சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில், அதிமுகவின் சட்டமன்ற குழு
தலைவராக அக்கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவர் கூடிய விரைவில்
தமிழக முதல்-அமைச்சராக பதவியேற்க உள்ளார். வரும் 7 அல்லது 9-ம் தேதியில் அவர் தமிழக முதல்-அமைச்சராக பதவியேற்க உள்ளார்.
தமிழகத்தின் மூன்றாவது பெண் முதல்- முதலமைச்சர் என்ற பெருமையையும் சசிகலா தனதாக்குகிறார்.
தமிழகத்தின் முதல் பெண் முதல் - அமைச்சர் என்ற பெருமையை பெற்றவர் ஜானகி ராமச்சந்திரன் ஆவார். எம்.ஜி.ஆரின் மனைவியான ஜானகி, எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பின்னர் 1988-ம் ஆண்டு ஜனவரி 7-ம் தேதியிலிருந்து ஜனவரி 30-ஆம் தேதி வரையில் பதவியில் இருந்தார்.
பின்னர் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா 5 முறை தமிழக முதல்-அமைச்சராக பதவி வகித்தார். இவரை தொடர்ந்து மூன்றாவதாக சசிகலா முதல்-அமைச்சராக பொறுப்பு ஏற்க உள்ளார். மூன்று பேரும் அதிமுகவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment