Tuesday, 1 November 2016

தொழில் தொடங்க உகந்த மாநிலங்கள் வரிசையில் 18வது இடத்தில் தமிழகம்!

கொள்கையளவில் சீர்திருத்தத்தை ஏற்படுத்தி முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதற்கு உகந்த மாநிலங்கள் பட்டியலில் 12வது இடத்தில் இருந்து வந்த தமிழகம், தற்போது 18வது இடத்திற்கு சென்றுள்ளது.

உலக வங்கி மேற்கொள்ளும் ஆய்வின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்த ஆண்டுக்கான பட்டியலை, மத்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தில்லியில் வெளியிட்டார்.
அதில், கடந்த ஆண்டு 12வது இடம் பெற்றிருந்த தமிழகம், இந்தாண்டு 18வது இடத்திற்கு சென்றுள்ளது. இதேபோன்று புதுச்சேரி 20வது இடத்திலிருந்து 26வது இடத்திற்கும், முதலிடத்தில் இருந்த குஜராத் 3வது இடத்திற்கும் பின்னோக்கிச் சென்றுள்ளன.
முதலிடத்தை ஆந்திராவும், 2வது இடத்தை தெலங்கானாவும் பெற்றுள்ளன.

No comments:

Post a Comment