Wednesday, 25 March 2015

முத்துபேட்டை அருகே 50 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல்: 3 பேர் கைது




திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியில் புதன்கிழமை அதிகாலை 20 கிலோ கடத்தல் தங்கத்தை போலீஸார் பறிமுதல் செய்து 3 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியில் தங்கம் கடத்துவதாக கோவை மத்திய வருவாய் நுண்ணறிவு புலனாய்வுத்துறையினருக்கு தகவல் கிடைத்தையடுத்து போலீஸார் புதன்கிழமை அதிகாலை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

இந்தியாவில் தங்கம் இறக்குமதிக்கு வரி அதிகாிக்கப்பட்டதால் கடந்த ஓராண்டாக கட ல் மார்க்கமாகவும், விமானம் மூலமும் அதிகளவில் தங்கம் கடத்தப்பட்டு வருகிறது. இதைத்தடுக்கும் வகையில் மத்திய வருவாய் புலனாய்வு துறையினா் கடும் சோதனை செய்து கடத்தப்பட்டும் தங்கத்தை பறிமுதல் செய்து வருகின்றனர்.

நாகை மாவட்டம் வேதாரண்யம், திருவாரூர் மாவட்டம் கோடியக்கரை ஆகிய பகுதி களில் கடல் மார்க்கத்தை பயன்படுத்தி கடந்த ஓராண்டில் 10-க்கும் மேற்பட்ட முறை 500 கிலோக்கு மேல் தங்கம் பிடிபட்டு, பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியில் தங்கம் கடத்தப்படுவதாக கோவை மத்திய வருவாய் நுண்ணறிவு புலனாய்வுத் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலி ன்படி புதன்கிழமை அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டனா.

அப்போது முத்துப்பேட்டை புறவழிச்சாலையில் சந்தேகப்படும் வகையில் வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்த போது, காருக்குள் 21 கிலோ தங்கம் இருந்தது கண்டு பிடிக்கப்ட்டது. இதையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்து, கடத்தலில் ஈடுபட்ட 3 பே ரை கைது செய்து திருவாரூர் குமரன்கோயில் தெருவிலுள்ள மத்திய அரசின் சுங்கம் மற்றும் கலால் அலுவலகத்தில் வைத்து விசாரனை மேற்கொண்டு வருகிறன்றனா். தங்கம் கடத்தியவா்கள் சுதாகரன் என்பவர் உள்ளிட்ட இருவர் கல்லூரி மாணவர்கள் என்பது தெரியவந்தது. மேலும் முழு விவரம் போலீஸாரின் விசாரனைக்கு பின்னரே முழு விவரம் தெரியவரும்.

நன்றி 
தின மணி 

மோடி, 29-ந் தேதி சிங்கப்பூர் செல்கிறார்; லீ குவான் யூ இறுதிச்சடங்கில் பங்கேற்கிறார்

மறைந்த சிங்கப்பூர் முதல் பிரதமர் லீ குவான் யூவின் இறுதிச்சடங்கில் பங்கேற்க பிரதமர் மோடி சிங்கப்பூருக்கு செல்கிறார்.

காலமானார்

சிங்கப்பூரின் முதலாவது பிரதமரான லீ குவான் யூ நேற்று முன்தினம் காலமானார். அவருக்கு வயது 91. கடந்த சில நாட்களாக உடல்நல குறைவால், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்த அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.

குட்டித்தீவாக இருந்த சிங்கப்பூரை உலகமே வியக்கும் வண்ணம், சொர்க்கபுரியாக மாற்றிக்காட்டியவர்,லீ குவான் யூ ஆவார். அவர் 31 ஆண்டுகள், சிங்கப்பூரின் பிரதமராக இருந்தார். தனது அளப்பரிய முயற்சியால், சிங்கப்பூரை தொழில் வளத்திலும், பொருளாதாரத்திலும் முன்னேற செய்தார். இதனால், உலக தலைவர்கள் பலரின் மனம் கவர்ந்த தலைவராக உருவெடுத்தார்.

அவரது மறைவுக்கு பல்வேறு நாட்டுத்தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி பங்கேற்கிறார்

லீ குவான் யூவின் இறுதிச்சடங்குகள், 29-ந் தேதி நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திர மோடி, சிங்கப்பூருக்கு சென்று, இறுதிச்சடங்கில் நேரில் கலந்து கொள்கிறார். இத்தகவலை மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் நேற்று தெரிவித்தார்.

லீ குவான் யூ மறைவுக்கு பிரதமர் மோடி ஏற்கனவே இரங்கல் செய்தியும் வெளியிட்டுள்ளார்.

தூதரகங்களில் அஞ்சலி

இதற்கிடையே, பல்வேறு நாடுகளில் உள்ள சிங்கப்பூர் தூதரகங்களில் லீ குவான் யூ மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா.வுக்கான சிங்கப்பூரின் நிரந்தர தூதரகத்திலும் அந்நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் கலந்து கொண்டு, அங்கு வைக்கப்பட்டிருந்த இரங்கல் புத்தகத்தில் கையெழுத்திட்டார்.

இதுபோல், ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள சிங்கப்பூர் தூதரகத்துக்கு ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அங்கு வைக்கப்பட்டிருந்த இரங்கல் புத்தகத்தில் லீ குவான் யூ மறைவுக்கு புகழஞ்சலி செலுத்தி கையெழுத்திட்டார்.

திருவாரூர் புதிய பேருந்து நிலைய கட்டுமானம்: வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்தல்

திருவாரூர் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என நகராட்சிக் கூட்டத்தில் உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

திருவாரூரில் நகராட்சித் தலைவர் வே. ரவிச்சந்திரன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நகராட்சிக் கூட்டத்தில் உறுப்பினர்கள் பேசியது:

அசோகன் (திமுக): நகர் பகுதிகளில் மின்விளக்குகள் சரியாக எரியவில்லை. இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் கேட்டால் முறையான பதில் இல்லை.

டி. செந்தில் (திமுக): நகரில் ஆக்கிரமிப்புகள் கண்துடைப்புக்காக அகற்றப்படுகிறது. திங்கள்கிழமை ஆக்கிரமிப்புகள் அகற்றியப் பகுதிகளில் உடனடியாக அங்கு தரைக்கடைகள் போடப்படுகிறது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எம். சம்பத் (காங்கிரஸ்): புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் மந்த நிலையில் உள்ளது. தற்போது எவ்விதப் பணிகளும் நடைபெறவில்லை. பணிகளின் நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

ஆர்.டி. மூர்த்தி (அதிமுக): நகரில் குப்பைகள் அகற்றுவது குறித்து வார்டு உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவிப்பதில்லை. நகரிலுள்ள வார்டுகளில் குப்பைகள் அகற்ற ஒரு வரையறை செய்ய வேண்டும்.

வே. ரவிச்சந்திரன் (தலைவர்): நகரில் குப்பைகள் சுத்தம் செய்வது குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்படும்.

துப்புரவு பணியாளர்களின் கோரிக்கை ஏற்க மறுப்பு: கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, அண்ணா துப்புரவுத் தொழிலாளர் சங்கத் தலைவர் ஆர். ராஜேந்திரன் தலைமையில் தொழிலாளர்கள், துப்புரவுப் பணிக்கு கூடுதல் பணியாளர்கள் நியமிக்க வேண்டும், கூடுதல் பணிச்சுமை கொடுப்பதை தவிர்க்க வேண்டும், ஓய்வூதியம் பெறும் பணியாளர்களுக்கு குறித்த காலத்தில் பணப்பயன் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து கூட்டத்தில் தெரிவிக்க வந்தனர். அப்போது அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

முழு அடைப்பு போராட்டத்தையொட்டி வருகிற 28-ந் தேதி திருவாரூர் மாவட்டத்தில் பஸ்-ரெயில் மறியல்

முழு அடைப்பு போராட்டத்தையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் பஸ்-ரெயில் மறியல் செய்வது என அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

முழு அடைப்பு போராட்டம்

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் சென்னையில் அனைத்து கூட்டம் நடந்தது. கூட்டத்தில் காவிரியின் குறுக்கே அணை கட்ட முயற்சி செய்யும் கர்நாடக மாநில அரசை கண்டித்தும், கர்நாடகத்தின் முயற்சியை மத்திய அரசு தடுத்து நிறுத்தவும், காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் பங்கீட்டு ஒழுங்காற்று குழு ஆகியவற்றை உடனடியாக அமைக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் வருகிற 28-ந் தேதி மாநிலம்தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது.

அனைத்து கட்சி கூட்டம்

சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி திருவாரூர் மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துவது தொடர்பான அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் நேற்று திருவாரூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கிருஷ்ணமணி தலைமை தாங்கினார். இயற்கை உழவர் இயக்க மாநில செயலாளர் ஜெயராமன், மாவட்ட தலைவர் வரதராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தி.மு.க. மாவட்ட செயலாளர் பூண்டி கே.கலைவாணன் கலந்து கொண்டு பேசினார்.

நாம் தமிழர் கட்சி மண்டல ஒருங்கிணைப்பாளர்¢ சந்திரசேகரன், காங்கிரஸ் கமிட்டி மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், மனித நேய கட்சி நிர்வாகி சீனிஜெகபர்சாதிக், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகி மதிவாணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகி மகேந்திரன், தே.மு.தி.க. நகர செயலாளர் செந்தில், வர்த்தக நலச்சங்க மாவட்ட தலைவர் ராமமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

பஸ்-ரெயில் மறியல்

முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் நாளில் பஸ், ரெயில் மறியல் செய்வது. அனைத்து கட்சி பிரமுகர்கள், விவசாய சங்க நிர்வாகிகள் ஆகியோரை ஒருங்கிணைத்து திருவாரூரில் பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்துவது. காவிரியில் தமிழகத்திற்கு உண்டான உரிமையை மீட்பதற்காக நடைபெறும் இந்த முழு அடைப்பு போராட்டம் வெற்றிகரமாக நடைபெற பொதுமக்களை ஒத்துழைப்பு வழங்கும்படி கேட்டுகொள்வது என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tuesday, 24 March 2015

திருவாரூர் மாவட்டத்தில் நிரந்தர மையங்களில் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி


               
திருவாரூர் மாவட்டத்தில் நிரந்தர மையங்களில் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

ஆதார் அட்டை

திருவாரூர் மாவட்ட கலெக் டர் மதிவாணன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:-

திருவாரூர் மாவட்டத்தில் தேசிய மக்கள் தொகை கணக் கெடுப்பு பதிவேட்டினை அடிப்படையாக கொண்டு ஆதார் அட்டைக்கு புகைப் படம் எடுத்தல், உடற்கூறு பதிவு செய்தல் பணி நடை பெற்று வருகிறது. இந்த பணிக் காக திருவாரூர் மாவட்டத் தில் திருவாரூர், குடவாசல், நன்னிலம், வலங்கைமான், நீடாமங்கலம், திருத்துறைப் பூண்டி, மன்னார்குடி ஆகிய தாசில்தார் அலுவலகங்களி லும், திருவாரூர், மன்னார்குடி, கூத்தாநல்லூர், திருத் துறைப் பூண்டி ஆகிய 4 நகராட்சி அலுவலகங்களிலும் நிரந்தர மையங்கள் அமைக்கப் பட்டுள் ளன. திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் முதல் தளம் அறை எண். 47-லும் நிரந்தர மையம் செயல்பட்டு வருகிறது.

இதற்கு முன்னர் கிராமங்கள் மற்றும் தாலுகா தலைமை இடங்களில் நடத்தப்பட்ட முதல் சுற்று மற்றும் 2-ம் சுற்று முகாம்களில் உடற்கூறு பதிவு செய்யாதவர்கள், புகைப்படம் எடுக்காதவர்கள் நிரந்தர மையங்களில் அதை செய்து கொள்ளலாம்.

எடுத்து செல்ல வேண்டியவை

நிரந்தர மையங் களுக்கு குடும்ப அட்டை, ஓட்டுனர் உரிமம், பான்கார்டு, கடவு சீட்டு (பாஸ்போர்ட்), 2010-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது வழங்கப்பட்ட ரசீது நகல் ஆகியவற்றை எடுத்து செல்ல வேண்டும்.

ஆதார் அட்டை பணி களுக்காக தாலுகா அளவில் துணை தாசில்தார்கள், நக ராட்சி அலுவலகங்களில் அலுவலக மேலாளர் மற்றும் மாவட்ட அளவில் சிறப்பு செயலாக்க திட்டம் தனி துணை கலெக்டர் ஆகியோர் தொடர்பு அதிகாரிகளாக நிய மனம் செய்யப்பட் டுள் ளனர். அரசின் அனைத்து திட்டங் களுக்கும் ஆதார் அட்டை இன்றியமையாத ஆவணமாக பயன்படுத்தப்படு வதால் இதுவரை ஆதார் அட்டைக்கு பதிவு செய்யா தவர்கள் இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண் டும்.

இவ்வாறு அந்த அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் போலி டாக்டர்கள் 3 பேர் கைது


திருவாரூர் மாவட்டத்தில் போலி டாக்டர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதிரடி சோதனை

திருவாரூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் பலர் உரிமம் இன்றி ஆங்கில முறைப்படி பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சைகள் அளிப்பதாக மாவட்ட சுகாதார துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. இதைத்தொடர்ந்து திருவாரூர் மாவட்ட சுகாதார பணி துணை இயக்குனர் சுமதி, மருத்துவ பணிகள் இணை இயக்குனர் செங்குட்டுவன், வட்டார மருத்துவ அதிகாரி மகேஷ்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ராஜா, ஜெயந்தி ஆகியோரை கொண்ட தனிப்படையினர் திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மருந்து கடைகள், கடைவீதிகள், கிளீனிக்குகளில் அதிரடியாக சோதனை நடத்தினர்.

திருவாரூரை அடுத்த மாங்குடி பகுதியில் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த மோகனசுந்தரம் என்பவர் உரிய அனுமதி இன்றி பொதுமக்களுக்கு ஆங்கில முறையில் மருத்துவம் செய்து வந்தது தெரியவந்தது. அதிகாரிகள் சோதனை நடத்துவது குறித்து தகவல் அறிந்த அவர் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

3 பேர் கைது

போலி டாக்டர்களாக செயல்பட்டு வந்ததாக திருவாரூர் மாவட்டம் கடாரங்கொண்டான் பகுதியை சேர்ந்த ராஜ்மோகன் (வயது43) என்பவரும், கூடூரில் கலியபெருமாள் (70) என்பவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இதைப்போல மன்னார்குடி சாலை விளமலில் உள்ள ஒரு மருத்துவமனையில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அங்கு சித்தா முறை மருத்துவம் என்று கூறி, விளமலை சேர்ந்த பக்கிரிசாமி (வயது65) என்பவர் ஆங்கில முறையில் மருத்துவம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், மருத்துவமனையில் இருந்த மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்து சீட்டுகளை பறிமுதல் செய்தனர். திருவாரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் போலி டாக்டர்களாக பணியாற்றி வந்த ராஜ்மோகன், கலியபெருமாள், பக்கிரிசாமி ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவான மோகனசுந்தரம் என்பவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

பொதுமக்கள் குறைகளை தெரிவிக்க புகார் பெட்டிகள் திருவாரூர் மருத்துவக்கல்லூரி முதல்வர் பேட்டி

பொதுமக்கள் குறை களை தெரிவிக்க புகார் பெட்டிகள் வைக்கப்பட் டுள்ளதாக திருவாரூர் மருத்துவக்கல்லூரி முதல் வர் மீனாட்சிசுந்தரம் கூறி னார்.

புகார் பெட்டிகள்

திருவாரூர் மருத்துவக்கல் லூரி மருத்துவமனையில் செய்ய வேண்டிய வசதிகள் குறித்து ஆலோசனை தெரிவிக்கவும், வசதிகளில் உள்ள குறைபாடுகள் குறித்து புகார் தெரிவிக்க வசதியாக 3 இடங்களில் புகார் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் நவீன மருத்துவ கருவிகளும் புதிதாக பொருத்தப்பட் டுள்ளன.

இது தொடர்பாக திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்து வமனை முதல்வர் மீனாட்சி சுந்தரம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறிய தாவது:-

திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் அனைத் தும் முழுவீச்சில் நிறைவேற் றப்பட்டு வருகின்றன. மருத்து வமனையை எந்நேரமும் தூய்மையாக வைத்திருக்கும் வகையில் நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளது. அவசர சிகிச்சைகளுக்கு உடனுக்குடன் திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலேயே மருத் துவம் பார்க்கப்படுகிறது.

அறுவை சிகிச்சைகள்

கடந்த மாதம் கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு திருவாரூர் மருத்துவமனையிலேயே டாக்டர்கள் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்தார்கள். அதேபோல ரத்தம் தொடர்பான நோய் களால் பாதிக்கப்பட்டிருந்த 8 மாத கர்ப்பிணி பெண்ணுக்கு நல்ல முறையில் பிரசவம் பார்க்கப் பட்டது. தனியார் மருத்துவ மனையில் ரூ.3½ லட்சம் செலவு பிடிக்கும் இந்த சிகிச்சை இலவசமாக மருத் துவக்கல்லூரியில் பார்க்கப் பட்டது. உயர்ந்த தரத்தில் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்க திருவாரூர் மருத்துவக் கல்லூரியில் அனைத்து வசதி களும் தயார் நிலையில் உள்ளன.

நவீன கருவிகள்

நவீன இ.சி.ஜி., செயற்கை சுவாச கருவிகள், உயிர் காக்கும் மருந்துகள் அடங்கிய கருவிகள், ரத்த அழுத்தம், ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு கண்டு பிடிக்கும் கருவி, காது அகநோக்கி உள்ளிட்ட கருவிகள் மருத்துவமனையில் பொருத் தப்பட்டுள்ளன.

மருத்துவமனையில் உள்ள குறைபாடுகளை பொதுமக்கள் எழுத்து மூலமாக தெரிவிப் பதற்கு வசதியாக நுழைவாயில், முதல்வர் அலுவலகம், புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு ஆகிய இடங்களில் புகார் பெட்டிகள் புதிதாக வைக்கப் பட்டுள்ளன. இந்த புகார் பெட்டிகள் மூலமாக பொது மக்கள் தங்கள் புகார்களை, கோரிக்கைகளை, ஆலோசனைகளை தெரிவிக் கலாம்.

இவ்வாறு அவர் கூறி னார்.

திருவாரூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்


               
திருவாரூர் நகர பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்திய ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இடையூறு

திருவாரூர் நகரில் கடைவீதி உள்ளிட்ட பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த இடங்களில் தரை கடைகள், தள்ளுவண்டி கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களின் ஆக்கிரமிப்புகள் அதிகமாக காணப்பட்டன. இதனால் நகர பகுதிக்குள் வாகன போக்குவரத்துக்கும், பாதசாரிகளின் நடமாட்டத்திற்கும் இடையூறு ஏற்பட்டது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர்.

நகரசபை கூட்டங்களின்போது நகர மன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் அதை உடனடியாக அகற்றி கொள்ள வேண்டும் என திருவாரூர் நகராட்சி சார்பில் கடந்த சில நாட்களாக அறிவிப்பு செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் நகராட்சி நிர்வாகம் அதிரடியாக ஈடுபட்டது.

அகற்றம்

இதில் திருவாரூர் பஸ்நிலையத்தில் தொடங்கி கடைவீதி வரை இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. ஆக்கிரமிப்பு அகற்றும் பணிக்கு முன்பாக சில வர்த்தக நிறுவனங்கள் தாமாகவே முன்வந்து தங்கள் கடை முன்பு இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி கொண்டனர். சில கடைகள் முன்பாக சிமெண்டு தளங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இவற்றை நகராட்சி பணியாளர்கள் நேற்று பொக்லின் எந்திரத்தின் உதவியுடன் உடைத்தனர். அதேபோல நடை பாதை கடைகள் முழுவதுமாக அகற்றப்பட்டன.

நகராட்சியின் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிக்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக பொதுமக்கள் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆக்கிரமிப்பை அகற்றுவது வரவேற்கத்தக்கது. ஆனால் ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் சடங்கு போல ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதை ஏற்று கொள்ள முடியாது. ஆக்கிரமிப்பை அகற்ற ஆண்டுதோறும் நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் மீண்டும் கடைகாரர்கள் நடைபாதையை ஆக்கிரமித்து கொள்கிறார்கள். எனவே மாதத்திற்கு 2 முறையாவது ஆய்வு நடத்தி, உடனுக்குடன் ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு செய்தால் போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும் குறையும். இவ்வாறு பொதுமக்கள் கூறினர்.

ஞாபக சக்தி அதிகரிக்க

 

  ஞாபக சக்தி பெருக தினமும் பப்பாளி, மாதுளம்பழம் சாப்பிடுவது நல்லது.
  வெந்நீரில் தேனைக் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.
  மிளகை எடுத்து நன்றாக இடித்து பொடி செய்து தேனில் தூவி சாப்பிட்டு வந்தால் மறந்து போகுதல் குறைந்து நினைவாற்றல் அதிகரிக்கும்.
  பீர்க்கங்காய் வேரை கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால் மூளை பலம் பெறும். ஞாபக சக்தி அதிகரிக்கும்.
  பசலைக்கீரை சாப்பிட நினைவாற்றல் அதிகரிக்கும்.
  பாதாம் பருப்பு, வெண்டைக்காய், உருளைக்கிழங்கு, தக்காளி இலை ஆகியவற்றை தினமும் உணவில் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தி கூடும்.
  செம்பருத்திப் பூவில் உள்ள மகரந்தக் காம்பை நீக்கிவிட்டு சாப்பிட ஞாபக சக்தி அதிகரிக்கும்.
  முளைக்கீரையுடன் வல்லாரைக் கீரை சேர்த்து பருப்புடன் சாப்பிட நினைவாற்றல் அதிகரிக்கும்.
  துளசி இலையை தினசரி சாப்பிட ஞாபக சக்தி அதிகரிக்கும்.
  தூதுவளையை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தாலும் ஞாபகசக்தி பெருகும்.

வலைதள கருத்துக்காக கைது செய்யும் மத்திய அரசின் 66-ஏ பிரிவு சட்டம் செல்லாது: சுப்ரீம் கோர்ட்

சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்ததற்காக கைது செய்வதற்கு உச்சநீதிமன்றம் அதிரடியாக தடை விதித்துள்ளது.

அத்துடன் இத்தகைய கைது நடவடிக்கைக்கு பயன்படுத்துகிற தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 66-ஏ பிரிவு செல்லாது என்றும் உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.மத்திய அரசு 2008 ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது. அதில் சேர்க்கப்பட்ட 66 ஏ பிரிவின் படி, சமூக வலைதளம், மின் அஞ்சல் போன்றவற்றின் மூலமாக அவதூறான கருத்துகளை பரப்புவோரை கைது செய்து 3 ஆண்டுகள் வரை சிறையிலடைக்க முடியும்.இந்த 66 ஏ பிரிவின் படி நாடு முழுவதும் வலைதளங்களில் சர்ச்சை கருத்தை தெரிவித்த குற்றச்சாட்டின் கீழ் பலரும் கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டனர். இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இதனை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் செலமேஸ்வர், நாரிமன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், 66- ஏ சட்டப் பிரிவு அரசியல் சாசனத்துக்கு எதிரானது. இந்த சட்டப்பிரிவு தெளிவானதாக இல்லை.அரசாங்கம் என்பது வரலாம், போகலாம். ஆனால் சட்டத்தை தவறாகப் பயன்படுத்தக் கூடாது. அரசியல் சாசனத்தில், அனைவருக்கும் தங்களது கருத்துகளை வெளிப்படுத்த சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது.இதற்கு எதிராக இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த 66-ஏ பிரிவு செல்லாது. வலைதளத்தில் சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை தெரிவித்தார் என்பதற்காகவே ஒருவரை கைது செய்யவும் தடை விதிக்கப்படுகிறது என்று அதிரடியான தீர்ப்பை அளித்துள்ளது.

Monday, 23 March 2015

ஜமாஅத் புதிய நிர்வாகிகள் தேர்வு

.
கொடிக்கால் பாளையம் முஹ்யித்தீன் 
ஆண்டவர்கள் பள்ளிவாசல் ஊர் உறவின் முறை ஜமாஅத் தேர்தல் 2015

மாற்றி அமைக்கப்பட்ட சட்ட பரிபாலன முறையில் நடைபெறும் இரண்டாவது தேர்தல் இதுவாகும் . நாட்டாண்மை முறை மாற்றப்பட்டு தலைவர் பதவி ஏற்படுதபட்டது . 
    மகாஜன சபை கூட்டம் பொறுப்பு விலகும் தலைவர் ரபீயுதீன் தலைமையில் 2015 மார்ச் 22 ஆம் நாள் அன்று
நடைபெற்றது . புதிய நிருவாகிகள் தேர்தல்  நீதிமன்ற உத்தரவுப்படி தஞ்சாவூர் வக்ப் வாரிய கண்காணிப்பாளர் தேர்தல் அதிகாரியாக செயல்பட்டு முறையாக நடைபெற்றது.  இதில்




தலைவர்


ஜெயம் தெரு ஜலாலுதீன்



செயலாளர்        

தெற்கு தெரு ஹாஜா நஜூபுதீன்









துணைத்தலைவர் (பள்ளிவாசல் பொறுப்பு )

தெற்கு தெரு ஜபரூதீன்







பொருளாளர்   
பர்மா தெரு கீ.வா.மு.அ சலாவுதீன்








ஆடிட்டர்

நடுத்தெரு மு அ அப்துல் பத்தாஹ்







52 பணப்பகுதி பொருளாளர

தெற்கு தெரு முஹம்மது  மெய்தீன்






தீனா ஹாஜி இப்ராஹிம்சா  ராவுத்தர் தர்ம அறக்கட்டளை 
 அடிசனல் ட்ரஸ்ட்


புதுமனைத்தெரு செ மு மு அப்துல் ஹமீது

ஆகியோர் நிருவாக சபைக்கு தேர்த டுக்கபட்டனர் 


மொத்தம் பிரதிநிதிகள் = 21


தெரு தொகுதியில்  வெற்றி பெற்றவர்கள்  விபரம் 

மேலத்தெரு  
        
       அப்பாகனி@முஹம்மது இஸ்மாயில்
        முஹம்மது ஆதம்


பர்மா தெரு


முஹம்மது  சலாவுதீன்

   
முஹம்மது  ஜெகபர்



பள்ளிவாசல் தெரு 
       
       முஹம்மது இனயதுல்லாஹ் (மஸ்தான் )



தெற்கு தெரு
     
         பஜலுதீன்
       ஜகபரூதீன்
        முஹம்மது  மெய்தீன்
         ஹாஜா நஜூபுதீன்



நடுத்தெரு 
       ப மு மு ஹபிபுல்லாஹ் 
       மு அ  அப்துல் பத்தாஹ்
       முஹம்மது  அலி
        முஹம்மது அன்சாரி
         ஜாகிர் ஹூசேன்








வடக்கு தெரு

முஹம்மது அலி

குலாம் ரசூல் 

புதுமனைத் தெரு 


செ மு மு அப்துல் ஹமீது

மலாயாத் தெரு 


R S அமாணுல்லாஹ்

ஜெயம் தெரு 

  M M ஜலாலுதீன்

நூர்தீன்



இதில் ஜமாத்தார்கள் பெருஅளவில் கலந்து கொண்டனர் .







































ஜெயம்தெரு 






   புதிய நிர்வாகம் வரும் 2012  மார்ச் 4 ஆம் தேதி ரபியுல் ஆகிர் பிறை 11 அன்று பொறுப்புகளை 
     
நாட்டாண்மை

செயலாளர்
பெருளாளர்

தணிக்கையாளர்

52 பணப்பகுதி காசாளர்

தீனா இப்ராஹிம்சா  ராவுத்தர் தர்ம அறக்கட்டளை 
                                                         உறுப்பினர் 









-

Saturday, 21 March 2015

குடிமைப் பணிக்கான மாதிரி ஆளுமைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்



 
2014-ம் ஆண்டிற்கான மத்திய தேர்வாணையத்தின் முதன்மை தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன், குடிமைப் பணிக்கான மாதிரி ஆளுமைத் தேர்வு எண். 163/1, பி.எஸ்.குமாரசாமி ராஜா சாலை, சென்னை-28 காஞ்சி வளாகத்தில் அமைந்துள்ள அகில இந்திய குடிமைப் பணித் தேர்வு பயிற்சி மையத்தில் நடத்தப்படும்.

மாணவ/மாணவியர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பப்படிவம் முதன்மை தேர்வுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன் இரண்டு அலுவலக வேலை நாட்களில் இப்பயிற்சி மைய அலுவலகத்தில் வழங்கப்படும்.
தமிழ் நாட்டைச் சார்ந்த அனைத்து மாணக்கர்களும் இப்பயிற்சிக்கு சேர தகுதியுடையவர்கள் ஆவர். இப்பயிற்சி மையத்தில் பயின்றவர்கள் தவிர இதர பயிற்சி மையத்தில் பயின்ற மாணவ/மாணவியர்களும், எந்த பயிற்சி மையத்திலும் சேராமல் தனியே தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களும் பயிற்சிக்கு சேர்த்துக் கொள்ளப்படுவர்.

தகுதிபெற்ற மாணக்கர்கள் இப்பயிற்சி மையத்தில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், மூன்று புகைப்படம், முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்பித்த விண்ணப்ப நகல்  ஆகியவற்றை சமர்ப்பித்து தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மத்திய தேர்வாணையம் நடத்தும் நேர்காணலை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் வகையில் தகுதி பெற்ற மாணவ/மாணவியர்களுக்கு பயிற்சி அளிக்கும் பொருட்டு, இப்பயிற்சி மையத்தில், மூத்த இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல் பணி அலுவலர்களையும், கல்லூரிகளின் பேராசிரியர்களையும் கொண்ட குழு அமைக்கப்பட்டு, மாதிரி ஆளுமைத் தேர்வும், சிறப்பு வகுப்புகளும், நடத்தப்படுகிறது. ஆளுமைத் தேர்வுக்கு, புது டெல்லி செல்லும் மாணவ/மாணவியர்களுக்கு பயணப்படியாக ரூ. 2000/- வழங்கப்படுகிறது. மேலும் பத்து நாட்கள் தமிழ்நாடு இல்லத்தில் தங்கி ஆளுமைத் தேர்வில் கலந்து கொள்ள ஏற்பாடுகளும் இப்பயிற்சி மையத்தால் செய்யப்பட்டு வருகிறது.
 
2014-ம் ஆண்டிற்கான மத்திய தேர்வாணைய குழுவின் முதன்மை தேர்வுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன், மாதிரி ஆளுமைத் தேர்வு நடத்தப்படும் நாட்கள் பற்றி விவரம் இப்பயிற்சிமைய இணைய தளத்தில் வெளியிடப்படும்.

மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
 
முதல்வர்,
அகில இந்திய குடிமைப் பணித் தேர்வு பயிற்சி மையம்,
சென்னை-28.
தொலைபேசி எண். 044-24621475.

Friday, 20 March 2015

BSNL - பாரத் சஞ்சார் சேவைகள் நிறுவனத்தில் 5842 பணியிடங்கள்



நமது நாட்டில் லாப நோக்கமில்லாமல் கிராமப்புறங்களில்கூட தொலைத்தொடர்பு சேவையை வழங்கிவருவது பாரத் சஞ்சார் சேவைகள் (பிஎஸ்எல்). நிறுவனம்தான்.
இந்நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 5842  Supervisor, Security Officer, Field Officer, Clerk, Security Commander, Soldier, Watchman, Computer Operator, Peon பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமுண் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்கள்: 5842
நிறுவனம்: Bharat Sanchar Services (BSS)
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Security Officer - 322
2. Field Officer - 250
3. Clerk - 230
4. Supervisor - 1500
5. Security Commander - 750
6. Soldier - 850
7. Night Watchman - 1200
8. Computer Operator - 190
9. Peon - 550

தகுதிகள்: எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
வயதுவரம்பு: 18 - 40க்குள் இருக்க வேண்டும்.


சம்பளம்:
Security Officer பணிக்கு மாதம் ரூ.  7001 – 15500
Field Officer பணிக்கு மாதம் ரூ.6950 – 14500
Clerk பணிக்கு மாதம் ரூ.6850 – 14200
Supervisor பணிக்கு மாதம் ரூ.6550 – 13500.
Security Commander பணிக்கு மாதம் ரூ. 6150 – 13500
Soldier பணிக்கு மாதம் ரூ. 5850 – 12500
Night Watchman பணிக்கு மாதம் ரூ. 4550 – 9200
Computer Operator பணிக்கு மாதம் ரூ. 6650 – 13900
Peon பணிக்கு மாதம் ரூ. 4900 – 9800.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி
:
Secretary, Bharat Services,
Bocha Chak, Janipur Road,
Phulvari Sharif, Patna – 801 505


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.03.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.bssindia.co.in/pdf/Bharat%20Sanchar%20Service.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

ரேஷன் பொருட்கள் குறைபாடு இருந்தால் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் : அமைச்சர் காமராஜ்



தமிழ்நாடு மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அலுவலர்களின் செயல்பாடுகள் குறித்த மாநில அளவிலான ஆய்வுக் கூட்டம், 20.03.2015 இன்று சென்னை, சேப்பாக்கம் எழிலகத்தில் உணவு, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் இரா.காமராஜ் தலைமையில் நடைபெற்றது.
இன்று வரை 11 இலட்சத்து 6 ஆயிரத்து 453 புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் 3 இலட்சத்து 56 ஆயிரத்து 738 போலி அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டு ரத்து செய்யப்பட்டுள்ளன என்று தமிழக அமைச்சர் இரா. காமராஜ் தெரிவித்தார்.
அமைச்சர் புதிய குடும்ப அட்டைகள் கோரி பெறப்படும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து 60 நாட்களுக்குள் அட்டைகள் வழங்கப்பட வேண்டுமென்று அறிவுறுத்தினார்.
போலி குடும்ப அட்டைகளை களைய நடவடிக்கைகள் மேற்கொண்டு, நியாயவிலைக் கடைகள் வேலை நேரத்தில் திறக்கப்பட்டு விநியோகம் சீரான முறையில் நடைபெறுவதையும், பொது விநியோகத் திட்ட கிடங்குகளிலிருந்து, நியாய விலை அங்காடிகளுக்கு நகர்வு செய்யப்படும் லாரிகள், மாவட்ட ஆட்சியரால் அங்கீகரிக்கப்பட்ட வழித்தடங்களிலேயே நகர்வு செய்யப்பட்டு, அரிசி மூட்டைகளின் எடையை துல்லியமாக குறிப்பிட்டு, அங்காடிகளுக்கு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டுமென்றும் அமைச்சர் அறிவுறுத்தினார்.
பொது விநியோகத் திட்டத்தில் காணப்படும் குறைபாடுகளை களைவதற்கு, உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மூலமாக மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமைகளில் நடத்தப்படும் குறைதீர் முகாம்களில், ஜுன் 2011 முதல் மார்ச் 2015 வரையிலான காலத்தில் 3 இலட்சத்து 42 ஆயிரத்து 482 மனுக்கள் பெறப்பட்டு, அவற்றில் 3 இலட்சத்து 26 ஆயிரத்து 629 மனுக்கள் அன்றைய தினத்திலேயே தீர்வு செய்யப்பட்டும், மீதமுள்ள 15 ஆயிரத்து 853 மனுக்கள் பின்னரும் தீர்வு செய்யப்பட்டுள்ளன.
பொது மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ள இவ்வகை முகாம்களை நடத்தும் ஒரே மாநிலம் இந்தியாவிலேயே தமிழ்நாடு மட்டும்தான்.
நுகர்வோர் வாங்கும் பொருட்களின் தரம் தொடர்பான குறைபாடுகள் குறித்து தொலைபேசி, மின்னஞ்சல் மூலம் உடனுக்குடன் தீர்வு காண, மாநில நுகர்வோர் சேவை மையத்தினை 044 – 28 59 28 28 என்ற தொலைபேசி எண்ணிலும், consumer@nic.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொண்டு பயன் பெறலாம். மேலும் கீழ்க்கண்ட கைபேசி எண்களில் குறுஞ்செய்திகளும் அனுப்பலாம் 72999 8002, 86800 18002,  86800 28003  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thursday, 19 March 2015

திருவாரூரில் பாதுகாப்பு ஒத்திகை

கடலோரரக் கிராமங்களில் பாதுகாப்பை உறுதி செய்ய நடத்தப்படும் "ஆம்லா ஒத்திகை' , திருவாரூரில் புதன்கிழமை தொடங்கியது.


கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பை உறுதி செய்யவும், தீவிரவாதத் தாக்குதலை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்கும் வகையிலும், இந்த ஒத்திகை நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் புதன் மற்றும் வியாழக்கிழமையில், திருவாரூர் மாவட்டங்களில் ஒத்திகை ஆம்லா நடைபெறுகிறது


திருவாரூர் மாவட்டத்தில் முத்துப்பேட்டை கடல் பகுதியில் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு காவல்துறையினர் சென்று ஒத்திகை நிகழ்ச்சியில் ஈடுபட்டனர். தவிர திருவாரூர் தியாகராஜர் கோயில், மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயில், முத்துப்பேட்டை தர்கா, தேவாலயம் மற்றும் பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து, ரயில் நிலையம், நீதிமன்ற வளாகம், ஓஎன்ஜிசி நிறுவனம், மின் நிறுவனம், எரிவாயு சேமிப்பு கிடங்கு என முக்கிய இடங்களில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தினர். மாவட்டத்தில் 3 டிஎஸ்பிக்கள், 10 ஆய்வாளர்கள், 250 காவல்துறையினர் இந்த ஒத்திகையில் பங்கேற்றனர்.

திருவாரூர் மாவட்டத்தில்19,292 பேர் எஸ்எஸ்எல்சி தேர்வு எழுதுகின்றனர்

தமிழகம் முழுவதும் எஸ்எஸ்எல்சி தேர்வுகள் வியாழக்கிழமை தொடங்கவுள்ளன. திருவாரூர் மாவட்டத்தில் 19,292 மாணவர்கள் எஸ்எஸ்எல்சி தேர்வு எழுதுகின்றனர்


.
திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, நன்னிலம், குடவாசல் என மாவட்டம் முழுவதும் 57 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. இதில் 9,449 மாணவர்கள், 9,843 மாணவிகள் என மொத்தம் 19,292 பேர் தேர்வு எழுதுகின்றனர். கல்வி அலுவலர்கள் தலைமையில் பறக்கும் படையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர்.

Saturday, 14 March 2015

திருவாரூர் மாவட்டத்தில் குடிநீர் விழிப்புணர்வு வாரம் கொண்டாட முடிவு: ஆட்சியர்


திருவாரூர் மாவட்டத்தில் அனைத்து ஒன்றியங்களிலும் குடிநீர் விழிப்புணர்வு வாரம் கொண்டாட முடிவெடுக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன் தெரிவித்தார்.

ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேசிய ஊரக குடிநீர் மற்றும் சுகாதார விழிப்புணர்வு வாரம் குறித்த முன்னேற்பாடு கூட்டத்தில் அவர் மேலும் பேசியது:

நம் உடல்நலம் பேணுகின்ற குடிநீரின் தன்மையில் காணும் பாதிப்பை பொதுமக்கள் முன்னிலையில் பரிசோதித்து அவர்கள் பருகும் நீரின் தன்மையை உணர்த்த குடிநீர் விழிப்புணர்வு வாரம் என்ற முகாம் நடத்தப்பட உள்ளது.

பொதுமக்களுக்கு குடிநீரின் தரம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல், தரமற்ற குடிநீரால் பரவக்கூடிய நோய்கள் பற்றி மக்கள் அறிந்துகொள்ள ஏதுவாக ஒன்றிய அளவில் விழிப்புணர்வு பேரணிகள் நடைபெறவுள்ளது.

குடிநீரை பரிசோதனை செய்வதற்குத் தேவையான நீர் தர பரிசோதனைப் பெட்டிகள் குடிநீர் வடிகால் வாரியத்தால் இலவசமாக அனைத்து ஊராட்சிகளுக்கும் வழங்கப்படுகிறது. இந்தப் பெட்டியை கையாளும் முறைதிருவாரூர் மாவட்டத்தில் குடிநீர் விழிப்புணர்வு வாரம் கொண்டாட முடிவு: ஆட்சியர்திருவாரூர் மாவட்டத்தில் குடிநீர் விழிப்புணர்வு வாரம் கொண்டாட முடிவு: ஆட்சியர்திருவாரூர் மாவட்டத்தில் குடிநீர் விழிப்புணர்வு வாரம் கொண்டாட முடிவு: ஆட்சியர்யை ஊராட்சிக்கு 2 ஆசிரியர்கள் என தேர்ந்தெடுத்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த குடிநீர் பாதுகாப்பு வார முகாமில் மாவட்டத்தில் சுமார் 10,640 நீர் மாதிரிகள் பரிசோதி க்கப்படவுள்ளன. இதேபோல், ஆண்டுக்கு இருமுறை குடிநீர் பாதுகாப்பு வாரம் நடத்தி விவரங்கள் அறிக்கையாக தொகுக்கப்பட்டு குடிநீர் தரம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மாற்று நீராதார ஏற்பாடுகள் செய்வதற்கும், புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்துவதற்கும் இந்த குடிநீர் விழிப்புணர்வு வாரம் வழிவகுக்கும் என்றார் மதிவாணன்.

கூட்டத்தில், குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் ராமநாதன், உதவி செயற் பொறியாளர் சேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Thursday, 12 March 2015

திருவாரூர் மருத்துவகல்லூரி


திருவாரூர் அரசு மருத்துவமனையில் கணைய புற்றுநோய்க்கு அறுவைச் சிகிச்சை
திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கணைய புற்றுநோய்க்கு அறுவை சிகிச்சையளிக்கப்பட்டது.

திருவாரூர் அருகே தீபங்குடியைச் சேர்ந்த விவசாயி செல்வராஜ் (57). மஞ்சள் காமாலை மற்றும் வயிற்று வலி காரணமாக பிப்.4-ம் தேதி திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கணையத்தில் புற்றுநோய் இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டது.

இதையடுத்து, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மீனாட்சிசுந்தரம் மேற்பார்வையில் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் சந்திரசேகரன், ஆனந்த், முருகதாஸ், மயக்கவியல் பேராசிரியர் சந்திரசேகரன், மருந்துவர் ராஜா, செவிலியர் சாந்தி ஆகியோர் கொண்ட மருத்துவக் குழுவினர் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.

6 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்த மருத்துவக் குழுவினரை மருத்துவக் கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரம் பாராட்டினார். இதையடுத்து உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டிருந்த செல்வராஜ் மார்ச் 1-ம் தேதி அன்று மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

திருவாரூர் மாவட்டத்தில் கணைய புற்றுநோய்க்கு அறுவை சிகிச்சை செய்வது இதுவே முதல் முறை என்றார் மருத்துவக் கல்லூரி முதல்வர் மீனாட்சிசுந்தரம்.

Wednesday, 11 March 2015

ஜமாஅத் தேர் தல் மனு தாக்கல் துவக்கம்

நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் ஊர் உறவின் முறை ஜமாஅத் பிரதிநிதிகள் தேர் தல் வரும் ஞாயிறு 15/03/2015 அன்று மத்லபுல் கைராத் பள்ளி வாக்குசாவடியில் வாக்களிக்கலாம் இதற்கான மனுதாக்கல் இன்று வக்ப் வாரிய கண்காணிப்பாளர் முன்னிலயைில் துவங்கியது

சென்னை பேருந்து தேவை அதிகம் உள்ள பகுதிகளைக் கண்டறிய தனிக் குழு


சென்னையில் பயணிகளின் தேவைக்கேற்ப பேருந்துகளை இயக்கும் வகையில், தேவை அதிகம் உள்ள பகுதிகளைக் கண்டறிய தனி அதிகாரிகள் குழுவை அமைத்து மாநகரப் போக்குவரத்துக் கழகம் ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

இந்தக் குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் பல்வேறு பகுதிகளுக்கு "கட் சர்வீஸ்' பேருந்து சேவையை அதிகரித்திருப்பதோடு, முக்கிய இடங்களுக்கு பேருந்து சேவை எண்ணிக்கையையும் மாநகரப் போக்குவரத்துக் கழகம் அதிகரித்துள்ளது. இதில் "கட் சர்வீஸ்' பேருந்துகள் அதிகரித்திருப்பது பயணிகளிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

வேளச்சேரியில் இருந்து மேடவாக்கம் கூட்டு ரோடு பகுதிக்குச் செல்ல முன்னர் குறைந்த எண்ணிக்கையிலேயே பேருந்துகள் இயக்கப்பட்டன. இதனால், பேருந்து நிறுத்தத்தில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. மேலும், ஆட்டோவில் கூடுதல் கட்டணம் செலுத்தி செல்ல வேண்டியிருந்தது. ஆனால், இப்போது பேருந்து சேவை அதிகரித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்கின்றனர் அப்பகுதி மக்கள்.

இதுகுறித்து மாநகரப் போக்குவரத்துக் கழக உயர் அதிகாரிகள் கூறியதாவது:

பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்தும் நோக்கத்தில் பல்வேறு திட்டங்களை மாநகரப் போக்குவரத்துக் கழகம் மேற்கொண்டு வருகிறது. பேருந்து தேவை அதிகம் உள்ள பகுதிகளை அறிய நேரடியாக கள ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக, தனி அதிகாரிகள் குழுவை அமைத்துள்ளோம்.

இதுபோல், பேருந்துகள் முறையாக இயக்கப்படுவதைக் கண்காணிப்பதற்கும் தனிக் குழுக்கள் அமைக்கப்பட்டு முக்கியப் பகுதிகளில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்தக் குழு அளிக்கும் பரிந்துரைகளின் அடிப்படையில் மட்டுமல்லாமல், பயணிகள், பல்வேறு அமைப்புகளின் ஆலோசனையின் பேரிலும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்

Tuesday, 10 March 2015

தமிழகம் வாக்காளர் அட்டைக்கும், ஆதார் அட்டைக்கும் விண்ணப்பிக்க ஒரே இடத்தில் சிறப்பு முகாம்: சந்தீப் சக்சேனா தகவல்

வாக்காளர் அடையாள அட்டைக்கும், ஆதார் அட்டைக்கும் விண்ணப்பிக்க ஒரே இடத்தில் சிறப்பு முகாம் நடத்தப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார்.

இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் சந்தீப் சக்சேனா பேசினார். ''வாக்காளர் அடையாள அட்டைக்கும், ஆதார் அட்டைக்கும் விண்ணப்பிக்க ஒரே இடத்தில் சிறப்பு முகாம் நடத்தப்படும்.இதற்காக இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவாளர் அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் மாநிலம் முழுவதும் நடத்தப்படும்.இதற்கான பயிற்சிக் கையேடுகள் தேர்தல் ஆணையத்தால் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு முகாம் தொடர்பாக மார்ச் 13 -ல் மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளிக் காட்சி மூலம் உரையாட இருக்கிறேன். இதைத் தொடர்ந்து மார்ச் 19-ல் மாவட்ட அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும்.'' என சந்தீப் சக்சேனா தெரிவித்தார்.

Friday, 6 March 2015

ஜமாஅத் தேர்தல் தேதி அறிவிப்பு

கொடிக்கால்பாளையம் முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் ஊர்உறவின் முறை ஜமாஅத் தின் தெரு பிரதிநிதிகள் தேர்தல் வரும் மார்ச் 15 ஞாயிறு மத்லபுல் கைராத் பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளதாக வக்ப் வாரிய கண்காணிப்பாளர் ஜூம்மாவிற்கு பிறகு அறிவித்துள்ளார்கள்.

ராணுவ கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்


டேராடூனிலுள்ள ராஷ்டிரிய இந்தியன் மிலிட்டரி கல்லூரியில் 2016-ம் கல்வியாண்டுக்கான 8-ம் வகுப்பில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 2003 ஜன. 2 மற்றும் 2004 ஜூலை 1-ம் தேதிகளுக்கு இடைப்பட்ட நாட்களில் பிறந்தவராகவும், 2016 ஜன. 1-ம் தேதி அன்று 7-ம் வகுப்பு படித்து கொண்டிருப்பவராக அல்லது முடித்தவராக உள்ள மாணவர்கள் இக்கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம். தகுதித் தேர்வு விண்ணப்பம் மற்றும் தகவல் தொகுப்பை பொதுப் பிரிவினர் பதிவஞ்சலில் பெற ரூ.430, துரித தபாலில் பெற ரூ 480, பட்டியல் மற்றும் அட்டவணை இனத்தவர் பதிவஞ்சலில் பெற ரூ.385, துரித தபாலில் பெற ரூ. 435, பஏஉ இஞஙஙஅசஈஅசப ஈஉஏதமச என்ற பெயரில் டேராடூன் பாரத ஸ்டேட் வங்கியில் மாற்றத் தக்க வகையில் காசோலை (டிராப்ட்) எடுத்து அதை கமாண்டன்ட், ராஷ்டிரிய இந்தியன் மிலிட்டாரி கல்லூ ரி, டேராடூன் - 248 003 உத்திரகாண்ட் என்ற முகவரிக்கு அனுப்பி பெற்றுக்கொள்ளலாம்.

பிளஸ் 2 தேர்வு14,722பேர் எழுதினர்


திருவாரூர் மாவட்டத்தில் வியாழக்கிழமை மாணவ, மாணவிகள் 14,722 பேர் பிளஸ் 2 தேர்வை எழுதினர்.
பிளஸ் 2 பொதுத் தேர்வு வியாழக்கிழமை தொடங்கி மார்ச் 31-ம் தே தி வரை நடைபெறுகிறது.
திருவாரூர் மாவட்டத்தில் 41 தேர்வு மையங்களில் 6,100 மாணவர்கள், 8,622 மாணவிகள் என மொத்தம் 14,722 பேர் தேர்வெழுதினர்.
தேர்வு நியாயமாக முறைகேடுகள் இன்றி நடக்க 10 தேர்வு அறைக்கு 1 பறக்கும் படையினர் வீதம் 100 பறக்கும் படையினர் தேர்வு கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
தவிர முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர், அனைவருக்கும் கல்வி இயக்க கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் ஆகியோர் தலைமையில் பறக்கும் படையினர் மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அறை கண்காணிப்பாளர்கள், நிலையான பறக்கும் படை அலுவலர்கள், கட்டு காப்பாளர்கள், வழித்தட அலுவலர்கள், துறை அலுவலர்கள், முதன்மைக் கண்காணிப்பாளர்கள், பறக்கும் படை உறுப்பினர்கள், அலுவலக உதவியாளர்கள் உள்ளிட்ட அனைத்து அலுவலர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
திருவாரூர் ஜிஆர்எம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தேர்வு மையத்தை மாவட்ட வருவாய் அலுவலர் த. மோகன்ராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மணி, கோட்டாட்சியர் முத்துமீனாட்சி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Thursday, 5 March 2015

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்


திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது பூர்த்தியடைந்து வாக்காளர் பட்டியலில் இதுவரை பெயர் சேர்க்காதவர்கள் தற்போது விண்ணப்பம் அளித்து பெயரை சேர்த்துக்கொள்ளலாம் என ஆட்சியர் எம். மதிவாணன் தெரிவித்துள்ளார். 
 இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
 வாக்காளர் பட்டியல்கள் பொதுமக்கள் பார்வைக்காக சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. பட்டியலில் தங்களது பெயர் இடம் பெற்றுள்ளதா என்றும், பெயர் பாலினம், வயது, உறவுமுறை, கதவிலக்க எண் மற்றும் முகவரி ஆகிய விவரங்கள் சரியாக உள்ளதா என்று சரிபார்த்துக் கொள்ளலாம். 
 பெயர் சேர்க்கை மற்றும் விவரங்கள் தவறாக இருப்பின் சேர்க்கை மற்றும் திருத்தங்களுக்கு புதிய சேர்க்கை படிவம் 6, பெயர் நீக்க படிவம் 7, பெயர் மற்றும் ஏனைய விவரங்களை திருத்தம் செய்ய 8, ஒரே சட்டப்பேரவை தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்ய 8யு படிவங்களை பயன்படுத்தலாம். 
 வாக்காளர் பட்டியலில் இதுவரை பெயர் இடம் பெறதாவர்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்தி பெயரை பதிவு செய்து கொள்ளலாம். இரட்டைப் பதிவுகள் இருந்தால் தவறாக உள்ள ஒன்றினை நீக்கம் செய்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. 

திருவாரூரில் நாளை மார்பக புற்றுநோய் சிகிச்சை முகாம்


திருவாரூரில் வெள்ளிக்கிழமை (மார்ச் 6) உலக மகளிர் தினத்தையொட்டி, அதிமுக மகளிர் அணி சார்பில் மார்பக புற்றுநோய் சிகிச்சை முகாம் நடைபெறவுள்ளது.
திருவாரூர் - நாகை சாலை மல்லிகா மகாலில் காலை 9.30 மணிக்கு மார்பக புற்றுநோய் சிகிச்சை முகாம் தொடங்குகிறது. முகாமை அதிமுக மாவட்டச் செயலர் மற்றும் தமிழக உணவு, இந்து அறநிலையத்துறை அமைச்சர் ஆர். காமராஜ் தலைமையில், மீன்வளத்துறை அமைச்சர் கே.ஏ. ஜெயபால், வீட்டுவசதி மற்றும் நகாóபுற
வளர்ச்சித் துறை அமைச்சர் ஆர். வைத்திலிங்கம் ஆகியோர் தொடக்கிவைக்கின்றனர்.
முகாமில் அனுபவம் பெற்ற மருத்துவர்கள் பங்கேற்கின்றனர்.
பரிசோதனையில் தீவிர சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு தேவையான உதவிகள் "அம்மா' மருத்துவ முகாம் மூலம் வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் 3 லட்சம் செயலற்ற எரிவாயு இணைப்புகள்: 6 மாதம் பயன்படுத்தாவிட்டால் இணைப்பு துண்டிப்பு


சமையல் எரிவாயு நேரடி மானியத் திட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு, தமிழகத்தில் சுமார் 3.40 லட்சம் எரிவாயு இணைப்புகள் செயலற்றவை எனக் கண்டறியப்பட்டுள்ளன.
மத்திய அரசின் சமையல் எரிவாயு நேரடி மானியத் திட்டம் தமிழகம் உள்பட நாடு முழுவதும் கடந்த ஜனவரி 1-ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது.
தமிழகத்தைப் பொருத்தவரை 1.53 கோடி சமையல் எரிவாயு இணைப்புகள் உள்ளன.
இவற்றில் திங்கள்கிழமை (மார்ச் 2) நிலவரப்படி சுமார் 1.25 கோடி வாடிக்கையாளர்கள் நேரடி மானியத் திட்டத்தில் இணைந்துள்ளனர். சுமார் 17 சதவீதம் பேர் இந்தத் திட்டத்தில் இணையாமல் உள்ளனர்.
நேரடி மானியத்திட்டத்தில் சேர வரும் மார்ச் 31-ஆம் தேதி வரை கால அவகாசம் உள்ளது. இதன்பிறகு, ஜூன் மாத இறுதியில் இந்தத் திட்டம் முழுமையாக அமல்படுத்தப்படும்.
நேரடி மானியத் திட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு செயலற்ற எரிவாயு இணைப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் பிப்.28-ஆம் தேதி வரை சுமார் 3.40 லட்சம் எரிவாயு இணைப்புகள் செயலற்றவை எனக் கண்டறியப்பட்டுள்ளன.
இந்த எண்ணிக்கை கடந்த 2014-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்துக்கு முன்பு இணைப்பை பயன்படுத்தாதவர்களின் எண்ணிக்கையை விட அதிகம்.
இணைப்பு துண்டிப்பு: செயலற்ற எரிவாயு இணைப்புகளில் 6 மாதங்களாக தொடர்ந்து எரிவாயு உருளைக்கு முன்பதிவு செய்யாமல் இருப்பவர்களுக்கு இணைப்பு தானாகவே துண்டிக்கப்பட்டுவிடும். இவர்கள் மீண்டும் "உங்கள் வாடிக்கையாளரை அறியும் வசதிக்கான (கே.ஒய்.சி)' படிவத்தை பூர்த்தி செய்து, முகவரிச் சான்று, அடையாளச் சான்று கொடுத்து எரிவாயு இணைப்பைப் பெற்றுக் கொள்ளலாம்.
ஆனால் போலி இணைப்புகள் எனக் கண்டறியப்பட்டவர்கள், தங்களது இணைப்பு உண்மையானது என நிரூபித்தால் மட்டுமே அவர்களுக்கு மீண்டும் இணைப்பு வழங்கப்படும்.
சென்னையில் அதிகம்: சென்னையில் மட்டும் சுமார் 1 லட்சத்து 7 ஆயிரம் இணைப்புகள் செயலற்ற நிலையில் உள்ளன. இதற்கு அடுத்தபடியாக வேலூரில் 34 ஆயிரம், காஞ்சிபுரத்தில் 30 ஆயிரம், திருப்பூரில் 25 ஆயிரம், கோவையில் 19.5 ஆயிரம் செயலற்ற இணைப்புகள் உள்ளன என எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
10 சதவீதம் போலியானவை?
நேரடி மானியத் திட்டத்தின் மூலம் ஒன்றுக்கும் மேற்பட்ட இணைப்பு வைத்திருப்பதைக் கண்டறிய முடியும்.
ஒரே முகவரியில் இரண்டு இணைப்புகளை வைத்துள்ளவர்கள், ஒரு இணைப்புக்கு மட்டும் முன்பதிவு செய்வதாலும் செயலற்ற எரிவாயு இணைப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
போலி எரிவாயு இணைப்பு வைத்துள்ளவர்கள் யார் என்ற விவரம் நேரடி மானியத் திட்டம் முழுமையாக அமல்படுத்தப்பட்ட பின் ஜூலை மாதத்தில்தான் தெரிய வரும். இருப்பினும் இதுவரை நேரடி மானியத் திட்டத்தில் இணையாத வாடிக்கையாளர்களில் சுமார் 10 சதவீத இணைப்புகள் போலியானவையாக இருக்கலாம் என எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

Wednesday, 4 March 2015

உலகக் கோப்பை முதல் கட்டம்: ஆச்சரியங்கள், அதிர்ச்சிகள், சாதனைகள்!


ஆஸ்திரேலிய அணி வங்கதேசத்தைவிடவும் தாழ்ந்த நிலையில் இருக்கிறது. இரண்டு வாரங்களுக்கு முன்பு இந்த வாக்கியத்தை யாராவது சொல்லியிருந்தால், அவரது மனநலன்குறித்துச் சந்தேகம் வந்திருக்கும். ஆனால், இன்று அதுதான் யதார்த்தம். 11-வது உலகக் கோப்பைப் போட்டிகளின் முதல் கட்டப் போட்டிகள் முடிந்துள்ள நிலையில், ஆஸ்திரேலிய அணி தனது பிரிவில் நியூஸிலாந்து, இலங்கை, வங்கதேசத்துக்கு அடுத்தபடியாக நான்காவது இடத்தில் இருக்கிறது. இங்கிலாந்து அணி, ஆப்கானிஸ்தானுக்கும் கீழே ஆறாவது இடத்தில் இருக்கிறது.
ஆச்சரியங்களும் அதிர்ச்சிகளும் இத்தோடு முடிந்து விடவில்லை. ஆஸ்திரேலிய, நியூஸிலாந்து ஆடுகளங்களில் இந்தியா எக்கச்சக்கமாக அடிவாங்கித் தள்ளாடப்போகிறது என்று கிரிக்கெட் பண்டிதர்கள் பலரும் நினைத்தார்கள். குறிப்பாக, அதன் பந்து வீச்சுக்கு இரங்கற்பா எழுதும் அளவுக்கும் சென்றார்கள். ஷாஹித் அஃப்ரிதியும் ஏபி டிவிலியர்ஸும் இந்தியப் பந்து வீச்சைப் புரட்டி எடுக்கப் போகிறார்கள் என்று ஆரூடம் சொன்னார்கள். பாகிஸ்தானின் ஏழடி உயர முகம்மது இர்ஃபானையும் அதிவேக டேல் ஸ்டெயினையும் இந்திய மட்டையாளர்கள் எப்படித்தான் சமாளிக்கப்போகிறார்களோ என்று அனுதாபப்பட்டார்கள். ஆனால், ஆடிய மூன்று போட்டிகளிலும் அலட்டிக்கொள்ளாமல் வென்று தன் பிரிவில் முதலிடத்தில் கம்பீரமாக வீற்றிருக்கிறது இந்தியா. இதே பிரிவில் ஆறாவது இடத்தில் பாகிஸ்தான் பின்தங்கியிருக்கிறது. இரட்டைச் சதம் எடுத்த கிறிஸ் கெய்ல் போன்ற ஆட்டக்காரரைக் கொண்ட மேற்கிந்தியத் தீவுகள் அணியைக் காட்டிலும் சற்று மேலான நிலையில் அயர்லாந்து அணி நேற்றுவரை இருந்தது. என்னதான் நடக்கிறது?
அடித்து நொறுக்கப்பட்ட ஆரூடங்கள்
இதுதான் 2015 உலகக் கோப்பை என்னும் பரபரப்பான நாடகத்தின் விறுவிறுப்பான முதல் கட்டம். ஆரூடங்களும் கணிப்புகளும் டிவிலியர்ஸும் பிராண்டன் மெக்கல்லமும் அடிக்கும் பந்துகளைவிடவும் அதிக வேகத்தில் சிதறி ஓடிய கட்டம் இது. போரால் சின்னாபின்னமான ஆப்கானிஸ்தான் சர்வதேச அரங்கில் தன் ஆட்டத்துக்காகப் பேசப்படும் வரலாறு அரங்கேறிய களம் இது. சிறந்த பந்து வீச்சு, மட்டை வீச்சு இரண்டும் இருந்தும் நான்கு போட்டிகளில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே இங்கிலாந்து வென்றிருக்கிறது. அரை இறுதிக்கு வரும் எனக் கணிக்கப்பட்ட இந்த அணி, கால் இறுதியை எட்டுவதே சந்தேகம் என்னும் நிலையில் அதிர்ந்துபோயிருக்கிறது. இலங்கைக்கு எதிரான போட்டியில் 309 ரன்கள் அடித்தும் போட்டியில் வெல்ல முடியவில்லை. ஒரே ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து இலங்கை இலக்கை அநாயாசமாக அடித்து நொறுக்கியது. இந்தியாவிடமும் மேற்கிந்தியாவிடமும் தோற்ற பாகிஸ்தான், ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் 237 ரன்கள் மட்டுமே எடுத்துத் தடுமாறியது. பந்து வீச்சு கைகொடுத்ததால் 20 ரன் வித்தியாசத்தில் வென்றாலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த அணிக்கு இது பின்னடைவுதான் என்பதில் சந்தேகமில்லை.
66 பந்துகளில் 162 ரன் அடித்துப் பேயாட்டம் ஆடிய டிவிலியர்ஸும் அவருக்குப் பக்கத் துணையாக டேவிட் மில்லர், ஹஷிம் ஆம்லா, ஃபாஃப் டூப்ளசிஸ் ஆகிய மட்டையாளர்களும் நன்றாகவே ஆடினாலும் இந்தியாவிடம் பெற்ற தோல்வியால் தென்னாப்பிரிக்க அணி சற்றே பின்தங்கியிருக்கிறது. ஸ்டெயின், மோர்னி மார்க்கல் கூட்டணி எதிர்பார்த்த அளவு மிரட்டவில்லை. குறிப்பாக, இந்தியாவின் ஷிகர் தவன், விராட் கோலி, அஜிங்க்ய ரஹானே ஆகியோர் இவர்களைத் திறமை யாக எதிர்கொண்டார்கள். ஜிம்பாப்வே அணிகூட 277 ரன்களைக் குவித்துத் தென்னாப்பிரிக்கப் பந்துவீச்சைப் பற்றிய கேள்விகளை எழுப்பியது.
உறைந்து நிற்கும் உச்ச அணி
ஆஸ்திரேலியாவின் நிலை இதை யெல்லாம் தூக்கிச் சாப்பிடும்படியான அதிர்ச்சி என்று சொல்ல வேண்டும். 1999-ல் தொடர்ந்து 7 போட்டிகளில் தோல்வி காணாமல் முன்னேறிய இந்த அணி, அதன் பிறகு 2011-ல் பாகிஸ்தானிடம் தோற்றதுவரை உலகக் கோப்பைப் போட்டிகளில் ஒரு போட்டியில் கூடத் தோற்கவில்லை. கோப்பையை வெல்லக்கூடிய அணி என்று பெரும் பாலானவர்களால் கணிக்கப்பட்டுள்ள இந்த அணி, ஆடிய மூன்று ஆட்டங் களில் ஒன்றில் வெற்றி, ஒன்றில் தோல்வி, ஒரு போட்டி ரத்து என்ற நிலையில் நான்காம் இடத்தில் நிற்கிறது. ஆட்டத்தின் எல்லாத் துறைகளிலும் வல்லமை பெற்றுள்ள இந்த அணி இப்படி ஒரு நிலை தனக்கு வரும் என்று கனவிலும் நினைத்திருக்காது. நியூஸிலாந்துடனான போட்டியில் இந்த அணி 32.2 ஓவர்களில் 151 ரன்னுக்குச் சுருண்டது. மிட்செல் ஸ்டார்க்கின் பொறிபறக்கும் பந்து வீச்சால் கிட்டத்தட்ட வெற்றிபெறும் நிலைக்கு வந்தாலும், இறுதியில் கான் வில்லியம்ஸின் பதறாத ஆட்டத்தால் தோல்வி கண்டு அதிர்ச்சியில் உறைந்து நிற்கிறது.
முதல் சுற்றில் இன்னும் பாதிச் சுற்று பாக்கி இருக்கும் நிலையில், அணிகளின் நிலை மாறலாம். ஆஸ்திரேலியா வீறுகொண்டு எழலாம். பாகிஸ்தானும் இங்கிலாந்தும் சுதாரித்துக்கொண்டு முன்னேறலாம். ஆனால், சர்வதேசத் தரவரிசையில் முதல் 8 இடங்களைப் பெற்றுள்ள இரண்டு அணிகளேனும் கால் இறுதியில் இடம்பெறாமல் வெளியேறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. வலுவற்ற அணிகள் எனக் கருதப்படும் இரண்டு அணிகள் கால் இறுதியில் இடம்பெற்றுவிடலாம். அடுத்த உலகக் கோப்பையில் அணிகளின் எண்ணிக்கையைக் குறைப்பது என்னும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் முடிவு கடுமையாக விமர்சிக்கப்படும் நிலை உருவாகலாம்.
சிறிய அணிகளின் நிலை
அந்த விமர்சனம் இப்போதே தொடங்கிவிட்டது. சிறிய அணிகள் என்று சொல்லப்படும் அணிகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் விதம் விசித்திரமாக உள்ளது. உலகக் கோப்பை என்னும் பெயரைத் தாங்கியிருந்தாலும் பல சமயங்களில் ஒரு டஜன் அணிகள் மட்டுமே ஆடும் தொடர் இது. கிரிக்கெட்டைத் தவிர, பிரபலமான வேறு எந்த ஆட்டத்துக்கும் இந்த நிலை இல்லை. இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், கிரிக்கெட்டை மேலும் பரவலாக்கும் முயற்சிகளில் ஈடுபடுவதைத் தன் கடமையாகக் கருதுவதுதான் இயல்பானது. ஆனால், இருக்கும் அணிகளைக் கழித்துக் கட்டும் வேலையை அந்த அமைப்பு மும்முரமாகப் பார்த்துக் கொண்டிருக் கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
டெஸ்ட் அந்தஸ்து பெற்ற பத்து அணிகளைத் தவிர அயர்லாந்து, ஸ்காட்லாந்து, ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகள் இந்தத் தொடரில் ஆடுகின்றன. இந்த நான்கு அணிகளும் கென்யா, நெதர்லாந்து போன்ற இதர அணிகளும் அடுத்த தொடரில் இடம் பெறுவது சந்தேகம் என்ற நிலை உருவாகலாம் எனத் தெரிகிறது. சிறிய அணிகளைக் குறைக்கும் விதத்தில் அடுத்த தொடர் நடக்கக்கூடும் என்ற செய்திகள் வெளியானதைச் சிறிய அணிகள் ஆட்சேபித்திருக்கின்றன.
உலகக் கோப்பை என்பது கிரிக்கெட் ஆடும் நாடுகளுக்கு ஒரு திருவிழா போன்றது. தங்கள் நாட்டின் அணி ஆடும் ஆட்டங்களை மட்டுமல்லாமல் பொதுவாக எல்லா ஆட்டங்களையும் கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வத்துடன் கவனித்துவரும் தருணம் இது. கிரிக்கெட்டின் ஆகப் பெரிய களமான இந்தப் போட்டியில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்னும் வேட்கை ஒவ்வொரு அணிக்கும் ஒவ்வொரு ஆட்டக்காரருக்கும் இருக்கும். இந்தக் களத்திலிருந்து சிறிய அணிகளை அப்புறப்படுத்திவிட்டால் போட்டிகள் மேலும் விறுவிறுப்பாக இருக்கலாம். ஆனால், புதிய திறமைகள் வெளிச்சத்துக்கு வரும் வாய்ப்புகள் குறைந்துவிடும். உலகக் கோப்பையின் சுவாரஸ்யங்களும் வண்ணங்களும் குறைந்துவிடும்.
பெரிய அணி என்று சொல்லப்படும் அணிகளைச் சிறிய அணிகள் வெல்லும்போதோ அவற்றுக்குக் கடுமையான சவாலாக விளங்கும்போதோ கிடைக்கும் பரவசம் ஈடிணையற்றது. இந்தத் தொடரில் மேற்கிந்தியத் தீவுகள் அணியை அயர்லாந்து அணி வென்றது. பாகிஸ்தான் ஜிம்பாப்வேயிடம் திணறிப் பிறகு வென்றது. ஆப்கானிஸ்தான், அரபு அணிகள் வெளிப்படுத்தும் துடிப்பு கிரிக்கெட்டின் மீதான ஆர்வத்தை அதிகரிக்கச் செய்கிறது. உலகெங்கும் உள்ள கிரிக்கெட் ஆர்வலர்களும் நிபுணர்களும் பார்த்துக்கொண்டிருக்கும் சமயத்தில் தங்களது ஆட்டத்தின் எல்லைகளை விரிவுபடுத்திக்கொள்வதற்கான பெரும் உத்வேகத்தைச் சிறிய அணிகளுக்கு இந்த உலகக் கோப்பை தருகிறது. இந்த உத்வேகம் இந்த அணிகளை மட்டுமல்ல, ஆட்டத்தையும் வளர்க்கக்கூடியது. விரிவுபடுத்தக்கூடியது.
தரத்தை மேம்படுத்த வேண்டுமென்றால், அதற்கு வழி பலவீனர்களை வெளியேற்றுவது என்பது மேட்டுக்குடித் தனமான அணுகுமுறை. தகுதி, தரம் ஆகியவற்றின் அடிப்படையில் சிலரை ஒதுக்கும் பாரபட்சத்துக்கு இணையானது இது. அனைவரையும் உள்ளடக்கும் அணுகு முறையுடன் போட்டியின் தரத்தைப் பேணுவதற்கான வழிகளைக் காண வேண்டியதே சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் கடமை. இந்தத் தொடரிலும் பெரிய அணிகள் மிகவும் மோசமாக ஆடினாலொழிய அவை அடுத்த சுற்றுக்குப் போவதில் எந்தப் பிரச்சினையும் இருக்காது என்னும் விதத்தில்தான் தொடர் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஆட்டத்தின் தரத்தைக் கூட்டுவதைப் போலவே ஆச்சரியங் களை அதிகரிக்கச் செய்ய வேண்டியதும் முக்கியம்தான்.

Tuesday, 3 March 2015

தேர்தல் வாக்காளர் பட்டியல் ஆதார் எண்ணுடன் இணைப்பு


இந்திய தேர்தல் ஆணையம் நாடுமுழுவதும் இன்று தேசிய வாக்காளர் பட்டியல் சரிப்பார்ப்பு மற்றும் நம்பகத்தன்மை நிகழ்ச்சியை துவக்கியது. வாக்காளர் பட்டியலில் எந்தவித பிழையும் இல்லாமல் நம்பகத்தன்மையை கொண்டு வருவதே இதன் நோக்கமாகும்.
இந்நிகழ்ச்சியில் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை ஆதாருடன் இணைக்கப்படும். வாக்காளர்களும் புகைப்பட தரத்தை அதிகரிப்பதும் திருத்தங்கள் போன்றவற்றை சரிசெய்வதும் இந்நிகழ்ச்சியின் நோக்கமாகும்.
தேர்தல் ஆணைய இணையதள சேவையின் மூலம் வாக்காளர்கள் தங்களது ஆதார் எண்ணை குறுஞ்செய்தி, மின் அஞ்சல், மொபைல் அப்ளிகேஷன் மற்றும் தேசிய வாக்காளர் சேவை இணையம் ஆகிய வசதிகள் கொண்டு இணைத்துக்கொள்ளலாம்.
இதைத்தவிர 1950 என்ற எண்ணின் மூலம் மாநில சேவை மையத்தை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தங்கள் ஆதார் எண் விவரங்களையும் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை எண் அதன் நகல்களையும் சமர்பிக்கலாம்.
வாக்காளர் பதிவு அலுவலர் ஏற்பாடு செய்யும் சிறப்பு முகாம்களிலும் வாக்காளர் வசதி மையங்களிலும் இணைய சேவை மையங்களிலும் மாவட்ட தேர்தல் அலுவலர்களால் அங்கீகரிக்கப்பட்ட குடிமக்கள் சேவை மையங்களிலும் ஆதார் எண்ணை சமர்பிக்கலாம். தேர்தல் அதிகாரிகள் கணக்கெடுப்பின்போதும் இந்த தகவலை தெரிவிக்கலாம். பொது மக்கள் அதிக அளவில் பங்கேற்பதை உறுதிசெய்ய தேசிய அளவிலான சிறப்பு முகாம்களை வாக்காளர் பதிவு அலுவலர் 12.4.2015 அன்று ஏற்பாடு செய்துள்ளார்.
தேசிய வாக்காளர் பட்டியல் சரிப்பார்ப்பு மற்றும் நம்பகத்தன்மை நிகழ்ச்சியின் கீழ் பல்வேறு இடங்களில் பதிவு செய்துள்ள வாக்காளர்கள் தானாக முன்வந்து தகவலை அளிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த வாக்காளர்கள் படிவம் 7யை சமர்பிக்க வேண்டும். இதன்மூலம் பல்வேறு இடங்களில் பதிவுசெய்யப்பட்டுள்ள அவர்களின் பெயர் நீக்கப்பட்டு அவர்கள் தங்கி உள்ள முகவரிக்கு ஏற்றபடி வழங்கப்படும். படிவம் 7யை தேசிய வாக்காளர் சேவை இணையம் அல்லது சிறப்பு முகாம்கள் / இணைய சேவை போன்ற மற்ற மையங்களிலும் சமர்ப்பிக்கலாம்.

