கொச்சி: 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் ஏராளமான தொழில்கள் பாதிக்கப்பட்டாலும் ஹவாலா மோசடி மட்டும் பாதிக்கப்படவில்லை.
ஹவாலா மோசடியில் புதிய வழியைக் கண்டுபிடித்து, மோசடிக் கும்பல்கள் தங்கள் கைவரிசையை எவ்வித இடையூறும் இல்லாமல் காட்டி வருகிறார்கள்.
குறிப்பாக ஐக்கிய அரபு நாடுகளில். அவர்கள் செய்து வரும் புதிய வழி என்ன என்பது குறித்து வெளியாகியுள்ள ரகசியத் தகவல் இதுதான்.
குறிப்பாக ஐக்கிய அரபு நாடுகளில். அவர்கள் செய்து வரும் புதிய வழி என்ன என்பது குறித்து வெளியாகியுள்ள ரகசியத் தகவல் இதுதான்.
அதாவது, ஐக்கிய அரபு நாடுகளில் வசிக்கும் கருப்புப் பணம் வைத்திருக்கும் நபர் 3,500 திர்ஹாம்களை ஹவாலா முகவர்களிடம் கொடுக்கிறார்கள். அதற்கு மாற்றாக ஹவாலா முகவர்கள் ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள ரூ.500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளாக இந்தியாவில் உள்ள ஒரு நபரிடம் கொடுப்பார்கள். அதனை அவர்கள் எவ்வித சிக்கலும் இல்லாமல் தங்களது வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்து விடுவார்கள்.
அதே சமயம், 3,500 திர்ஹாம்களை இந்திய ரூபாயில் 64 ஆயிரமாக ஹாவலா ஏஜெண்டுகள் மாற்றிக் கொள்வார்கள்.
இந்தியாவில் வசிக்கும் சிலருக்கு, ஹவாலா ஏஜெண்டுகள் மூலமாக அழைப்பு விடுக்கப்பட்டு, அவர்கள் மூலமாக கருப்புப் பணம் வெள்ளைப் பணமாக மாற்றப்படுகிறது.
ஹவாலா எனப்படும் பணப்பரிமாற்றம் சௌதி அரேபியா நாடுகளுக்கும், தெற்காசிய நாடுகளுக்கும் இடையே பல காலமாக நடந்து வருகிறது.
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பினால் இந்த மோசடி எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை என்றே மேற்கண்ட தகவல் மூலம் தெரிந்து கொள்கிறோம்.
No comments:
Post a Comment