Friday 2 September 2016

முகநூலில் அரசின் திட்டங்கள் வெளியீடு: ஆட்சியர் தகவல்

அரசுத் திட்டங்களை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறையில் முகநூல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் இல.நிர்மல்ராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: முதல்வரின் அறிவிப்புகள் மற்றும் அரசின் அனைத்துத் துறைகளிலும் செயல்படுத்தப்பட்டுவரும் திட்டங்கள், சாதனைகள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் ஆகியவற்றை மக்களிடையே எடுத்துச்செல்லும் பணியை செய்தி மக்கள் தொடர்புத்துறை செய்துவருகிறது.
இத்துறையின் மூலம் அரசின் செய்தி வெளியீடுகள், புகைப்படங்கள் மற்றும் விடியோப் பதிவுகள் ஆகியன மின்னஞ்சல் மூலம் நாளிதழ்கள், தொலைக்காட்சிகள், செய்தி முகமைகள், காலமுறை இதழ்கள் மற்றும் இணையதள செய்தி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து ஊடகங்களுக்கும் அனுப்பப்பட்டு அவற்றை செய்தித்தாள்கள் மற்றும் ஊடகங்களில் வெளியிட ப்பட்டு, பொதுமக்கள் அவற்றைத் தெரிந்துகொள்வதற்கு இத்துறை உறுதுணையாக இருந்து வருகிறது.
செய்தி மக்கள் தொடர்புத் துறையின் இணையதளமான ‌w‌w‌w.‌t‌n‌d‌i‌p‌r.‌g‌o‌v.‌i‌n​ மற்றும் அரசு இணைய தளமான ‌w‌w‌w.‌t‌n.‌g‌o‌v.‌i‌n ஆகிய இணையதளங்கள் மூலம் அரசின் செய்திகள் மக்களைச் சென்றடைய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக சமூக வலைதளங்களின் முன்னேற்றம் மற்றும் அவற்றின் வளர்ச்சியின் காரணமாக, அரசின் அனைத்து செயல்பாடுகள் மற்றும் நிகழ்வுகள் நொடிப்பொழுதில் பொதுமக்களை சென்றடையும் வகையில் அனைத்து தரப்பு மக்களும் பெரிதும் பயன்படுத்திவரும் முகநூல் மூலம் முதல்வரின் அறிவிப்புகள் மற்றும் அரசின் திட்டங்கள் ஆகியவற்றை உடனுக்குடன் பதிவிட்டு வெளியிட இத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
முகநூலில் இத்துறையின் சார்பாக TNDIPR என்ற முகநூல் பக்கம் உருவாக்கப்பட்டு முதல்வரின் அறிவிப்புகள் மற்றும் அரசின் அனைத்துத் துறைகளிலும் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், சாதனைகள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் ஆகியவற்றை மக்களிடையே எடுத்துச்செல்லும் பணியை செய்தி மக்கள் தொடர்புத்துறை செய்து வருகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment