Thursday 16 June 2016

சமூக அங்கீகாரம், நிலையான வேலைவாய்ப்பு: சட்டப் படிப்பில் சேர ஆர்வம் காட்டும் பி.இ., பி.டெக். பட்டதாரிகள்

கோவை தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டு களாக பொறியியல் துறையில் படித்துப் பட்டம் பெற்ற பலரும், நிலையான வேலைவாய்ப்பு உள்ளிட்ட காரணங்களுக்கான சட்டப் படிப்பைத் தேர்வு செய்ய ஆர்வம் காட்டுகின்றனர்.
தமிழகத்தில் ஒரு காலத்தில், சட்டத்துறை மீதான எதிர்மறை எண்ணங்களும், சட்டப் பிரிவுகள் தொடர்பான பாடத் திட்டம், வேலை வாய்ப்புகள் உள்ளிட்ட காரணங் களால் இத்துறையைத் தேர்வு செய் பவர்கள் எண்ணிக்கை குறைந்திருந் தது. மேலும், உயர் கல்விக்கு முயற் சிக்கும் மாணவர்கள் பலரும் கலைப் பிரிவுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை, சட்டப் படிப் புக்கு கொடுக்காத நிலை இருந் தது. ஆனால், கடந்த 2 வருடங் களாக நிலைமை தலைகீழாக மாறியுள்ளதாக கோவை சட்டக் கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவிக் கின்றனர்.
அரசியல் துறைக்குச் செல்ல நினைப்பவர்கள், நிலையான வேலைவாய்ப்பைப் பெற விரும்பு பவர்கள், சட்டத்துறையில் சாதிக்க விரும்புபவர்கள் என சட்டப் படிப் பைத் தேடி வருபவர்களின் எண் ணிக்கை அதிகரித்துள்ளது. சட்டத் துறையில் உள்ள வேலைவாய்ப்பு நம்பிக்கையே அதற்குக் காரணம் என்றும் கூறுகின்றனர்.

No comments:

Post a Comment