Thursday 2 June 2016

புதிய செஸ் வரி அமலுக்கு வந்தது


விவசாயிகள் நலன் நோக்கிலான "கிருஷி கல்யாண்' கூடுதல் வரி விதிப்பு முறை நாடு முழுவதும் புதன்கிழமை அமலுக்கு வந்தது. இதன்படி, உணவகங்கள், தொலைபேசிக் கட்டணங்கள், இணையதளச் சேவைக் கட்டணங்கள், திரைப்படம் உள்ளிட்ட பொழுதுபோக்கு மையச் செலவுகள், வங்கிப் பணப் பரிவர்த்தனைகள், மருத்துவச் செலவுகள், ஏ.சி. வகுப்பு ரயில் கட்டணங்கள் ஆகியவற்றுக்கான சேவைக் கட்டணத்துடன் கூடுதலாக 0.5 சதவீத செஸ் வரி விதிக்கப்படும்.
 விவசாயத் துறையின் வளர்ச்சிக்கான நிதியைத் திரட்டுவதற்காக, 0.5 சதவீத "கிருஷி கல்யாண்' கூடுதல் வரியை, கடந்த பட்ஜெட் உரையில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்திருந்தார். இந்தக் கூடுதல் வரி விதிப்பு புதன்கிழமை அமலுக்கு வந்தது.
 ஏற்கெனவே 12.36 சதவீதமாக இருந்த சேவை வரியை 14 சதவீதமாக மத்திய அரசு கடந்த ஆண்டு உயர்த்தியது. அதன் பிறகு, சேவை வரியுடன் "தூய்மை இந்தியா' திட்டத்துக்கான நிதிக்காக, 0.5 சதவீத கூடுதல் வரி கடந்த நவம்பர் முதல் விதிக்கப்பட்டது. இந்நிலையில், 0.5 சதவீத "கிருஷி கல்யாண்' கூடுதல் வரி விதிப்பு புதன்கிழமை முதல் அமலுக்கு வந்தது. இதனால், வாடிக்கையாளர்கள் தாங்கள் பெறும் சேவைகளுக்கு சுமார் 15 சதவீத வரியைச் செலுத்த வேண்டியிருக்கும்.

No comments:

Post a Comment