வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக வந்த குற்றச்சாட்டை அடுத்து, தஞ்சாவூர், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்த தொகுதிகளுக்கு நவம்பர் 19 ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கபட்டு உள்ளது. அது போல் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் வெற்றிபெற்ற வேட்பாளர் சீனிவேல் கடந்த மே 25-ந் தேதி மரணமடைந்தார்.இதை தொடர்ந்து திருப்பரங்குன்றம் தொகுதிக்கான இடைத்தேர்தல் தஞ்சாவூர், அரவக்குறிச்சி இரண்டு தொகுதிக்கான தேர்தலும் நடக்கும் தேதியிலேயே நடக்கிறது.
புதுச்சேரியில் நெல்லித்தோப்பு எம்.எல்.ஏ. ராஜினாமா செய்ததால், அந்த தொகுதியும் காலியாக உள்ளது. எனவே அந்த தொகுதியையும் சேர்த்து 4 தொகுதிக்குமான தேர்தல் தேதி நவம்பர் 19 என அறிவிக்கபட்டு உள்ளது.
நாடு முழுவதும் இது போல் 7 மாநிலங்களில் 12 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கபட்டு உள்ளது.
4 தொகுதிகளுக்குமான வேட்புமனு தாக்கல் அக்டோபர் 26 ந்தேதி ந்தேதி தொடங்குகிறது.வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் நவம்பர்- 2ந்தேதி, வேட்பு மனு வாபஸ் பெற கடைசி நாள் நவம்பர் 5 ந்தேதி,வேட்பாளர் இறுதி பட்டியல் 5 ந்தேதி மாலை வெளியிடப்படும். 22 ந்தேதி தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும்.
இது தொடர்பான தகவல்களை தேர்தல் ஆணையர் உமேஷ் சின்ஹா டெல்லியில் நிருபர்களிடம் தெரிவித்தார்.

No comments:
Post a Comment