Wednesday, 5 October 2016

உள்ளாட்சித் தேர்தல் ரத்து: மாநில தேர்தல் ஆணையம் மேல்முறையீடு

தமிழக உள்ளாட்சித் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து மாநில தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.
உள்ளாட்சித் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய முடிவெடுத்திருந்தது.
இதையடுத்து, மாநில தேர்தல் ஆணையம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு நாளை அல்லது நாளை மறுநாள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக உள்ளாட்சித் தேர்தலில் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படவில்லை என்று கூறி திமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்து நேற்று உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து மாநில தேர்தல் ஆணையம் இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

No comments:

Post a Comment