ஜன்தன் வங்கிக் கணக்குகளில் இதுவரை ரூ.64,252 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்றதும் வங்கிக் கணக்கு இல்லாத ஏழைகள் பயன்பெறும் வகையில் ஜன்தன் வங்கிக் கணக்கு திட்டத்தை கொண்டு வந்தார். இத்திட்டத்தில் நாடு முழுவதும் 25.51 கோடி வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டன.
இது 'ஜீரோ பேலன்ஸ்' வங்கிக் கணக்கு என்பதால் பெரும்பான் மையான வங்கிக் கணக்கு களில் பணம் டெபாசிட் செய்யப் படவில்லை. ஒட்டுமொத்த ஜன்தன் வங்கிக் கணக்குகளில் கடந்த 8-ம் தேதி வரை ரூ.45,636 மட்டுமே இருந்தது.
இந்நிலையில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த 8-ம் தேதி பிரதமர் மோடி அறிவித்ததைத் தொடர்ந்து ஜன்தன் வங்கிக் கணக்குகளில் பெருந்தொகை குவிந்து வரு கிறது. இந்த வங்கிக் கணக்கு களில் இதுவரை ரூ.64,252.15 கோடி முதலீடு செய்யப்பட்டுள் ளது. இதில் உத்தரப் பிரதேச மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அந்த மாநிலத்தில் 3.79 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகளில் ரூ.10,670.62 கோடி முதலீடு செய்யப்பட்டிருக்கிறது.
மேற்குவங்கத்தில் 2.44 கோடி வங்கிக் கணக்குகளில் ரூ.7,826.44 கோடி, ராஜஸ்தானில் 1.89 கோடி வங்கிக் கணக்குகளில் ரூ.5,345.57 கோடி, பிஹாரில் 2.62 கோடி வங்கிக் கணக்குகளில் ரூ.4,912.79 கோடி முதலீடு குவிந்துள்ளது
இந்தத் தகவலை மத்திய நிதித் துறை இணையமைச்சர் சந்தோஷ் குமார் கங்க்வார் மக்களவையில் நேற்று தெரிவித்தார்.
ஜன்தன் வங்கிக் கணக்குகளில் ரூ.50,000-க்கு மேல் வரவு வைக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையிலும் இவ்வளவு தொகை குவிந்துள்ளது. எனவே சந்தேகத் துக்குரிய வங்கிக் கணக்குகள் குறித்து வருமான வரித் துறை விசாரணை நடத்தும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
No comments:
Post a Comment