திருவாரூர் மாவட்டத்தில் நேற்று 4–வது நாளாக மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக திருத்துறைப்பூண்டியில் 50 மி.மீட்டர் மழை பதிவானது.
பருவமழை
திருவாரூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 30–ந் தேதி தொடங்கியது. நேற்று 4–வது நாளாக மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இதனால் நகர் மற்றும் கிராமப்புற சாலைகளில் தண்ணீர் குளம் போல் தேங்கி நின்றது குண்டும், குழியுமாக காணப்பட்டது. இதில் குறிப்பாக திருவாரூர் துர்க்காலயா சாலை, பழைய தஞ்சை சாலை, நாகை பை–பாஸ் சாலை, வாசன் நகர் ஆகிய இடங்களில் உள்ள சாலைகள் மிகவும் குண்டும், குழியுமாக காட்சி அளித்தது
விபத்து
இந்த இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்பதால் பள்ளங்கள் தெரியாமல் வாகன ஓட்டுநர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மழை காலம் என்பதால் கொசு உற்பத்தி அதிகரித்து வருகிறது. எனவே பள்ளங்களால் விபத்துகள் ஏற்படும் முன்பு மழை நீரை அகற்றி குண்டும், குழியுமாக சாலைகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:–
திருவாரூர்–23, குடவாசல்–47, நன்னிலம்–19, வலங்கைமான்–28, மன்னார்குடி–20, நீடாமங்கலம்–17, திருத்துறைப்பூண்டி–50, முத்துப்பேட்டை–8, பாண்டவையாறு தலைப்பு–22. இதில் அதிகபட்சமாக திருத்துறைப்பூண்டியில் 50 மில்லி மீட்டர் மழை பதிவானது.
No comments:
Post a Comment