Saturday 12 November 2016

தமிழ்நாட்டில் 2 நாட்களில் செல்லாத பணம் ரூ.1300 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது ரிசர்வ் வங்கி அதிகாரி தகவல்

பொதுமக்கள் தங்கள் கையில் உள்ள பழைய நோட்டுகளை ஒருவர் ரூ.2.5 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம் என்று அறிவிக் கப்பட்டிருப்பதால் நீண்ட வரிசையில் நின்று திருப்பி கொடுத்து வருகிறார்கள்.இது குறித்து ரிசர்வ் வங்கி மண்டல இயக்குனர் சதக்கத் துல்லா கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் கடந்த 2 நாட்களில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் ரூ.1300 கோடி டெபாசிட் ஆகியுள்ளது. செல்லாத இந்த நோட்டுகளை மாற்றி பணம் பெற்றவர்கள் எத்தனை பேர் என்ற முழு விவரம் திங்கட் கிழமை தெரிய வரும்.

பொதுமக்களிடம் புழக்கத் தில் உள்ள ரூ.2300 கோடி மதிப்புள்ள ரூ.500, ரூ.1000 நோட்டுகள் பெறப்பட்டு முற்றிலுமாக அழிக்கப்படும்.கடந்த 2 நாட்களில் ரிசர்வ் வங்கியில் மட்டும் 3 ஆயிரம் பேர் செல்லாத ரூபாய் நோட்டுகளை கொடுத்து புதிய ரூபாயை பெற்றுக் கொண்டனர்.இவ்வாறு அவர் கூறினர்.

No comments:

Post a Comment