருகிறது. விளையாட்டு மைதானம் அருகில் நீச்சல் குளம் உள்ளது. செவ்வாய்க்கிழ மை அதிகாலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். காளிராஜ் மகேஷ்குமாரின் கார் ஓட்டுநர் நெடுஞ்செழியன் அப்பகுதியில் அதிகாலை 5.30 மணியளவில் நடைப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது, நீச்சல் குளம் அருகில் புது தேங்காய்ப்பூத்துண்டில் பச்சிளம் குழந்தையின் அழுகுர ல் கேட்டுள்ளது. இதையடுத்து நெடுஞ்செழியன் புதர் பகுதியில் சென்று பார்த்த போது பிறந் து சில நாள்களே ஆன ஆண்குழந்தை என்பது தெரியவந்துள்ளது.குழந்தையை மீட்டுக் கொண்டு வரும் போது, அவ்வழியில் சென்றவர்கள் குழந்தையை த ங்களிடம் கொடுங்கள் நாங்கள் வளர்த்துக்கொள்கிறோம் என்று கேட்டுள்ளனர். அதற்கு குழ ந்தையை அப்படி கொடுக்க முடியாது, முறைப்படி தான் குழந்தையை தத்துக்கொடுக்க முடி யும் என்று கூறிவிட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு தகவல் கொடு த்துள்ளார். இதையடுத்து காவல்துறை சார்பில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தக வல் கொடுக்கப்பட்டுள்ளது.
அச்சமயத்தில் நீச்சல் குளத்தில், நீச்சல் பயிற்சிக்காக வந்த மாவட்ட ஆட்சியர் எம். மதிவா ணனிடம் குழந்தையை வளர்த்துக்கொள்கிறேன் என கேட்டவர்களில் ஒருவர் ஆதரவற்றுக் கிடந்த குழந்தையின் விவரத்தை தெரிவித்து குழந்தையை தத்துக்கொடுக்குமாறு கேட்டுள் ளார்.
தகவலையறிந்த ஆட்சியர் விரைந்து குழந்தை இருக்கும் இடத்துக்கு குழந்தையை தனது கா ரில் வைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகள் நலப்பிரிவு மைய த்தில் சேர்த்து, குழந்தை ஆரோக்கியமாக தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமா று மருத்துவர்களிடம் தெரிவித்த பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
மாவட்ட விளையாட்டு மைதானம் அருகில் மீட்கப்பட்ட ஆண் குழந்தை ஆதவற்ற நிலைய ல் கிடந்தது என்ற தகவலையறிந்ததும் அதிர்ச்சியடைந்தேன். உடனே அக்குழந்தை திருவா ரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை குழந்தைகள் நலப்பிரிவில் சேர்க்கப்பட்டு குழ ந்தைக்கு முதலுதவி பரிசோதனை சிகிச்சை அளிக்க மருத்துவருக்கு அறிவுறுத்தினேன்.மருத்துவ அறிக்கை வந்ததும் ஆதரவற்ற குழந்தை என்பதால் உரிய விசாரணை மேற்கொ ண்டு, பிறகு சமூக நலத்துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் தொட்டில் குழந்தைத் திட்ட த்தில் சேர்க்கவும், அரசு அங்கீகாரம் பெற்ற திண்டுக்கல் காந்தி கிராமத்தில் உள்ள கஸ்தூரி பாய் குழந்தைகள் நல மையத்தில் விதிமுறைகளை பின்பற்றி சேர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ள து என்றார் மதிவாணன்.
நிகழ்வின் போது, மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் கண்ணபிரான், செய்தி மக்கள் தொடா்பு அலுவலர் ரா. நல்லதம்பி, வருவாய் ஆய்வாளா் இளங்கோ ஆகியோர் உடனிருந்தனர்.
https://www.youtube.com/watch?v=bYFq9LfJ-Uc&list=UUhcR8SrIiSON4KxmtpwfMgw
Monday, 29 September 2014
தமிழக முதல்வராக ஓ . பன்னீர்செல்வம் தேர்வு
இரண்டாவது முறை:
அ.தி.மு.க., வின் பொருளாளரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் 1951ம் ஆண்டு ஜன., 14ம் தேதி தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பிறந்தார்.1996ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில் பெரியகுளம் நகராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2001 சட்டசபை தேர்தலில் பெரியகுளம் தொகுதியில் இருந்து, முதன்முறையாக எம்.எல்.ஏ., வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மே 19ம் தேதி, ஜெயலலிதா தலைமையிலானஅமைச்சரவையில் வருவாய் துறை அமைச்சராக பதவியேற்றார். பின் முதல்வராக இருந்த ஜெயலலிதா, சுப்ரீம் கோர்ட் தீர்ப்புப்படி பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.இதையடுத்து செப்., 21ம் தேதி முதல்வராக பதவியேற்றார். 2002 மார்ச் 1ம் தேதி வரை பதவியில் இருந்தார்.
பின் முதல்வராக மீண்டும் ஜெயலலிதா பதவியேற்றவுடன் இவர் பொதுப்பணித்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார். பின் 2006 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., ஆட்சியை இழந்தது. இத்தேர்தலில் பெரியகுளம் தொகுதியில் இருந்து மீண்டும் எம்.எல்.ஏ., வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவராகவும் பதவிவகித்தார். 2011 சட்டசபை தேர்தலில் போடி தொகுதியில் இருந்து 3வது முறையாக எம்.எல்.ஏ., வாக தேர்ந்தெடுக்கப்ட்டார்.
இம்முறை நிதி அமைச்சராக பொறுப்பேற்றார். மேலும் அ.தி.மு.க., வின் பொருளாளராகவும் இருக்கிறார்.
28.9.14 அன்று தமிழக முதல்வராக தேர்வு செய்யப்பட்டார் .
Sunday, 28 September 2014
ஜெயலலிதா கைது : திருவாரூரில் கடைகள் அடைப்பு
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிற்கு தண்டனை வழங்கப்பட்டதையொட்டி திருவாரூர் நகரில் உள்ள பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டன. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். சினிமா தியேட்டர்களில் மாலை, இரவு நேரக்காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. அரசு டாஸ்மாக் கடைகளும் முழுமையாக மூடப்பட்டிருந்தன. அனைத்து இடங்களிலும் தொடர் சாலை மறியல் போராட்டம் நடைபெற்று வந்ததால் பல பகுதிகளுக்கு முற்றிலும் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. திருவாரூரை அடுத்த கமலாபுரம் பாலத்தில் தொடர் சாலை மறியல் போராட்டம் நடந்தது. அதுசமயம் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உருவபொம்மையை, அ.தி.மு.க.வினர் எரித்தனர். திருவாரூர்–மன்னார்குடி சாலையில் மரங்களால் தடுப்பு அமைத்திருந்தனர். இதனால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.
Saturday, 27 September 2014
தொடக்கப் பள்ளியில் சேரும்போதே ஐ.ஏ.எஸ். தேர்வுக்காக படிக்கிறேன் என்ற எண்ணம் வர வேண்டும்
தொடக்கப் பள்ளியில் முதல் வகுப்பில் சேரும்போதே, நான் ஐ.ஏ.எஸ். தேர்வுக்காக படிக்கிறேன் என்ற எண்ணம் வேண்டும். இதனை ஆசிரியர்கள் ஊக்குவிக்க வேண்டும் என்று தமிழக காவல் தலைவர் கே.சொக்கலிங்கம் கூறினார்.
கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. துறை சார்பில் ஐ.ஏ.எஸ். உள்ளிட்ட சிவல் துறைத் தேர்வுகளுக்கான பயிற்சி கருத்தரங்கு நடைபெற்றது. பயிற்சியை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து காவல் துறைத் தலைவர் சொக்கலிங்கம் பேசுகையில் கூறியதாவது: முதலாம் வகுப்பில் பள்ளியில் சேரும்போதே ஐ.ஏ.எஸ். தேர்வுக்காக படிக்கிறேன் என்ற எண்ணம் குழந்தைகளிடம் வர வேண்டும். இதனை ஆசிரியர்கள் ஊக்குவிக்க வேண்டும். பல்கலைக்கழகங்கள் இதுபோன்ற பயிற்சிகளை தொடக்கப் பள்ளியில் 1-முதல் 5 வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு வழங்கி ஊக்குவிக்க வேண்டும். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., போன்று 26 உயர் பதவிகள் நாட்டுக்காகவும், மக்களுக்காகவும், உற்றார் உறவினர் போற்றும் வகையில் உள்ளன. ஆனால் அனைத்திற்கும் ஒரே தேர்வு முறைதான். அதில் பெறும் மதிப்பெண் தகுதிகளைப் பொறுத்து அந்ததந்தப் பதவிகள் கிடைக்கும்.
மாணவர்கள் சி.பி.எஸ்.இ., மற்றும் என்.சி.ஆர்.டி. பாடதிட்டத்தின் கீழ் படித்தால்தான் ஐ.ஏ.எஸ். தேர்வில் நுழைவது எளிது. மாணவர்களிடம் நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற ஐந்து சக்திகளும் உள்ளன. அதனை வெளிக்கொணர்ந்தால் திறமைகள் வெளிப்படும். இதற்கு தடங்கல், இடையூறு, சோதனை, வேதனைகள் வரும். அதையும் தாண்டி வெளிக்கொணர்ந்து மற்றவர்களுக்கும், உற்றார்க்கும் வழிகாட்டியாக இருக்க முடியும் என்று உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். இவர்கள்தான் எதிர்காலச் சிற்பிகள். மாணவர் சக்திதான் மகத்தான சக்தி. ஐ.ஏ.எஸ். போன்ற உயர் பதவியால் தாய் பெறும் மகிழ்ச்சி, உற்றார் பெறும் மகிழ்ச்சி எல்லையற்றது. கருமமே கண்ணாயினார் என்று ஒரே குறிக்கோளுடன் இருந்தால்தான் வெற்றியடைய முடியும் என்றார் அவர்.

Thursday, 25 September 2014
மங்கள்யான் அனுப்பியது புகைப்படங்கள்: இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி
பெங்களூரு:மங்கள்யான் எடுத்து அனுப்பிய புகைப்படங்களை, பெங்களூருவில் உள்ள இஸ்ரோ
கட்டுப்பாட்டு அறை பெற்றது. புகைப்படங்கள் தௌிவாக உள்ளதால், விஞ்ஞானிகள்
மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கடந்த 2013 நவ.,5ல், பி.எஸ்.எல்.வி., சி25 ராக்கெட்டில் வைத்து ஏவப்பட்ட மங்கள்யான் - செயற்கைக்கோள் நேற்று வெற்றிகரமாக செவ்வாய் கிரக சுற்றுவட்டப்பாதையை அடைந்தது. இது இந்தியா செவ்வாய்க்கு அனுப்பிய முதல் செயற்கைக்கோள். முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்ற உலகின் முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.
செவ்வாய் கோள் ஆராய்ச்சிக்காக விண்ணில் வெற்றி்கரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ள மங்கள்யான் செயற்கைக்கோள், செவ்வாயின் மேற்பரப்பை காட்டும் வகையிலான 5 போட்டோக்களை, இஸ்ரோ கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பியுள்ளது. இந்த படங்கள் தௌிவாக உள்ளதால் விஞ்ஞானிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மங்கள்யானின் படங்களை இஸ்ரோ பேஸ்புக் மூலம் வௌியிட்டுள்ளது.
மோடி பார்வையிட்டார்:
மங்கள்யான் வெற்றிகரமாக எடுத்து இஸ்ரோவிற்கு அனுப்பியுள்ள செவ்வாய் கோள் புகைப்படங்களை, இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன், அறிவியல் செயலாளர் கோட்டீஸவர ராவ் தலைமையிலான விஞ்ஞானிகள் குழுவினர், பிரதமர் மோடியிடம் வழங்கினர். அவற்றை பார்வையிட்ட பிரதமர் மோடி, விஞ்ஞானிகளை பாராட்டினார்.

வண்ணப் புகைப்படங்கள்:

Wednesday, 24 September 2014
புதிய மின் கட்டணத்தால் ஏழை மக்களுக்கு பாதிப்பு வராது: முதல்வர் ஜெயலலிதா உறுதி
முதல்வர் ஜெயலலிதா | கோப்புப் படம்
மின் நுகர்வோர்களுக்கான கட்டணத்தை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் எப்படி நிர்ணயித்தாலும், அதன் காரணமாக, ஏழை, எளிய மக்கள் எந்த விதத்திலும் பாதிப்படையாத வகையில், அதற்குத் தேவைப்படும் கூடுதல் மானியத்தை அரசு வழங்கும் என்று முதல்வர் ஜெயலலிதா உறுதியளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில், "மின்சாரம் என்றாலே வாழ்வாதாரம் என்று சொல்லும் அளவுக்கு, ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியுடன் மின் உற்பத்தியின் வளர்ச்சி பின்னிப் பிணைந்துள்ளது என்பதை கருத்தில் கொண்ட எனது தலைமையிலான அரசு, 2011-ல் ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து, கடந்த மூன்று ஆண்டு காலமாக மின் உற்பத்தியைப் பெருக்கவும், சீர்குலைந்து கிடந்த தமிழ்நாடு மின்சார வாரியத்தை சீர்திருத்தவும் தேவையான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வந்து கொண்டிருக்கிறது.
இதன் காரணமாக, முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட மின்தடை முழுமையாக ரத்து செய்யப்பட்டதோடு, கடந்த ஜூன் மாதம் 1-ம் தேதி முதல் சீரான மின்சாரம் தங்கு தடையின்றி தமிழக மக்களுக்கு கிடைத்து வருகிறது.
மின் உற்பத்தி என்று எடுத்துக் கொண்டால், கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 2,793 மெகாவாட் மின் நிறுவு திறன் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், நடுத்தரக் கால அடிப்படையில், 500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
இதுவன்றி, கூடங்குளம் அணு மின் நிலையத்தின் முதல் அலகிலிருந்து தற்போது 562 மெகாவாட் மின்சாரமும்; நீண்டகால கொள்முதல் ஒப்பந்தங்கள் மூலம் 224 மெகாவாட் மின்சாரமும் தமிழ்நாட்டிற்கு கிடைக்கின்றது.
மொத்தத்தில், 4,079 மெகாவாட் மின்சாரம் தமிழகத்திற்கு கூடுதலாக கிடைத்து வருகிறது. புதிய மின் திட்டங்கள் மூலமாக 1,430 மெகாவாட் மின்சாரம்; நீண்ட கால கொள்முதல் ஒப்பந்தங்கள் மூலம் 776 மெகாவாட் மின்சாரம் என மொத்தம் 2,206 மெகாவாட் மின்சாரம் இந்த நிதியாண்டின் இறுதிக்குள் நமக்கு மேலும் கிடைக்க இருக்கிறது.
முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் சீர்குலைந்து கிடந்த தமிழ்நாடு மின்சார வாரியத்தை மீட்டெடுப்பதற்காக 25,255 கோடி ரூபாய் நிதியுதவியினை எனது தலைமையிலான அரசு செய்துள்ளது. இதில், மின் நுகர்வோருக்கான மின் கட்டண மானியமாக 11,149 கோடி ரூபாயை எனது தலைமையிலான அரசு வழங்கியுள்ளது. மேலும், 2014-2015 ஆம் ஆண்டிற்கு 10,575 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மின்சாரம் தயாரிப்பதற்கு ஏற்படும் எரிபொருள் செலவு, தமிழ்நாடு மின்சார வாரியத்தால் பெறப்பட்ட கடனுக்கான வட்டித் தொகை மற்றும் பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் மின் கட்டண விகித மாறுதல் கேட்டு அதற்கான விண்ணப்பத்தை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கு தமிழ்நாடு மின்சார வாரியம் சமர்ப்பிக்க வேண்டும் என்று 2005 ஆம் ஆண்டு மின் கட்டண ஒழுங்குமுறை விதிகளில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
அவ்வாறு சமர்ப்பிக்காவிட்டால், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தன்னிச்சையாக மின் கட்டண நிர்ணயத்தை செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்கும் என்று ஒழுங்குமுறை ஆணைய விதிகளில் குறிப்பிடப்பட்டு உள்ளது. மின்சார மேல் முறையீட்டு தீர்ப்பாயமும், தனது 11.11.2011 நாளிட்ட தீர்ப்பில், மின்பகிர்வு உரிமைதாரர்கள் மின் கட்டண நிர்ணயத்திற்கான மனுவினை சமர்ப்பிக்காமல் ஒரு மாதத்திற்கு மேல் தாமதம் செய்தால், மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையங்கள் தன்னிச்சையாக மின் கட்டணங்களை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று ஆணையிட்டுள்ளது. மத்திய பாஜக கூட்டணி அரசால் இயற்றப்பட்ட 2003 ஆம் ஆண்டு மின்சார சட்டமும், மின் கட்டணத்தை நிர்ணயிப்பதற்கான அதிகாரத்தை மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கு அளித்துள்ளது.
மின் கட்டணங்கள் மாற்றம்
இந்த நிலையில், 2003 ஆம் ஆண்டைய மத்திய மின்சார சட்டம், 2005 ஆம் ஆண்டைய மின் கட்டண நிர்ணய விதிகள் மற்றும் மின்சார மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் உத்தரவு ஆகியவற்றின் அடிப்படையில், மின் கட்டணங்களை மாற்றி அமைக்கும் விதமாக, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பொது அறிவிப்பு ஒன்றினை இன்று (23.9.2014) வெளியிட்டுள்ளது.
உள் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் நிலக்கரியின் விலை டன் ஒன்றிற்கு தற்போது 3,298 ரூபாய் என உயர்ந்துள்ளதையும்; வெளிநாட்டு நிலக்கரியின் விலை 6,896 ரூபாய் என உயர்ந்துள்ளதையும்; பணியாளர் ஊதியம் மற்றும் ஓய்வூதியத்திற்கான செலவு நடப்பு ஆண்டில் 4,370 கோடி ரூபாய் என உயர்ந்துள்ளதையும்; தமிழ்நாடு மின்சார வாரியத்தால் மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான மேம்பாட்டுப் பணிகளுக்காக பெறப்பட்ட கடன்களின் மீதான வட்டிச் செலவினம் 8,463 கோடி ரூபாய் என உள்ளதையும் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின் நுகர்வோர்களுக்கான உத்தேச மின் கட்டணத்தை நிர்ணயித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மேற்படி அறிவிப்பு வெளியிடப்பட்ட பின், அதன் மீது பொதுமக்கள் மற்றும் நுகர்வோரின் கருத்துகள் கேட்கப்பட்டு; நுகர்வோர் நலன், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் நலன், எதிர்கால மின் திட்டங்கள் மற்றும் கட்டமைப்பிற்கான செலவினங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின் கட்டண நிர்ணயம் குறித்த இறுதி அறிவிக்கையை வெளியிடும்.
மின் நுகர்வோர்களுக்கான கட்டணத்தை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் எப்படி நிர்ணயித்தாலும், அதன் காரணமாக, ஏழை, எளிய மக்கள் எந்த விதத்திலும் பாதிப்படையாத வகையில், அதற்குத் தேவைப்படும் கூடுதல் மானியத்தை எனது தலைமையிலான அரசு தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு வழங்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
Tuesday, 23 September 2014
வங்கி அதிகாரி பணி தேர்வுக்கான அடிப்படை பாடத்திட்டங்க
ஒவ்வொன்றிலும் தலா 50 வினாக்கள் கேட்கப்பட்டு, தலா 50 மதிப்பெண் வீதம் மொத்தம் 100 மதிப்பெண்கள் இருக்கின்றன. எனவே, எழுத்துத்தேர்வில் 50 சதவீத மதிப்பெண்கள் இந்த இரு பகுதிகளின் வசம் இருக்கின்றன. இதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். நாம் இந்த வாரத்தில் கணிதத்திறன் தேர்வு குறித்து பார்க்கலாம்.
பள்ளிக் கணக்குகள்
“குவான்டிடேட்டிவ் ஆப்டிடியூட்” என ஐ.பி.பி.எஸ். வங்கி அதிகாரி தேர்விலும், “டேட்டா அனலைசிஸ் இன்டர் பிரட்டேஷன்” எனப் பாரத ஸ்டேட் வங்கி அதிகாரி தேர்விலும் கணிதத்திறன் அழைக்கப்படுகிறது. பள்ளிப் படிப்பு அளவிலான அடிப்படை கணிதக் கேள்விகள் மற்றும் தரவுகள், அட்டவணைகளில் உள்ள விவரங்களைப் படித்துப் புரிந்துகொண்டு விடையளிக்கக்கூடிய வினாக்கள் இதில் இடம்பெறும்.
அடிப்படையில் பார்த்தால் போட்டியாளரின் கணிதத்திறமையைச் சோதிக்கும் வகையில் கேள்விகள் அமைந்திருக்கும். பள்ளியில் படிக்கும்போது அரித்மேட்டிக், அல்ஜீப்ரா உள்ளிட்ட அடிப்படைக் கணிதங்களைப் படித்திருப்போம். 10-ம் வகுப்புக்குப் பிறகு கணிதம் தொடர்பு இல்லாத பிரிவுகளில் சேரும் மாணவர்களும், பிளஸ் டூ- க்குப் பிறகு கணிதத்தை முக்கியப் பாடமாகவோ அல்லது துணைப்பாடமாகவோப் படிக்காதவர்களும் பள்ளியில் படித்த கணக்குப் பாடங்களை மறந்திருக்கக்கூடும். தற்போது வங்கித்தேர்வுக்குத் தயாராகும்போது மீண்டும் அவற்றை நினைவில் கொண்டுவர வேண்டும்.
கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல், பின்னம், வர்க்கம், வர்க்க மூலம், கணம், நிகழ்தகவு, சராசரி, விகித்தாசாரம், அசல், வட்டி, தனி வட்டி,கூட்டு வட்டி லாப-நஷ்டக் கணக்கு, நேரம்-தூரம், நேரம்-வேலை எனப் பள்ளி அளவிலான கணக்குகளே கணிதப் பகுதியில் கேட்கப்படுகின்றன.
நேர மேலாண்மை
கணக்கில் ஒவ்வொரு வருக்கும் குறிப்பிட்ட சில பகுதிகள் நன்கு பிடிக்கலாம். நமக்குப் பிடித்தமான அத்தகைய பிரிவுகளில் கேட்கப்படும் வினாக்களுக்குக் கடகடவெனப் பதிலளித்துவிடுவது நல்லது. எல்லா வினாக்களுக்கும் விடையளித்துவிட வேண்டும் என நினைக்கக் கூடாது. நேர மேலாண்மை மிகவும் முக்கியம்.
மேலும், கணிதத்திறன் பகுதியில், அட்டவணைகள், தரவுகள் (டேட்டா), வரைபடங்கள் (சார்ட்டு) கொடுக்கப்பட்டு அதில் இருந்தும் கேட்கப்படும் வினாக்களுக்கும் விடையளிக்க வேண்டும். ஒரே பகுதியில் இருந்து ஐந்தாறு கேள்விகள் தொகுப்பாகக் கேட்கப்படுவதால், கொடுக்கப்படும் தகவல்களைப் புரிந்துகொண்டால் அனைத்துக் கேள்விகளுக்கும் எளிதில் பதில் அளித்துவிடலாம்.
இந்தப் பகுதியில், படித்து அடிப்படை விஷயத்தைப் புரிந்துகொள்ளச் சற்று நேரம் பிடிக்கலாம். எனவே, விடையளிக்கும்போது துல்லியமும், வேகமும் அவசியம். அடிப்படை கணித அறிவு, இந்தப் பகுதி வினாக்களுக்கு விரைவாக விடையளிக்க உதவும். அதேபோல், “ஆட்-மேன் அவுட்” என்ற பகுதியில் கொடுக்கப்பட்ட கேள்விகளில் வித்தியாசமானது, மற்றவற்றுடன் தொடர்பு இல்லாதது எது? என்பதைக் கண்டறியும் கேள்விகளும், கொடுக்கப்பட்டுள்ள தொடரின் அடுத்தது எது? என்பதைக் கண்டுபிடிக்கும் வினாக்களும் கணிதத்திறன் பகுதியில் இடம்பெறுகின்றன.
இதற்கும் அடிப்படைக் கணித அறிவு பெரிதும் கைகொடுக்கும். ஒரு கேள்விக்கு விடைதெரியவில்லை என்றால் அதிலேயே முட்டி மோதிக் கொண்டிருக்கக்கூடாது. உடனடியாக அடுத்த கேள்விக்குச் சென்றுவிட வேண்டும். மற்ற வினாக்களுக்கு விடையளித்துவிட்டு அடுத்த ரவுண்டில், விடுபட்ட கேள்வி களுக்கு விடையளிக்க முயலலாம்.
பயிற்சி
கணிதத்திறன் பகுதியைப் பொறுத்தவரையில், எந்த அளவுக்குக் கேள்விகளுக்கு விடையளித்துப் பயிற்சி
எடுக்கிறீர் களோ, அந்த அளவுக்கு அதில் நிபுணத்துவம் பெற்றுவிடலாம். கேள்விகளுக்கு விடைகளை கண்டுபிடிப்பதைக் காட்டிலும், விடையளித்த விதத்தை மனதில் நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும். கேள்விகளுக்கு விடையளித்துப் பயிற்சிபெறும் போதுதான், துல்லியமும், வேகமும் தெரிய வரும். எனவே, பயிற்சி... பயிற்சி... பயிற்சி...என்ற தாரக மந்திரத்தை மனதில்வைத்து கணித கேள்விகளுக்கு விடையளித்துப் பயிற்சி செய்யுங்கள். கணிதத் திறன் பகுதியில் கணிசமான மதிப்பெண் பெற்றுவிடலாம். ரீசனிங் எனப்படும் பகுத்தாராயும் திறன் வினாக்கள் குறித்து அடுத்த வாரம் பார்க்கலாம்.
Monday, 22 September 2014
ஆசிரியர் தகுதித்தேர்வில் வெயிட்டேஜ் முறையை எதிர்த்து தொடர்ப்பட்ட வழக்குகள் தள்ளுபடி
ஆசிரியர் தகுதித்தேர்வில் வெயிட்டேஜ் முறையை எதிர்த்து தொடர்ப்பட்ட வழக்குகளை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
தகுதித்தேர்வு மூலம் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. இந்த பணியை ஆசிரியர் தேர்வு வாரியம் மேற்கொண்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் பெறும் மதிப்பெண்ணுடன் அவர்கள் பிளஸ்-2, பட்டப்படிப்பு, பி.எட், ஆசிரியர் பயிற்சி படிப்பு போன்றவற்றில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தற்போது பணி நியமனம் நடைபெறுகிறது. இந்த வெயிட்டேஜ் முறைக்கு ஆசிரியர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. வெயிட்டேஜ் முறையில் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்நிலையில் வெயிட்டேஜ் முறை, 5 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கு விசாரணையின் போது சென்னை ஐகோர்ட்டு, ஆசிரியர் தகுதித்தேர்வில் வெயிட்டேஜ் முறையை எதிர்த்து தொடர்ப்பட்ட வழக்குகள் அனைத்தையும் தள்ளுபடி செய்தது. 45- க்கும் மேற்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்யப்பட்டது. நிபந்தனைகளை ஏற்று தகுதித்தேர்வு எழுதிவிட்டு தற்போது எதிர்ப்பதை ஏற்க முடியாது என்று ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது. சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பின் மூலம் ஆசிரியர் நியமனத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீங்குகிறது.
Sunday, 21 September 2014
திருவாரூரில் செப். 23-ல்எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்
திருவாரூர் மாவட் ஆட்சியர் அலுவலகத்தில் செப். 23-ம் தேதி எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது எனத் தெரிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மாவட்டத்தில் எரிவாயு இணைப்புகள் வழங்குவதில் நுகர்வோருக்கு ஏற்படும் பிரச்னைகள் மற்றும் எரிவாயு நிரப்பப்பட்ட உருளைகள் வழங்குவதில் ஏற்படும் குறைபாடுகளை சரி செய்யும் வகையில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது. ஆட்சியர் அலுவலகத்தில் 23/09/2014 தேதி மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ள இக் கூட்டத்தில் மாவட்டத்துக்குள்பட்ட அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முகவர்கள், மாவட்ட எரிவாயு ஒருங்கிணைப்பாளாóகள், எரிவாயு வாடிக்கையாளாóகள் மற்றும் நுகாóவோர் அமைப்பினாó ஆகியோர் பங்கேற்று, எரிவாயு உருளை விநியோகத்தில் உள்ள குறைபாடுகளை களைவதற்கு உரிய ஆலோசனைகள் வழங்கலாம்.

திருவாரூர் சாலைகள் சீரமைக்கப்படுமா?மக்கள் எதிர்பார்ப்பு
பனகல் சாலையில் உள்ள பெரும் பள்ளங்கள் |
பள்ளத்தில் விழுந்து பழுதான பேருந்து |
திருவாரூர் மாவட்டத்தில் மிக மோசமான நிலையில் பழுதடைந்துள்ள சாலைகளை விரைந்து சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மிகச் சிறியப் பேருந்து நிலையமாக இயங்கி வரும் திருவாரூர் பேருந்து நிலையத்தில் அதிகளவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. பேருந்து நிலையத்துக்குள் பேருந்துகள் மட்டுமன்றி, வேன், லாரி, கார்கள் மற்றும் கனரக பெரிய வாகனங்களுக்கான போக்குவரத்து பொதுச் சாலையாக இருந்து வருகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அவ்வப்போது விபத்துகள் நிகழ்ந்து வருகின்றன.
பேருந்து நிலையம் மற்றும் பிரதான சாலைகளில் ஏற்பட்டுள்ள பள்ளங்களால் அதிகளவில் விபத்துகள் ஏற்படுகின்றன. பனகல் சாலை சாலையில் ஒருபுறம் பள்ளமும், மேடுமாய் உள்ளது. சாலைகளில் ஏற்பட்டுள்ள இப்பள்ளங்களினால் அடிக்கடி விபத்துகள் நேரிடுகின்றன.
எனவே, பொதுமக்களின் நலன் கருதி, திருவாரூர் நகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மிக மோசமாக பழுதடைந்துள்ள சாலைகளை விரைந்து சீரமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
Saturday, 20 September 2014
பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்த தமிழக அரசு முடிவு
புதிய பயிர்காப்பீட்டுத் திட்டத்திற்கு பதிலாக தமிழக விவசாயிகள் நலன் கருதி பழைய பயிர்க்காப்பீட்டு திட்டத்தையே மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.இது தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:"வேளாண் தொழிலுக்குத் தேவையான பயிர்க் கடன் வழங்குதல், விதைகள் மற்றும் உரங்களை மானிய விலையில் வழங்குதல், விவசாய உபகரணங்களை மானிய விலையில் வழங்குதல் உட்பட பல்வேறு விவசாய உதவித் திட்டங்களின் மூலம் வேளாண் உற்பத்தியைப் பெருக்கவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தினை உயர்த்தவும் முனைப்பான நடவடிக்கைகளை எனது தலைமையிலான அரசு எடுத்து வருகிறது.மழையையே பெரிதும் நம்பியுள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கும் திட்டமாக விளங்குவது பயிர்க் காப்பீட்டுத் திட்டம். இயற்கைச் சீற்றங்களால் பயிர்கள் அழியும் போது விவசாயிகளுக்கு ஏற்படும் பேரழிவை போக்கிடும் திட்டமாக தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டம் என்ற பெயரில் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வந்தது.இந்தத் திட்டத்தின்படி, காப்பீடு செய்யப்படும் தொகைக்கான காப்பீட்டுக் கட்டணம், அதாவது பிரிமியம், பயிர் மற்றும் பருவத்திற்கு ஏற்றாற் போல் இரண்டு விழுக்காடு முதல் 3.5 விழுக்காடு வரை இருந்தது. இந்தக் காப்பீட்டுக் கட்டணத்தில், 50 விழுக்காடு தொகையை தமிழ்நாடு அரசே செலுத்தி வந்தது. மீதமுள்ள தொகையை விவசாயிகள் செலுத்தி வந்தனர்.இந்தத் திட்டத்தின்படி, விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய பயிர் இழப்பீட்டுத் தொகை, காப்பீட்டு நிறுவனங்களால் வசூல் செய்யப்பட்ட காப்பீட்டுக் கட்டணத்திற்குள் இருந்தால் அந்தத் தொகையை காப்பீட்டு நிறுவனங்களே விவசாயிகளுக்கு வழங்கிவிடும்.வழங்கப்பட வேண்டிய மொத்த இழப்பீட்டுத் தொகை காப்பீட்டுக் கட்டணத்தை விட கூடுதலாக இருந்தால், தேவைப்படும் அந்த கூடுதல் இழப்பீட்டுத் தொகையை மத்திய, மாநில அரசுகள் சரிசமமாக பகிர்ந்து கொண்டு, காப்பீட்டு நிறுவனம் மூலமாக விவசாயிகளுக்கு வழங்கும். இந்தத் திட்டத்தை ஒரு முழுமையான காப்பீட்டுத் திட்டமாக கருத இயலாது என்றாலும், மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடனான இந்தத் திட்டம் விவசாயிகளுக்கு பயனுள்ள திட்டமாகவே இருந்தது.விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருந்த இந்தத் திட்டத்தை, மாநில அரசுகளை கலந்து ஆலோசிக்காமல் முந்தைய மத்திய கூட்டணி அரசு கடந்த 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் திடீரென ரத்து செய்து, அதற்குப் பதிலாக தேசிய பயிர் காப்பீட்டுத் திட்டம் என்னும் புதிய காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.இந்தத் திட்டம், திருத்திய தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டம், வானிலை அடிப்படையிலான பயிர் காப்பீட்டுத் திட்டம் என்ற இரு அம்சங்களை கொண்டதாகும். திருத்திய தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், அந்தந்த இடங்களில் கடந்த காலங்களில் ஏற்பட்டுள்ள பயிர் பாதிப்பின் அடிப்படையில் காப்பீட்டுத் தொகையும், காப்பீட்டுக் கட்டணமும் நிர்ணயம் செய்யப்படுகின்றன.உதாரணமாக, திருவாரூர் மாவட்டத்தில் சம்பா நெற் பயிருக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள காப்பீட்டுத் தொகை ஒரு ஹெக்டேருக்கு 6,440 ரூபாய் மட்டுமே. இதற்கான காப்பீட்டுக் கட்டணம் 3,349 ரூபாய் ஆகும். இதில், மத்திய, மாநில அரசுகள் தலா 1,256 ரூபாய் செலுத்த வேண்டும்.மீதமுள்ள 837 ரூபாயை விவசாயி செலுத்த வேண்டும். இழப்பீடு ஏற்பட்டால் காப்பீட்டுத் தொகை முழுவதையும் காப்பீட்டு நிறுவனமே அளிக்கும். பயிர் இழப்பு ஏற்படும் நேரங்களில் தனது பங்காக வழங்கப்பட வேண்டிய தொகையை குறைக்கும் வகையில், இத்தகைய ஒரு பயனற்ற காப்பீட்டுத் திட்டத்தை முந்தைய மத்திய கூட்டணி அரசு அறிமுகம் செய்தது.இந்தப் புதிய திட்டம், ‘குறைந்த இழப்பீடு, அதிக கட்டணம்' என்பதை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட திட்டம் என்பதை உணர்ந்த நான், உடனடியாக அப்போதைய பாரதப் பிரதமருக்கு 5.1.2014 அன்று கடிதம் எழுதினேன். அந்தக் கடிதத்தில், ஏற்கெனவே இயற்கைச் சீற்றங்களால் இன்னலுற்று கொண்டிருக்கும் தமிழக விவசாயிகளுக்கு மேலும் கூடுதல் சுமையைக் கொடுக்கக் கூடியதாக புதிய பயிர்க் காப்பீட்டுத் திட்டம் உள்ளது என்றும், இந்தப் புதிய காப்பீட்டுத் திட்டம் வேளாண் தொழிலை கடுமையாக பாதிக்கும் என்றும்; இந்த புதிய பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீடு செய்ய விவசாயிகள் முன்வருவது சந்தேகமே என்றும் தெரிவித்து; இந்தச் சுமையை விவசாயிகள் மேல் திணிக்காமல், இரண்டு விழுக்காட்டிற்கு மேல் உள்ள காப்பீட்டுக் கட்டணத்தை மத்திய அரசும், மாநில அரசும் சமமாக பகிர்ந்து கொள்ளலாம் என்றும் ஆலோசனை தெரிவித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதினேன். ஆனால், முந்தைய மத்திய அரசு இந்தக் கருத்துருவை நிராகரித்துவிட்டது.‘குறைந்த இழப்பீடு, அதிகக் கட்டணம்' என்ற அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட புதிய காப்பீட்டுத் திட்டத்திற்கு பதிலாக, பழைய காப்பீட்டுத் திட்டமான தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள விவசாயப் பிரதிநிதிகள் என்னிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து தற்போது மீண்டும் மத்திய அரசுக்கு ஒரு கருத்துருவை எனது தலைமையிலான அரசு அனுப்பி, அதன் அடிப்படையில், இந்த ஆண்டிற்கு மட்டும் பழைய பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.எனவே, வேளாண் பெருங்குடி மக்களின் இன்னலைக் கருத்தில் கொண்டு, 2014 ஆம் ஆண்டு சம்பா, தாளடி, பிசானம் பருவத்தில் பயிரிடப்படும் நெல் மற்றும் ரபி பருவத்தில் பயிரிடப்படும் இதர பயிர்களுக்கு புதிய பயிர்க் காப்பீட்டுத் திட்டமான தேசிய பயிர்க் காப்பீட்டுத் திட்டத்திற்குப் பதிலாக பழைய பயிர்க் காப்பீட்டுத் திட்டமான தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்த எனது தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
Friday, 19 September 2014
திருவாரூர் நாலுகால் மண்டபம் பகுதியில் 5 குடிசைகள் தீயில் எரிந்து நாசம்
திருவாரூரில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 5 குடிசை வீடுகள் தீக்கிரையாகின.
திருவாரூர் நாலுகால் மண்டபத்தில் வசித்து வருபவர் தொழிலாளி சீனுவாசன் (55). இவர் வியாழக்கிழமை காலை வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றுவிட்டார். பிற்பகல் 1 மணியவில் இவரது குடிசை வீடு எதிர்பாராதவிதமாக தீப்பிடித்து எரிந்தது. இந்தத் தீ அருகில் இருந்த முரளி, ரெங்கராஜலு, மாரிமுத்து, பொய்யாமொழி ஆகியோரது குடிசை வீடுகளிலும் பரவி தீக்கிரையானது. இந்த விபத்தில் முரளி வீட்டிலிருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில் அருகிலுள்ள நடராஜன், பாலு ஆகிய இருவரது வீடுகள் மற்றும் தென்னை மரம் ஆகியவை தீப்பிடித்தது. உடனே அங்கிருந்த பொதுமக்கள் தீயை தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.
இதுகுறித்து திருவாரூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு நிலையத்திலிருந்த 2 வாகனங்களில் ஒரு வாகனம் முற்றிலும் பழுதடைந்து பயன்பாடுன்றி உள்ளது. மற்றொரு வாகனம் டீசல் டேங்க் பழுது போன்ற காரணங்களால் பழுது பார்க்க அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
இதனால் தீயணைப்பு நிலையத்தில் உரிய வாகனமின்றி சிறிய தொட்டி பொருத்தப்பட்ட வாகனம் சம்பவ இடத்துக்கு காலதாமதமாக வந்தது. அதனைத் தொடர்ந்து நன்னிலம், குடவாசல் தீயணைப்பு நிலைய வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, தீ அணைக்கப்பட்டது. திருவாரூர் நகரப் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Thursday, 18 September 2014
திருவாரூர் கேஸ் சிலிண்டர் கிடைக்காத மக்கள் அலுவலகத்தை முற்றுகை
திருவாரூர் கேஸ் சிலிண்டர் கிடைக்காத மக்கள் அலுவலகத்தை முற்றுகை
திருவாரூரில் கியாஸ் சிலிண்டர் கிடைக்காததால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொதுமக்கள் போராட்டம்
திருவாரூர் மேட்டு தெருவில் உள்ள ஒரு தனியார் கியாஸ் ஏஜென்சி நிறுவனம், திருவாரூர் நகர பகுதிகளில் உள்ள வீடு, கடைகளுக்கு கியாஸ் சிலிண்டர்களை வினியோகம் செய்து வருகிறது. இதில் வீடுகளில் உபயோகிக்கும் கியாஸ் சிலிண்டர்களை இணைய தளம் மூலம் பதிவு செய்யும் முறை நடைமுறையில் உள்ளது. இந்த முறையில் கியாஸ் சிலிண்டர்கள் கேட்டு பதிவு செய்தவர்களுக்கு கடந்த சில மாதங்களாக உரிய நேரத்தில் சிலிண்டர்கள் வழங்கப்படவில்லை என கூறி பொதுமக்கள் நேற்று கியாஸ் ஏஜென்சி முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சம்பவ இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
பேச்சுவார்த்தை
இது குறித்து தகவல் அறிந்த திருவாரூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கியாஸ் ஏஜென்சி நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தினர். அப்போது வருகிற 30-ந் தேதிக்குள் பதிவு செய்தவர்களுக்கு கியாஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் என போலீசாரிடம் தனியார் கியாஸ் ஏஜென்சி நிர்வாகத்தினர் உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து பொதுமக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, போராட்டத்தை கைவிடச் செய்தனர். பொதுமக்களின் முற்றுகை போராட்டத்தில் கலந்து கொண்ட நகர சபை உறுப்பினர் வரதராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-
30-ந் தேதிக்குள்....
இணையதளத்தில் கியாஸ் பதிவு செய்யும் முறை நடைமுறையில் உள்ளது. ஆனால் இந்த முறை சரிவர கடைப்பிடிக்கப்படுவது இல்லை. மேலும் சிலிண்டர் வழங்குவதில் பல்வேறு குளறுபடிகள் இருந்து வருகிறது. பதிவு செய்து மாத கணக்கில் காத்திருக்கும் நிலையில் பொதுமக்கள் உள்ளனர். தற்போது நடந்த பேச்சு வார்த்தையில் ஆகஸ்டு மாதம் வரை பதிவு செய்தவர்களுக்கு வருகிற 30-ந் தேதிக்குள் சிலிண்டர் வழங்கப்படும் என நிர்வாகம் உறுதி அளித்துள்ளது. அதற்குள் சிலிண்டர்களை வினியோகம் செய்யாவிட்டால் மீண்டும் கியாஸ் ஏஜென்சியை முற்றுகையிட்டு மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Wednesday, 17 September 2014
திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளக் கட்டுப்பாட்டு அறை
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயற்கை இடர்பாடுகளை எதிர்கொள்ள வெள்ளக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்படவுள்ளது என்றார் ஆட்சியர் எம். மதிவாணன்.
திருவாரூரில் திங்கள்கிழமை நடைபெற்ற இயற்கை இடார்பாடுகளை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் மீட்புப் பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலார்களுக்கான ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்துக்கு தலைமை வகித்து அவர் பேசியது:
இயற்கை இடார்பாடுகளை எதிர்கொள்ள அக். 1-ம் தேதி முதல் ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் வெüர்ளக்கட்டுப்பாட்டு அறை அமைக்கப்படவுள்ளது. பொதுமக்கள் எந்த நேரத்திலும் தொடர்புகொள்ளும் வகையில் இலவச தொலைபேசி எண் 1077 கொடுக்கப்படவுள்ளது. இந்த வசதியை மக்கள் பயன்படுத்திக்கொண்டு இயற்கை இடர்பாடுகள் குறித்தத் தகவல்களை தெரிவித்து பயன்பெறலாம் என்றார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பு. மணிமாறன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) எஸ். மாலா உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
Tuesday, 16 September 2014
பாரதிதாசன் பல்கலையில் எம்பிஏ படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்
திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழத்தில் எம்.பி.ஏ மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இப்படிப்பில் சேர தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
எம்.பி.ஏ.,வில் (மார்கெட்டிங், பினான்ஸ், சிஸ்டம், ஆபரேஷன் அன்ட் யூமன் ரிசோர்ஸ் மேனஜ்மென்ட்)
தகுதியாக இளங்கலை பட்டப் படிப்பில் 50 சதவீத மதிப்பெண்களை பெற்றிருக்க வேண்டும். இறுதியாண்டு தேர்வு எழுத இருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.
CAT - 2014ல் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். கேட் தேர்வுக்கு பதிவு செய்ய செப்.,30 கடைசி நாளாகும்.
எம்.பி.ஏ படிப்பிற்கு விண்ணப்பிக்க ஜனவரி 31 கடைசி நாள். கூடுதல் தகவல்கள் அறிய பல்கலைக்கழக இணையதளத்தை பார்க்கலாம்

Sunday, 14 September 2014
திருவாரூர் கமலாலய குளத்தை சுற்றி கனரக வாகனங்கள் செல்ல தடை
கமலாலய குளம்
திருவாரூர் தியாகராஜசுவாமி கோவில் சைவ சமயத்தின் தலைமை பீடமாகும். இக்கோவிலின் மேற்கு கோபுர வாசலின் எதிரே அமைந்துள்ள கமலாலய குளத்தின் நடுவே நாகநாதர் கோவில் அமைந்துள்ளது. குளமே ஆலயமாக கருதப்படும் கமலாலய குளம் திருவாரூர் நகரின் மைய பகுதியில் அமைந்துள்ள மிகப்பெரிய நீர்ப்பரப்பாகும். கமலாலய குளத்தின் வடகரை தடுப்புச் சுவர் கடந்த 2012–ம் ஆண்டு பெய்த கனமழை காரணமாக இடிந்து விழுந்தது. இதனால் வடகரை பகுதியில் கனரக வாகன போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டது.
தண்ணீர் நிறுத்தம்
இடிந்து விழுந்த கமலாலய குளத்தின் தடுப்புச்சுவரை சீரமைக்க கடந்த 2013–ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ரூ.95 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதைதொடர்நது கடந்த ஏப்ரல் மாதம் பணிகள் தொடங்க இருந்த நிலையில், குளத்தில் தண்ணீர் இருந்ததால் தடுப்பு சுவர் கட்டும் பணிகளுக்கு இடையூறு ஏற்பட்டது. இதை தொடர்ந்து குளத்துக்கு தண்ணீர் வருவதை நிறுத்த தற்காலிக தடுப்பு ரூ.11 லட்சம் செலவில் அமைக்கப்பட்டது. இதனால் தற்போது கமலாலய குளத்தில் 3 அடி உயரமே தண்ணீர் உள்ளது.
இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 8–ந் தேதி புதிதாக பொறுப்பு ஏற்ற மாவட்ட கலெக்டர் மதிவாணன், சிறப்பு வாய்ந்த கமலாலய குளத்தின் இடிந்து விழுந்த தடுப்புச்சுவரை சீரமைப்பது தொடர்பாகவும், குளத்தை பழமை மாறாமல் பராமரிப்பது தொடர்பாகவும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, உடனடியாக சீரமைப்பு பணிகளை தொடங்க உத்தரவிட்டார்.
இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு சீரமைப்பு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. நேற்று சீரமைப்பு பணிகளை மாவட்ட கலெக்டர் மதிவாணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது குளத்தின் 4 கரைகளிலும் நடந்தே சென்று பார்வையிட்ட கலெக்டர், படிக்கட்டுகளில் மணல் திட்டுகளையும், தேங்கி கிடக்கும் குப்பைகளையும் அகற்ற உத்தரவிட்டார்.
ஆய்வு குறித்து கலெக்டர் மதிவாணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–
பழமை மாறாமல்...
முதல்–அமைச்சர் ஜெயலலிதா பழமை வாய்ந்த திருவாரூர் தியாகராஜசுவாமி கோவிலையும், கமலாலய குளத்தையும் பழமை மாறாமல் சீரமைக்க உத்தரவிட்டார். அதன்படி சுற்றுலா, கலாசாரம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையின் கூடுதல் செயலாளர் கண்ணன் தியாகராஜ சுவாமி கோவிலில் நடைபெறும் திருப்பணிகளையும், கமலாலய குளக்கரை தடுப்புச் சுவர் சீரமைப்பு பணிகளையும் நேற்றுமுன்தினம் பார்வையிட்டார்.
அப்போது அவர், தொல்லியல் ஆய்வாளர் நரசிம்மன் தலைமையில் அரசால் அமைக்கப்பட்ட குழு கொடுத்த அறிக்கையின்படி தியாகராஜசுவாமி கோவிலுக்கு சொந்தமான கமலாலய குளத்தின் தடுப்புச் சுவரையும், படித்துறையையும் பழமை மாறாமல் சீரமைக்க வேண்டும் என்றும் குளத்தை சுற்றி 4 கரைகளிலும் உள்ள சாலையில் கனரக வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். மேலும் திருக்கொள்ளிகாடு, திருவாஞ்சியம், ஆவூர்பசுபதிகோவில் ஆகிய இடங்களில் உள்ள பிரசித்திப் பெற்ற கோவில்களில் கழிவறை கட்டவும், முத்துப்பேட்டையில் படகு தளம் அமைக்கவும், மூணாறு தலைப்பு பகுதியில் சுற்றுலா வசதிகளை மேம்படுத்தவும் அரசு செயலாளர் அறிவுறுத்தி உள்ளார்.
கனரக வாகனங்களுக்கு தடை
அரசு செயலாளரின் அறிவுறுத்தலின் பேரில் குளக்கரையின் உறுதிதன்மையை பாதுகாக்கும் விதமாக குளத்தை சுற்றி உள்ள சாலைகளில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படுகிறது. கனரக வாகனங்கள் செல்வதற்கு மாற்றுப்பாதை விரைவில் ஏற்படுத்தப்படும். கமலாலய குளத்தின் வடகரையில் இடிந்த தடுப்புச் சுவரை சீரமைப்பதற்கு முதல் கட்டமாக தற்காலிக தடுப்புச் சுவர் கட்டப்படும். அதைதொடர்ந்து பழமை பொலிவுடன் தடுப்புச் சுவர் அமைக்கப்படும். குளத்தை சுற்றிலும் தூய்மையாக பராமரிக்க 10 இடங்களில் குப்பை தொட்டிகள் வைக்கப்படும். புரதான சின்னமாக விளங்கும் தியாகராஜர் கோவிலையும், கமலாலய குளத்தையும் பராமரிக்க சிறப்புக் கவனம் செலுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Saturday, 13 September 2014
நமதூர் மௌத் அறிவிப்பு 13/09/2014
நமதூர் மேலத்தெரு கடிகார வீடு குலாம் ரசூல் அவர்களின் மனைவியும் பஷீர் அஹ்மத் அவர்களின் தாயாருமான ஆயிஷா பீவி அவர்கள் காயிதே மில்லத் தெருவில் மௌத் .
அன்னாரின் ஜனாஸா 13/09/14 அன்று சனிக்கிழமை மாலை 4 மணிக்கு நமது மேலத்தெரு ஜாமியுள் மஸ்ஜித் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்படும் .
Friday, 12 September 2014
திருவாரூரில் லஞ்சம் வாங்கிய தணிக்கை துறை அதிகாரிகள் 3 பேர் கைது சி.பி.ஐ. போலீசார் நடவடிக்கை
ய்த நாள்:
திருவாரூரில் லஞ்சம் வாங்கிய தணிக்கை துறை அதிகாரிகள் 3 பேரை சி.பி.ஐ. போலீசார் கைது செய்தனர்.
கோர்ட்டில் தணிக்கைதிருவாரூரில் உள்ள மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் மாநில தணிக்கை துறையினர் கடந்த 2 நாட்களாக நீதிமன்ற கணக்குகள் குறித்து ஆய்வு செய்தனர். அப்போது சில தவறுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை சரிசெய்ய லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று தணிக்கை துறையினர் கேட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து திருவாரூர் உரிமையியல் நீதிமன்ற ஊழியர் பாஸ்கர், சென்னையில் உள்ள சி.பி.ஐ. ஊழல் தடுப்பு பிரிவுக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் சி.பி.ஐ. போலீசார், லஞ்சம் கேட்ட தணிக்கை துறை அதிகாரிகளை கையும் களவுமாக பிடிக்க வியூகம் வகுத்தனர்.
அதன்படி நேற்று மாலை சி.பி.ஐ. போலீசார் திருவாரூர் வந்து ரசாயன பவுடர் தடவிய பணத்தை பாஸ்கரிடம் கொடுத்து அதை தணிக்கை துறை அதிகாரிகளிடம் கொடுக்கும் படி கூறினர். அதன்படி பாஸ்கர் அந்த பணத்தை விளமல் என்ற இடத்தில் தணிக்கை துறை அதிகாரிகளிடம் கொடுத்தபோது, அங்கு மறைந்திருந்த சென்னை சி.பி.ஐ. போலீஸ் துணை சூப்பிரண்டு முருகன், இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் ஆகியோர் தணிக்கை துறையை சேர்ந்த 3 அதிகாரிகளை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் அவர்கள் வந்த காரையும் சோதனை செய்து, அதில் இருந்த 2 பெரிய பைகளை பறிமுதல் செய்தனர். பின்னர் கைதான அதிகாரிகள் 3 பேரும் சென்னைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
தணிக்கை துறை அதிகாரிகள் யார்?சி.பி.ஐ. போலீசார் கைது செய்த தணிக்கை துறை அதிகாரிகள் பெயர்விவரம்? அவர்களுக்கு கொடுக்கப்பட்ட லஞ்சப்பணம் கைப்பற்றப்பட்ட பைகளில் இருந்ததா? என்பன போன்ற விவரங்கள் உடனடியாக தெரியவில்லை. சி.பி.ஐ. அதிகாரிகள் தணிக்கை துறை அதிகாரிகளை கைது செய்த சம்பவம் திருவாரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Thursday, 11 September 2014
நிருபர்களை கண்காணிக்க போலீஸ் அதிகாரிகள் நியமனம்
சென்னையில் பத்திரிகை நிருபர்களை கண்காணிக்க, போலீஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டதற்கு, பா.ஜ., காங்., மற்றும் தி.மு.க., கடும் கண்டனம் தெரிவித்து ள்ளன. இது தொடர்பாக, சென்னை பத்திரிகையாளர் சங்கம் சார்பில், இந்திய பத்திரிகை கவுன்சிலில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
சென்னையில், ஆங்காங்கே கொலை, கொள்ளை, செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்து வரும் நிலையில், அதை கண்காணிக்க வேண்டிய போலீசார், தற்போது, இந்த செய்திகளை சேகரிக்கும், 'கிரைம்' பிரிவு நிருபர்களை கண்காணிக்க நியமிக்கப்பட்டிருப்பது, அனைத்து தரப்பிலும், பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

சர்ச்சை:
இது என்ன புது வேலை என்று கேட்கலாம்; ஆனால், ஏற்கனவே, சென்னை, நுண்ணறிவுப் பிரிவு போலீசில், பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகளில் வரும் செய்திகளை கண்காணிக்க, தனியாக ஆட்கள் நியமிப்பதுண்டு.அதே நேரம், சென்னை போலீஸ் தொடர்பான செய்திகளை அளிக்கவும், நிருபர்களுக்கு தேவையான தகவல்களை பெற்றுத் தரவும், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், மக்கள் தொடர்பு அதிகாரி உள்ளார்.இவர்களையும் மீறி, இரண்டு மூன்று பத்திரிகை நிருபர்களுக்கு என, தனியாக, 'பிரஸ் இன்சார்ஜ் ஆபீசர்' என்ற பெயரில், ஒரு துணை கமிஷனர் அல்லது உதவி கமிஷனர் நிலையில் உள்ள அதிகாரிகளை நியமித்திருப்பது தான், தற்போது கிளம்பிஉள்ள சர்ச்சை.பொதுவாக, இவர்கள் உயரதிகாரிகளாக இருப்பதால், இவர்கள் கீழ் பணியாற்றும் இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ., மற்றும் போலீசார் என, அனைவருக்கும், நிருபர்களை கண்காணிக்கும் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதன்மூலம், பத்திரிகை நிருபர்களின் சுதந்திரம் பறிக்கப்படுவதுடன், அவர்களின் தனிப்பட்ட பிரச்னையிலும், போலீசார் தலையிடும் சூழல் ஏற்படும் என்கிறது, பத்திரிகையாளர்கள் தரப்பு.கடந்த சில தினங்களுக்கு முன், பத்திரிகையாளர்கள் பெயர், கண்காணிப்பு அதிகாரி பெயர்கள் அடங்கிய பட்டியல், சுற்றறிக்கையாக வழங்கப்பட்டது அறிந்ததும், அனைத்து பத்திரிகையாளர்களும் கொதித்து போய் உள்ளனர்.இது தொடர்பாக, சென்னை பத்திரிகை யாளர் சங்கம், தன் கண்டனத்தை தெரிவித்துள்ளது. ஆனால், இதுகுறித்து போலீஸ் தரப்பில் எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.
அபாயகரமான போக்கு:
இந்நிலையில், இந்த பிரச்னையை, இந்திய பத்திரிகை கவுன்சில் கவனத்திற்கு, சென்னை பத்திரிகையாளர் சங்கம் கொண்டு சென்றுள்ளது.
இதுகுறித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:நிருபர்களை கண்காணிக்க, தனித்தனியாக போலீஸ் அதிகாரிகள் நியமிக்கப் பட்டிருப்பது, அவர்களுடைய தகவல் தளங்களுக்கு பிரச்னையை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.இது மிகவும் அபாயகரமான போக்கு. பத்திரிகையாளர்கள் அறியாமலேயே, அவர்கள் போலீஸ் அதிகாரியின் கண்காணிப்பிற்கு உள்ளாகுவது என்பது, பத்திரிகை சுதந்திரத்திற்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் மற்றும் மோசமான மிரட்டல்.இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.மேலும், அரசியல் கட்சிகளும், சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜின் இந்த நடவடிக்கைக்கு, கண்டனம் தெரிவித்து உள்ளனஇதுகுறித்து, பா.ஜ., மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியிருப்பதாவது:பா.ஜ., இந்த கண்காணிப்பு குழுவிற்கு, கண்டனத்தை தெரிவித்து உள்ளது. இந்த நடவடிக்கை, பத்திரிகை சுதந்திரத்தை உளவு பார்ப்பதாக அமைந்துள்ளது.அவர்கள், பத்திரிகையின் உண்மை செய்திகள் குறித்து பயப்படுகின்றனர். பத்திரிகைகள் ஒரு விஷயம் குறித்து விசாரிக்க துவங்கி விட்டால், அது அரசிற்கு, எதிர்மறையான தாக்கத்தை தந்துவிடுமோ என்று நினைக்கின்றனர். இதற்காக தான், இந்த கண்காணிப்பு குழுவை நியமித்துஉள்ளனர். இந்த நடவடிக்கை, ஜனநாயகத்திற்கு விரோதமானது; சுதந்திரத்தை நெருக்குவதாக அமையும். நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்ட போது, பத்திரிகையாளர்கள் கண்காணிக்கப்பட்டு, குறிப்பிட்ட செய்திகளை அவர்கள் வெளியிடக் கூடாது என்று, தடுக்கப்பட்ட சம்பவத்தை நினைவு படுத்துகிறது. இந்த கண்காணிப்புக் குழு, உடனடியாக கைவிடப்பட வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
தனியார் 'டிவி' சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த, தி.மு.க., செய்தி தொடர்பாளர், டி.கே.எஸ். இளங்கோவன் கூறியதாவது:கமிஷனர் ஜார்ஜின் இந்த உத்தரவு, அவர் கீழ் பணியாற்றும் போலீஸ் அதிகாரிகளின் சுதந்திரமான பணிக்கு, தடை ஏற்படுத்துவதாக அமையும். அவர், குற்றங்களை ஊக்குவிக்கிறாரா என்பது தெரியவில்லை.பத்திரிகைள் செய்தி வெளியிடுவதை தடுக்கக் கூடாது. அவர்கள் மூலமாக தான், பல குற்ற சம்பவங்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. எனவே, பத்திரிகை களை தடுக்கக் கூடாது. போலீசார், தகவல்களை நேர்மையான வழியில் பயன்படுத்த வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்து உள்ளார்.

மோசமான விஷயம்:
காங்., கட்சியும், கமிஷனர் ஜார்ஜின், பத்திரிகை கண்காணிப்புக் குழுவிற்கு கண்டனம் தெரிவித்து உள்ளது.கமிஷனரின் நடவடிக்கையை கண்டித்து உள்ள, முன்னாள் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர், மணீஷ் திவாரி, தனியார் 'டிவி'க்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:இது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. எந்த ஒரு மோசமான விஷயமாக இருந்தாலும், அதை தைரியமாக எதிர்ப்பது, இந்திய பத்திரிகைகள் தான். பத்திரிகை சுதந்திரத்தை பறிக்கும் இந்த நடவடிக்கையை, எதிர்த்து போராடும் பத்திரிகையாளர்கள் பக்கம், நான் எப்போதும் இருப்பேன்.இவ்வாறு, அவர் கூறினார்.இதற்கிடையில், பத்திரிகையாளர் சங்கங்களை அழைத்து பேச, கமிஷனர் ஜார்ஜ் திட்டமிட்டுள்ளதாகவும், அவர் தன் நடவடிக்கையை நியாயப்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
பி.ஆர்.ஓ.,விடம் மட்டுமே செய்தி கிடைக்கும்-சென்னை போலீஸ் அறிவிப்பு:பத்திரிகை நிருபர்களை கண்காணிக்க, சென்னை போலீஸ் சார்பில், அதிகாரிகள் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், நேற்று மாலை, சென்னை போலீஸ் கமிஷனரகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:சென்னை மாநகர காவல் துறையில், மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றி வந்த, காவல் உதவி ஆணையர் ராமநாதன், பதவியில் இருந்து ஓய்வு பெற்றதால், காலியாக இருந்த இப்பணியிடத்திற்கு, காவல் உதவி ஆணையர் முருகதாஸ், 5ம் தேதி முதல், பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளார்.இவருக்கு உதவியாக, செய்தி மக்கள் தொடர்புத் துறை துணை இயக்குனர் பாண்டியன் செயல்படுவார். சென்னை காவல் துறை தொடர்பான அனைத்து செய்திகளும், மக்கள் தொடர்பு அதிகாரி மூலமாக, அவர்கள் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்படும்.மேலும், ஊடகங்களுக்கு செய்திகளும், வெளியீடுகளும், மக்கள் தொடர்பு அதிகாரி மூலமாக, அவரது அலுவலகத்தில் இருந்து மட்டுமே, வெளியிடப்படுமே அன்றி, சில ஊடகங்களில் வெளியிட்டது போல், வேறு எந்த அதிகாரிகளாலும் வெளியிடப்படாது.மேலும், சில ஊடகங்களில் வெளியானது போல் எந்த விதமான உத்தரவுகளோ, சுற்றறிக்கையோ பிறப்பிக்கப்படவில்லை. அவ்வாறு வெளியாகும் செய்திகள், முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை.இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.
நமது நிருபர்

Wednesday, 10 September 2014
நமதூர் மௌத் அறிவிப்பு 10/09/2014
நமதூர் நடுத்தெரு மர்ஹும் செ மு முஹம்மது யூனஸ் அவர்களின் மருமகனும் , தெற்குத்தெரு ஜாகிர் ஹுசைன் மற்றும் தமுமுக மாவட்ட தலைவர் முஜிபுர் ரஹ்மான் இவர்களின் மாமனாரும் , நூருல் அல் சியஸ் ,நூருல் அபூ யூனஸ் இவர்களின் தகப்பனாருமான மகபூப் அலி அவர்கள் புதுமனைத்தெரு கே.எஸ் எ காலனி யில் மௌத் .
அன்னாரின் ஜனாசா 11/09/2014 அன்று வியாழன் காலை 10 மணிக்கு நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்படும் .
அன்னாரின் ஜனாசா 11/09/2014 அன்று வியாழன் காலை 10 மணிக்கு நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்படும் .
Tuesday, 9 September 2014
நல்லாசிரியர் விருது பெற்ற கொடிநகர் அரசு பள்ளி ஆசிரியர்
ey;yhrphpaH tpUJ ngw;w MrphpaHfs; -
khtl;l Ml;rpj;jiytH KidtH.kh.kjpthzd;; ghuhl;b> tho;j;J
njhptpj;jhH.
jpUth&H khtl;lj;jpy; jkpof
murpd; ey;yhrphpaH tpUJ ngw;w MrphpaHfis khtl;l Ml;rpj;jiytH KidtH.kh.kjpthzd; ghuhl;b tho;j;J njhptpj;jhH.
Kd;dhs; FbauRj;jiytH
lhf;lH.,uhjhfpU\;zd; mtHfs; gpwe;jehisnahl;b rpwg;ghf gzpahw;wpa MrphpaHfSf;F jkpof murpdhy; MrphpaH jpdj;jd;W
(nrg;lk;gH 5 e;Njjp) ey;yhrphpaH tpUJ toq;fg;gLfpwJ. ,e;j Mz;bw;fhd jkpof murpd;
ey;yhrphpaH tpUJ jpUth&H khtl;lj;;;;;ij NrHe;j igq;fhl;^H Cuhl;rp xd;wpa eLepiyg;gs;spapd;
jiyikahrphpaH jpU.Nf.uh[khzpf;fk;>nka;nghUs; cjtpngWk; njhlf;fg;gs;spapd;
jiyikahrphpaH jpUkjp;.Rkjp> tp[aGuk; efuhl;rpeLepiyg;gs;spapd; Mrphpia jpUkjp.r.Njd;nkhop>jpUth&H
t.Nrh.Mz;fs; Nky;epiyg;gs;sp jiyikahrphpaH jpU.,uh.fps;sptstd;> nfhbf;fhy;ghisak;
muR Nky;epiyg;gs;sp jkpohrphpah; jpU.nj.KUifad;>kd;dhHFb khtl;l MrphpaH
fy;tp kw;Wk; gapw;rp epWtdj;jpd; KJepiy tphpTiuahsH jpU.MH.md;gofd;> Mfpa 6
MrphpaHfSf;F toq;fg;gl;Ls;sJ.
tpUJ ngw;w MrphpaHfSf;F
khtl;l Ml;rpj;jiytH KidtH.kh.kjpthzd;.. nghd;dhil NghHj;jp>
,dpg;Gfs; toq;fp ghuhl;b tho;j;J njhptpj;jhH.
,e;j epfo;r;rpapy; Kjd;ik
fy;tp mYtyH jpUkjp.ny.epHkyh> fy;tpj;Jiw mYtyHfs; fye;J nfhz;ldH.
எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு: 180 மாணவர்களுக்கு அனுமதிக் கடிதம்
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்ப்பதற்காக திங்கள்கிழமை நடைபெற்ற இறுதிக் கட்ட கலந்தாய்வில் 180 பேருக்கு அனுமதிக் கடிதம் வழங்கப்பட்டது.
