இதனால் நமக்கு தாழ்த்தப்பட்டோர் நிலை வருவதால் மேலும் பல சலுகை ,தனி தொகுதி , வேலை வாய்ப்பில் வயது தளர்வு என பல வாய்ப்புகள் கிடைக்கலாம் .இந்தியாவில் இந்து (சில சாதிகள்) ,சீக்கியம் ,புத்த மதத்தை சேர்ந்தவர்கள் தாழ்த்த பட்டோர்கள் என அரசியலமைப்பு கூறி உள்ளது .
எனவே மைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு முஸ்லிம்களுக்கு அளிக்க வாக்குறுதி கொடுத்த இடஒதுக்கிடு உச்ச நீதிமன்றம் வரை சென்றதால் அவைகள் நடைமுறைக்கு வரவில்லை .
எனவே இந்த வழக்கு கடந்த 10 ஆண்டுகளாக நடைபெறு வருவதால் மைய அரசு போதே நீதி மன்றத்தில் அப்பிட்டே பிரமான பத்திரம் தாக்கல் செய்தால் மேற்கொண்டு வழக்கு விசாரணை செய்து தீர்ப்பு வழங்கலாம்.
முஸ்லிம்களுக்கும் கிறிஸ்துவ தலித்களுக்கும் இந்துக்களில் எஸ் சி பிரிவினர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை பெற அருகதை இல்லை என்று அறிவிக்கும் வகையில் 1950 ஆம் ஆண்டைய குடியரசுத்தலைவரின் ஆணை ஒன்று பிறப்பிக்கப்பட்டது .அதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தான் உச்ச நீதி மன்றத்தில் நிலுவையில் இருக்கிறது .அதில்தான் மத்திய அரசு பிரமான பத்திரம் தாக்கல் செய்ய வேண்டியுள்ளது .கடந்த 2008ம் ஆண்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது 8 வாரங்கள் காலத்துக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவுட்டது .ஆனால் 6 ஆண்டுகளாக மதிய அரசு தாக்கல் செய்யவில்லை .
நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிட்டி பரிந்துரை செய்து உள்ளது .அதுபோல சிறுபாண்மையினர் தேசிய ஆணையகமும் .அட்டவணை பிரிவினருக்கான ஆணையமும் பரிந்துரை செய்து உள்ளது .அதற்காகவே ஒரு வரைவு அறிக்கை தயாரிப்பது மத்திய அரசின் சிறுபாண்மையினர் நலத்துறை தான் .அறிக்கை தயார் செய்து மத்திய அமைச்சரவை கூடி பிரமான பத்திரத்தை ஒப்புதல் அளித்து அதை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்து வழக்கை விரைந்து முடிக்க வேண்டும்
மத்திய அரசு நீண்ட காலதாமதம் செய்வதால் இந்த 15வது மக்களவை முடிவு பெற்றது .வரும் புதிய அரசு யார் என்பதை பொறுத்து வழக்கின் தன்மை மாறும் .
பலகட்ட போராட்டம் கண்ட சமுதாய இயக்கங்கள் இந்த வழக்கு பற்றி மக்களிடம் எடுத்து சொல்லிருக்கிறதா ?
10 ஆண்டு காலமாக நடைபெற்று வரும் வழக்கு முடிவு பெற வழி என்ன ?
இன்னும் அடிபட்ட மக்களாக இருக்கும் நம் சமுதாயம் ஒளிவு பெற போவது எப்போது ?
ஆளும் கட்சி ,ஆண்ட கட்சி எல்லாமே தங்கள் சுயநலம் கொண்டே செயல்படுகிறது .
பல கேள்விக்குறியுடன் வாழும் நம் மக்கள் என்று ஆச்சிரியக்குரியாக மாறுவது எப்போது ?
இட ஒதுக்கிடு முலம் பயன் என்ன ? அல்லது எஸ் சி தகுதி நன்மை பயக்குமா?
என்பதை சட்ட வல்லுனர்களும் சமுதாய தலைவர்களும் முடிவு செய்ய வேண்டும் .
தமிழ் நாட்டில் உள்ள 3.5% இட ஒதுக்கிடு முறையால் நாம் பெற்று வரும் பயன்கள் மற்றும் மேலும் அதிகரிக்க வேண்டும் என கோரிக்கையை ஆகியவைகள் கருத்தில் கொள்ள வேண்டும் .
இறைவன் அருளால் அடுத்து வரும் மத்திய அரசு நமக்கு சாதகமான அரசாக அமைத்து நம் கோரிக்கை வென்று காட்டி வருங்கால சமுதாயம் கல்வி ,அரசியல் ,வேலை வாய்ப்பில் தனது உரிமையை பெற்று ஒளிமயமான எதிர்காலம் பெறட்டும் என துவா செய்வோமாக ஆமீன் .
No comments:
Post a Comment