காலாவதியான 500, 1000 ரூபாய் தாள்களின் மூலம் வரும் டிசம்பர் 30-ம் தேதி வரை வங்கிகளில் செலுத்தப்படும் கணக்கில் வராத தொகைக்கு, 50 சதவீதம் வரி வசூலிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
ஜன்தன் கணக்குகளில் இரண்டே வாரங்களில் ரூ.64,250 கோடி செலுத்தப்பட்டது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இத்தொகை கறுப்புப் பணமாக இருக்கலாம் என மத்திய அரசு சந்தேகிக்கிறது.
இந்நிலையில், ரூ.2.5 லட்சத் துக்கு மேல் செலுத்தப்படும் கணக் கில் வராத தொகைக்கு அதிகப் பட்ச வரி விதிப்பதோடு, 200 சதவீதம் அபராதம் விதிப்பது குறித்து முதலில் பரிசீலிக்கப் பட்டது.
ஆனால், இதற்கு வரித்துறை சட்டங்கள் அனுமதியளிக்காது என்பதால், டிசம்பர் 30-ம் தேதி வரை வங்கிகளில் செலுத்தப்படும் கணக்கில் வராத தொகைக்கு 50 சதவீதம் வரி விதிக்கும் வகை யில் வரிச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள முடிவு செய்யப் பட்டுள்ளது.
டெல்லியில் வியாழக்கிழமை இரவு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச் சரவைக் கூட்டத்தில் இதுகுறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இச்சட்டத் திருத்தத்துக்கு அமைச் சரவை ஒப்புதல் அளித்துள் ளதாகவும், டெல்லி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, டிசம்பர் 30-ம் தேதிக்குள் 500, 1000 ரூபாய் தாள் களின் மூலம் வங்கிகளில் செலுத் தப்படும் கணக்கில் வராத தொகைக்கு 50 சதவீதம் வரை வரி வசூலிக்கப்படும். வரி பிடித்தம் போக மீதத் தொகையை 4 ஆண்டுகள் வரை வங்கிக் கணக்கில் இருந்து எடுக்கவோ, எவ்வித நிதி பரிவர்த்தனை களுக்கும் பயன்படுத்தவோ முடியாது.
கணக்கில் வராத பணம் வரித்துறை அதிகாரிகளால் கண்டு பிடிக்கப்பட்டால், 90 சதவீதம் வரை வரி விதிக்கப்படுவதோடு, நீண்ட காலம் பயன்படுத்த முடியாத அளவுக்கு அத்தொகை முடக்கி வைக்கப்படும்.
No comments:
Post a Comment