அகில இந்திய ஒதுக்கீட்டின் அடிப்படையில், அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்ந்த பிறகு சமர்ப்பிக்கப்பட்டுள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். காலியிடங்கள், தமிழகத்தில் உள்ள சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் ஏற்பட்டுள்ள காலியிடங்கள், சென்னை பாரிமுனை அரசு பல் மருத்துவக் கல்லூரியில் ஏற்பட்டுள்ள பி.டி.எஸ். காலியிடங்கள், சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் ஏற்பட்டுள்ள அரசு ஒதுக்கீட்டு காலியிடங்கள், மேலும், மாணவர்கள் தங்கள் விருப்பத்தின் பேரில் கல்லூரிகளை மாற்றிக் கொள்வதற்கான மறுஒதுக்கீடு ஆகியவற்றுக்கான கலந்தாய்வு நடைபெற்றது.
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி அரங்கில் நடைபெற்ற இறுதிக் கட்ட கலந்தாய்வின் முதல் நாளான திங்கள்கிழமை 500 பேர் பங்கேற்றனர்.
கலந்தாய்வின் முடிவில் 180 பேருக்கு அனுமதிக் கடிதம் வழங்கப்பட்டது.
கலந்தாய்வின் முதல் நாளான திங்கள்கிழமை மாலை, அரசு மருத்துவக் கல்லூரிகளில் 62 எம்.பி.பி.எஸ். காலியிடங்கள் ஏற்பட்டுள்ளன. சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியில் 41 எம்.பி.பி.எஸ். இடங்கள், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரியில் 9 எம்.பி.பி.எஸ். இடங்கள், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் 6 எம்.பி.பி.எஸ். இடங்கள், கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரியில் 5 எம்.பி.பி.எஸ். இடங்கள், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் 1 எம்.பி.பி.எஸ். இடம் என மொத்தம் 62 காலியிடங்கள் ஏற்பட்டுள்ளன.
மேலும், சென்னை கே.கே. நகர் இஎஸ்ஐசி மருத்துவக் கல்லூரி உள்பட சுயநிதி மருத்துவக் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். காலியிடங்களையும் நிரப்ப செவ்வாய்க்கிழமை (செப்.9) கலந்தாய்வு நடைபெறுகிறது.
Monday, 8 September 2014
நவம்பர் 1ல் இருந்து ஏ.டி.எம். கட்டணம்.
வரும் 2014 நவம்பர் மாதம் 1ம் தேதியில் இருந்து நீங்கள் கணக்கு வைத்துள்ள வங்கி ஏ.டி.எம்.மில் மாதத்திற்கு மொத்தம் 5 முறை மட்டுமே இலவசமாக பணம் எடுக்கலாம். நீங்கள் ஏ.டி.எம்.மில் உங்கள் வங்கி கணக்கில் எவ்வளவு பணம் இருப்பு உள்ளது என்பதை பார்த்தாலும் அதுவும் அந்த 5 முறையில் அடங்கும்.
மேலும் கணக்கு இல்லாத வங்கியின் ஏ.டி.எம்.மில் மாதம் 3 முறை மட்டுமே இலவசமாக பணம் பரிவர்த்தனை செய்ய முடியும்.
5 மற்றும் 3 முறைக்கு அதிகமாக ஏ.டி.எம். கார்டுகளை பயன்படுத்தினால் ஒவ்வொரு முறையும் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்.

Sunday, 7 September 2014
நமதூர் மௌத் அறிவிப்பு 07/09/2014
அன்னாரின் ஜனாசா 7/9/2014 அன்று முற்பகல் 11:30 மணிக்கு நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்படும் .
Saturday, 6 September 2014
திருவாரூரில் மமக நடத்திய ஆர்ப்பாட்டம் 03.09.2014
Friday, 5 September 2014
போலீஸ் வெரிபிகேஷன்' இனி தேவையில்லை
அரசு வேலைக்கு தேர்வானவர்கள் மற்றும் பாஸ்போர்ட் கோரி விண்ணப்பித்த வர்களுக்கு இனிமேல், 'போலீஸ் வெரிபிகேஷன்' எனப்படும், போலீசின் நற்சான்று தேவைப்படாது. சம்பந்தப்பட்டவரின் சுயஒப்புதலே போதுமானது என, மத்திய அரசு விரைவில் அறிவிப்பு வெளியிட உள்ளது.
பிரதமர், நரேந்திர மோடி தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மத்தியில் ஆட்சி பொறுப்புக்கு வந்ததில் இருந்து, பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.சமீபத்தில், அரசு வேலை மற்றும் அரசிடம் இருந்து பிற தகவல்களை பெற விண்ணப்பிப்பவர்கள், விண்ணப்ப படிவங்களில், அரசு அங்கீகாரம் பெற்ற, உயரதிகாரிகளிடம் கையெழுத்து பெறத் தேவையில்லை; அத்தகையவர்களின் சுய ஒப்புதலே போதுமானது என, மத்திய அரசு அறிவித்தது.
இதனால், அதிகாரிகளுக்கு பணம் கொடுத்து, ஒப்புதல் பெற வேண்டிய தேவையில்லாமல் போனது.இப்போது அதில் கூடுதல் சலுகையாக, அரசு வேலை பெற்றவர்கள் மற்றும் பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்தவர் களுக்கு நடத்தப்படும், போலீஸ் விசாரணை தேவையில்லை என, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அதற்கு பதில் வேலை கிடைத்தவர்கள் மற்றும் பாஸ்போர்ட் கோரி விண்ணப்பித்த வர்களின் சுய ஒப்புதல் உறுதிமொழியே போதும் என, அரசு விரும்புகிறது. இதன் மூலம், கால விரயம் தவிர்க்கப்படுவதுடன், லஞ்சம் கொடுக்கப்படுவதும் தடுக்கப்படும் என, அரசு நம்புகிறது.

எனினும், இதில் உடனடியாக அறிவிப்பு வெளியிடாமல், சம்பந்தப்பட்ட துறைகள் மற்றும் மாநில அரசுகளிடம் கருத்து கேட்டறிந்த பிறகு, அறிவிப்பு வெளியிட உள்ளது.இதற்கான பரிந்துரையை செய்துள்ள, மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறையை பரிசீலித்து, அதற்கான உத்தரவை, மத்திய உள்துறை அமைச்சகம் விரைவில் வெளியிட உள்ளது.
திருவாரூரில் செப். 11-ல் மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் போட்டி
திருவாரூரில் செப். 11-ம் தேதி அண்ணா பிறந்த நாளையொட்டி, மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் போட்டி நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
செப். 15-ம் தேதி அண்ணா பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மாவட்ட விளையாட்டுப் பிரிவு சார்பில் பள்ளி மாணவர்களுக்கான சைக்கிள் போட்டி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் செப். 11-ம் தேதி காலை 7.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
போட்டியில் பங்கேற்போர், சொந்த செலவில் சைக்கிள் கொண்டு வர வேண்டும். போட்டி தொடங்கும் ஒரு மணி நேரத்துக்கு முன்பு வயது சான்றிதழுடன் வர வேண்டும். 13 வயதுக்குள்பட்ட மாணவர்களுக்கு 15 கி.மீ., 15 மற்றும் 17 வயதிற்குள்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ., 13 வயதிற்குள்பட்ட மாணவிகளுக்கு 10 கி.மீ., 15 மற்றும் 17 வயதிற்குள்பட்ட மாணவிகளுக்கு 15 கி.மீ. தொலைவும் போட்டி நடைபெறும்.
சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியரிமிருந்து கட்டாயம் வயது சான்றிதழ் பெற்று வரவேண்டும்.
ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை 04366- 227158 தொடர்பு கொள்ளலாம்.

Thursday, 4 September 2014
72 ஆயிரம் பேரின் ஆசிரியர் தகுதிச் சான்றிதழ்கள் இணையதளத்தில் பதிவேற்றம்
கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 72 ஆயிரம் பேருக்கான ஆசிரியர் தகுதிச் சான்றிதழ்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் இந்தச்
சான்றிதழ்கள் புதன்கிழமை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் இரண்டு தாள்களிலும் சேர்த்து 72 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்கள் அனைவருக்குமான ஆசிரியர் தகுதிச் சான்றிதழ்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
அதோடு, அதற்கு முந்தைய தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று தகுதிச் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளாத 180 பேரின் தகுதிச் சான்றிதழ்களும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. தேர்வர்கள் தங்களது பதிவெண்ணை இணையதளத்தில் பதிவு செய்த பிறகு, சான்றிதழில் இடம்பெறும் பெயர், புகைப்படம் உள்ளிட்ட விவரங்களைச் சரிபார்க்க வேண்டும். அவற்றைச் சரிபார்த்தவுடன் சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தச் சான்றிதழ்கள் ஒரு வாரம் வரை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் இருக்கும் என அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன

Wednesday, 3 September 2014
நீடாமங்கலம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேர் பலி அரசு பஸ் மோதியது
நீடாமங்கலம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேர் அரசு பஸ் மோதி உயிரிழந்தனர்.
திருவாரூர் மாவட்டம் விஜயபுரம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் சபூர்கான். இவருடைய மகன் சலீம்கான் (வயது26). விஜயபுரம் மேட்டுப்பாளையம் தெருவை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் மகன் யோகேஷ்(26). சலீம்கானும், யோகேசும் நேற்று காலை தஞ்சாவூரில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு சென்றுவிட்டு, மதியம் திருவாரூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். நீடாமங்கலம் அருகே உள்ள வையகளத்தூர் முடுக்குதோப்பு பகுதியில் இவர்கள் சென்ற போது வேளாங்கண்ணியில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற அரசு பஸ்சும், மோட்டார்சைக்கிளும் நேருக்கு நேர் மோதின. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற சலீம்கான், யோகேஷ் ஆகியோர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
பஸ் மோதியது

போலீசார் விசாரணை
விபத்தில் அரசு பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்து சேதமடைந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த நீடாமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சலீம்கான், யோகேஷ் ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நீடாமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Subscribe to:
Posts (Atom)