அதிகரிக்கும் பண மோசடிகளை தடுப்பது எப்படி?- சட்டங்களை கடுமையாக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்


கோப்புப் படம்.
அதிகரித்து வரும் பண மோசடிகளை தடுக்க சட்டங்களை கடுமையாக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
வெளிநாடு மற்றும் அரசு அலுவலகங்களில் வேலை, கல்லூரி சீட், வங்கிக் கடன் வாங்கித் தருவதாக, குறைந்த முதலீட்டில் அதிக வட்டி தருவதாக கூறி மோசடி, ஏலச்சீட்டு, நிதி நிறுவனம் நடத்தி மோசடி… இப்படி பல்வேறு மோசடிகள் குறித்த புகார்கள் தினமும் வருகின்றன. 4 நாட்களுக்கு முன்புகூட, சென்னை குன்றத்தூரில் போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் நடத்தி ரூ.1 கோடிக்கும் அதிகமாக மோசடி செய்த முகமது ஜான் என்பவரை போலீஸார் கைது செய்தனர்.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் தமிழகம் முழுவதும் சுமார் 700 பண மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பண மோசடிகள் அதிகரிப்பதற்கான காரணம் குறித்தும், தடுப்பதற்கான வழிகள் குறித்தும் போலீஸார், வழக்கறிஞர், சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கடுமை இல்லாத சட்டங்கள்
மோசடி வழக்குகளை விசாரிக்கும் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘பொதுமக்களிடம் விழிப்புணர்வு இல்லை என்பதை காரணமாக கூறினாலும், சட்டங்கள் கடுமையாக இல்லாததுதான் முக்கிய காரணம். கோடிக்கணக்கில் மோசடி செய்து விட்டு அதில் சில லட்சங்களை செலவு செய்து ஜாமீன் வாங்கிக் கொள்கின்றனர். உதாரணத்துக்கு, ரூ.1 கோடி மோசடி செய்து, அதில் ரூ.30 லட்சத்தை வழக்குக்காக செலவு செய்கின்றனர். விடுதலையானதும் மீதிப் பணத்தை வைத்து சந்தோஷ மாக இருக்கின்றனர். மோசடி செய் பவர்கள் இதை நன்றாக தெரிந்து வைத்துள்ளனர்’’ என்றார்.
சொத்துகள் பறிமுதல்
வழக்கறிஞர் துரை கூறியதாவது: நாட்டையே அதிர வைத்த முத்திரைத்தாள் மோசடியில் (ரூ.30 ஆயிரம் கோடி) குற்றவாளிக்கு நீதிமன்றம் அளித்த தண்டனை 7 ஆண்டு சிறை மட்டும்தான். மோசடி செய்யப்பட்ட பணமும் முழுமையாக பறிமுதல் செய்யப்படவில்லை. பிரபல கம்ப்யூட்டர் நிறுவனத்தின் ரூ.1,500 கோடி மோசடி, ஒரு நிதி நிறுவனத்தின் ரூ.1,200 கோடி மோசடி போன்ற வழக்குகளில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நியாயம் கிடைக்கவில்லை.
நடமாடும் நகைக் கடைபோல வலம் வந்த சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த ஒருவர், கடன் பெற்றுத் தருவதாக கூறி பல கோடி மோசடி செய்தார். சிறைக்கு சென்று வந்த அவர், மீண்டும் அதையே தொழிலாக செய்கிறார். இந்திய தண்டனைச் சட்டம் 406, 420 ஆகிய பிரிவுகளின் கீழ் மோசடியில் ஈடுபட்டவர்களின் சொத்துகளை பறிமுதல்செய்து, அதை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கலாம். ஆனால் போலீஸ் அதிகாரிகள் யாரும் அதைச் செய்வதில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
குற்றவாளிகள் பட்டியலில்…
சமூக ஆர்வலர்கள் கூறும் போது, ‘‘மோசடி செய்யும் நபரின் சொத்துகளை பறிமுதல் செய்வ தோடு, அந்த நபரின் ரத்த சம்பந்தம் உள்ள அனைவரின் சொத்துக் களையும் பறிமுதல் செய்து பாதிக்க பட்டவர்களுக்கு வழங்க வேண்டும். மோசடிப் பேர்வழிகளுக்கு எந்த அரசியல் கட்சியும் அங்கீகாரம் அளிக் கக்கூடாது.
அவர்களது பெயர்களை குற்றவாளிகள் பதிவேட்டில் போலீஸார் பதிவுசெய்து, அனை வரும் தெரிந்துகொள்ளும் வகையில் பெரிதாக அறிவிப்பு வெளியிட வேண்டும்’’ என்றனர்.
வெளிநாடு செல்வோர் கவனத்துக்கு
வெளிநாடுகளில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்து, சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் இயங்கி வரும் தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் கேட்டு தெரிந்துகொள்ளலாம். 044-22502267, 22505886 என்ற தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம். www.omcmanpower.com என்ற இணையதளம் மூலமாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை தெரிந்துகொள்ளலாம். தனியார் வேலைவாய்ப்பு நிறுவனங்களைப் பற்றி அருகில் இருக்கும் காவல் நிலையத்திலும் அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திலும் கேட்டு தெரிந்துகொள்ளலாம்.

Monday, 2 March 2015

தங்கத்தை வங்கிகளில் டெபாசிட் செய்து வட்டி பெறலாம்


பொதுமக்கள் தங்கள் கைவசம் உள்ள தங்கத்தை வங்கிகளில் டெபாசிட் செய்து வட்டி பெறலாம் என்ற புதிய திட்டம் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் எவ்வித பயனுமின்றி பொதுமக்களிடம் முடங்கிக் கிடக்கும் தங்கத்தை வெளியே கொண்டு வந்து பயனுள்ள வகையில் பயன்படுத் தவும், தங்க இறக்குமதியை குறைக்கவும் இத்திட்டம் உதவி கரமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
இந்தியாவில் இப்போது 20 ஆயிரம் டன் தங்கம் மக்களிடம் முடங்கிக் கிடக்கிறது. இவை விற்கப்படுவதும் இல்லை, பணமாக்கப்பட்டு பயன்படுத்தப் படுவதும் இல்லை. எனவே பொதுமக்களிடம் அபரிமிதமாக உள்ள தங்கத்தை பணமாக செலாவணியாக்கி அவற்றை நாட்டு நலனுக்கு பயன்படுத்திக் கொள்ள பட்ஜெட்டில் 3 திட்டங் களை அருண் ஜேட்லி அறிவித்துள் ளார். அதன்படி நிலையான வட்டியுடன் தங்கத்தை அடிப்படை யாக கொண்டு பத்திரங்களை அரசு வெளியிடும். தங்கத்தை உலோகமாக வாங்குவதற்கு பதிலாக அரசு வெளியிடும் பத்திரங்களாக வாங்கும் திட்டமும் அறிமுகப்படுத்தப்படுகிறது.
இது மட்டுமல்லாது மக்கள் வங்கிகளில் பணத்தை டெபாசிட் செய்து வட்டி பெறுவதுபோல தங்களிடம் உள்ள தங்கத்தை வங்கிகளில் டெபாசிட் செய்து வட்டி பெற முடியும். தங்க நகைக் கடை வைத்திருப்பவர்களும் இத்திட்டத்தை பயன்படுத்தி பயனடைய முடியும்.
இப்போதுள்ள தங்க டெபாசிட் திட்டம், தங்க கடன் திட்டம் ஆகியவற்றுக்கு மாற்றாக இது செயல்படுத்தப்படும். வங்கி களும், பிற நிதி நிறுவனங்களும் தாங்கள் பெறும் தங்கத்தை பணமாக்கிக் கொள்ள முடியும்.
உள்நாட்டில் வீணாக தேங்கிக் கிடக்கும் தங்கத்தை மறுசுழற்சி செய்வதன் மூலம் வெளிநாட்டில் இருந்து தங்கம் இறக்குமதி செய்யப்படுவது குறையும். இதனால் நடப்பு கணக்கு பற்றாக்குறையும், வர்த்தக பற்றாக்குறையும் பெருமளவில் குறைய வாய்ப்புள்ளது.

Sunday, 1 March 2015

Kodikkalpalayam - பாச்சோறு பெருவிழா

பாச்சோற்று பெருவிழா





திருவாரூர் மாவட்டம் கொடிக்கால்பாளையத்தில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த அற்புத நிகழ்ச்சியை நினைவு கூறும் முகத்தான் இப்பெருவிழாவாக நடைபெற்று வருகிறது.
முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் வளாகத்தில் தங்கியிருந்த சைய்தினா சைய்யது மஃஸூம் சாஹிப் அவர்கள் ஒரு ஆலம் விழுத்தை ஊன்றியதைகொண்டு அது பெருமரமாகி தோன்றியாதாக்கூறுவார்கள்.
அதனை நினைவு கூறும் விதமாக அன்றைய காலத்தில் உணவு சமைக்கப்பயன்பட்ட "மடா" என்னும் மண்பானையில் 5 படி பச்சைஅரிசி 5 சேர் சர்க்கரை 5 தேங்காய்களை கொண்டு பாகுச்சோறு எனப்படும் பாச்சோறு (சக்கரை பொங்கல்)சமைத்து பள்ளிவாசல் கொண்டு வந்து இறைவனிடம் பிராத்திகத்து அனைவர்களுக்கும் பகிர்தளித்து உண்ணுமாறு மஹான் அறிவுறுத்தி உள்ளார்கள் .
இதனை தொடக்க காலத்தில் ஒரு சில சட்டிகள் வந்த நிலையில் இன்று நூற்றுக்கானக்கான சட்டிகள் வந்தன. மேலும் அனைவர்களும் ஜாதி மத பேதம் இன்றி மனித நேய மத நல்லிணக்க விழாவாக நடைபெருவது தனி சிறப்பாகும்.

http://youtu.be/qDGppl-dsvU

இதற்காக விழா ஏற்பாடுகளை ஜமாஅத் தலைவர் ரபீயூதீன் ,செயலாளர் ஜாகீர் ஹூசேன், துணைத்தலைவர் ஜெகபர் சேக் அலாவுதீன் உள்ளிட்ட நிர்வாகஸ்தர்கள் மற்றும் விழா கமிட்டியாளர்கள் செய்து இருந்தனர்