Wednesday, 2 November 2016

என் அமைச்சரவையில் மிச்செல் ஒபாமா இருப்பார்: ஹிலாரி

அமெரிக்க அதிபராக நான் தேர்தெடுக்கப்பட்டால் என் அமைச்சரவையில் மிச்செல் ஒபாமா இருப்பார் என ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஹிலாரி கிளின்டன் கூறியுள்ளார்.
அமெரிக்காவில் அதிபர் தேர்தலை முன்னிட்டு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஹிலாரி பேசும்போது, "உலகம் முழுவதிலுள்ள பெண் குழந்தைகளின் கல்விக்கு கவனம் செலுத்த வேண்டும் என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன்" என்றார்.
மேலும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரிக்கு ஆதரவாக தொடர்ந்து தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் மிச்செல் ஒபாமா குறித்த கேள்விக்கு பதிலளித்த ஹிலாரி, "நான் அதிபராக தேர்தெடுக்கப்பட்டால் அமைச்சரவையில் மிச்செல் ஒபாமா இருப்பார்.
மேலும் கடந்த 8 வருடங்களில் மிச்செல் ஒபாமா ஆற்றிய பணி சிறப்பானது. அவரது பணிகள் என்னைக் கவர்ந்து விட்டன. அவர் ஒரு முன்மாதிரி. அவரது தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் பாராட்டுகிறேன்" என்று கூறினார்.
ஹிலாரி வருகின்ற நவம்பர் 8-ம் தேதி நடைபெறும் தேர்தலில் வெற்றி பெற்றால் அமெரிக்காவின் முதல் பெண் அதிபர் என்ற பெருமையைப் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment