Monday 6 June 2016

38 ஆயிரம் ஏக்கரில் நடவு பணி மேற்கொள்ள இலக்கு கலெக்டர் தகவல்



 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
திருவாரூர் மாவட்டத்தில் 38 ஆயிரம் ஏக்கரில் நடவு பணி மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் கூறினார்.

விழிப்புணர்வு கூட்டம்

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் மதிவாணன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் ஜெயலலிதா, டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடியை ஊக்குவிக்கவும், மண் வளத்தை பெருக்கவும் குறுவை தொகுப்பு திட்டத்துக்கு ரூ.54 கோடியே 65 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ், விவசாயத்துக்கு 12 மணி நேர மும்முனை மின்சாரம் வழங்கப்பட உள்ளது. குறுவை நெல் நடவு பணிகளை உரிய காலத்தில் மேற்கொள்ள எந்திரமுறையில் நெல் நடவுக்கான செலவீனம் 100 சதவீத மானியமாக ஏக்கருக்கு ரூ.4 ஆயிரம் வீதம் விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும். குறுவை சாகுபடியின் மகசூலை உயர்த்தும் வகையில் நெல் நுண்ணூட்ட கலவை மற்றும் சிங்சல்பேட் ஆகியவை 100 சதவீதம் மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

100 சதவீதம் மானியம்

நிலத்தடி நீர் சிக்கனத்தை ஊக்கப்படுத்த குழாய்கள் 100 சதவீதம் மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படும். காவிரி பகுதியில் குறுகிய கால பயறுவகை விதைகள் 100 சதவீதம் மானியத்திலும், உழவு மானியமாக ஏக்கருக்கு ரூ.500-ம் வழங்கப்படும்.

திருவாரூர் மாவட்டத்தில் 38 ஆயிரம் ஏக்கர் பரப்பில் நடவு பணி மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. நெல் நுண்ணூட்டச்சத்து 12 ஆயிரம் ஏக்கர் பரப்பிற்கும், சிங்சல்பேட் 30 ஆயிரம் ஏக்கர் பரப்பிற்கும் விலையில்லாமல் வழங்க இலக்குநிர்ணயிக்கப்பட்டுள்ளது. பைப்புகள் 250 யூனிட் வழங்க ஒதுக்கீடு பெறப்பட்டு உள்ளது.

காவிரி பகுதியில் 6 ஆயிரம் ஏக்கர் பரப்பில் உழவு செய்து பயறு வகை பயிர்கள் சாகுபடி மேற்கொள்ளவும் இலக்குகள் பெறப்பட்டுள்ளது. இதற்கான மதிப்பு ரூ.20 கோடியே 824 லட்சமாகும். இந்த ஆண்டில் 71 ஆயிரத்து 750 ஏக்கர் பரப்பில் குறுவை சாகுபடி செய்யவும், உற்பத்தித்திறனை உயர்த்தவும் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி மோகன்ராஜ், வேளாண்மை இணை இயக்குனர் மயில்வாகணன், கூட்டுறவு சங்க மண்டல இணை பதிவாளர் ராஜேந்திரபிரசாத், வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் துரைசாமி, வேளாண்மை அறிவியல் நிலையம் பேராசிரியர் பாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment