Wednesday, 23 November 2016

தமிழகத்தில் புதிய ரூ.500 நோட்டு விநியோகம்

தமிழகத்தில் புதிய ரூ.500 நோட்டு விநியோகம் தொடங்கியிருக்கிறது. சேலம் முதல் அக்ரஹாரம் கரூர் வைஸ்யா வங்கியில் இன்று (புதன்கிழமை) பிற்பகலில் ரூ.500 நோட்டு விநியோகிக்கப்பட்டது.
இருப்பினும், தமிழகம் முழுவதும் பரவலாக ரூ.500 விநியோகிக்கப்பட்டுள்ளதா என்ற தகவல் இன்னும் கிடைக்கவில்லை.
ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது என கடந்த 8-ம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதனையடுத்து நாடு முழுவதும் சில்லறைத் தட்டுப்பாடு ஏற்பட்டது. பழைய நோட்டுகளுக்குப் பதிலாக புதிய ரூ.2000 நோட்டு தரப்பட்டது. பழைய நோட்டுகளை மாற்றிவிட்டாலும் அதற்கு சில்லறை கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டனர். பெரும்பாலான மக்கள் ரூ.2000-க்கு பதிலாக ரூ.500 நோட்டுகளை முதலில் புழக்கத்தில் விட்டிருக்கலாம் என்றனர்.
புதிய ரூ.500 நோட்டு

இந்நிலையில், ரூபாய் நோட்டு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணையிம்போது, "பாதுகாப்பு காரணங்களால், தமிழகத்துக்கு புதிய 500 ரூபாய் நோட்டு எப்போது வரும் என்பதை நேரடியாக இப்போது தெரிவிக்க முடியாது. வேண்டுமென்றால் அதை ரகசிய அறிக்கையாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்கிறோம்" என ரிசர்வ் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ரூ.500 நோட்டுகள் புழக்கத்தில் இல்லாமல் சில்லறை தட்டுப்பாடு நிலவி வந்த நிலையில், சேலம் முதல் அக்ரஹாரம் கரூர் வைஸ்யா வங்கியில் ரூ.500 நோட்டு விநியோகிக்கப்பட்டது. புதிய ரூ.500 நோட்டை மக்கள் ஆறுதல் அடைந்து ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.

No comments:

Post a Comment