அதிமுக பொதுச் செயலர் சசிகலாவுக்கு எதிராக குரல் எழுப்பியுள்ள முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், தனி கட்சி தொடங்கும் எண்ணம் இல்லை என்று கூறியுள்ளார்.
செய்தித் தொலைக்காட்சி ஒன்றுக்கு முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அளித்த பேட்டியில், தனி கட்சி தொடங்கும் எண்ணம் இல்லை. எதிர்க்கட்சிகளின் ஆதரவை எதிர்பார்க்கவில்லை.
அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரித்தால் மட்டுமே ஆட்சி அமைப்பேன். வாக்களித்த மக்களை மனதில் கொண்டு எம்எல்ஏக்கள் செயல்பட வேண்டும் என்று கூறினார்.
தமிழக சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபித்துவிட்டு, கூடிய விரைவில் மக்களை சந்திக்க சுற்றுப்பயணம் மேற்கொள்வேன். மக்கள் விரும்பினால் மட்டுமே ஆட்சிக்கு வருவேன். இல்லையென்றால் வர மாட்டேன்.
என்னை கட்சியின் பொருளாளர் பதவியில் இருந்து நீக்க, அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலருக்கு அதிகாரம் இல்லை என்று கட்சி விதி கூறுகிறது.
என்னை கட்சியின் பொருளாளர் பதவியில் இருந்து நீக்க, அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலருக்கு அதிகாரம் இல்லை என்று கட்சி விதி கூறுகிறது.
எனக்குப் பின்னணியில் திமுக இருப்பதாகக் கூறுவது உண்மையில்லை. பாஜகவுடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும் பன்னீர்செல்வம் கூறினார்.
No comments:
Post a Comment