|
அரசினர் மேல்நிலைப்பள்ளி கொடிக்கால் பாளையம் |
திருவாரூர் நகர எல்லையில் அமைத்துள்ள ஒரே அரசு மேல்நிலைப்பள்ளி என்றால் அது நமதூர் பள்ளி தான் .1975 ம் ஆண்டு நடுநிலைப்பள்ளி யாக இருந்ததை உயர்நிலைப்பள்ளி யாக மாற்றபட்டது .இப்பொது அமையபெற்ற இடம் நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் 52 பணப்பகுதி முலமாக அளிக்கப்பட்டது .பின்னர் 2007 ம் ஆண்டு மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது .
முன்னர் விளையாட்டு திடலாக இருந்தவை எல்லாம் வகுப்பறையாக மாறி வருகிறது .கழிப்பிடமும் கட்டப்பட்டு உள்ளது .இவைகள் எல்லாம் இருந்தும் பள்ளிக்கு சுற்றுசுவர் இல்லாதது வருத்தமாக இருக்கிறது .கிழக்கு பகுதி வெட்டவெளி யாக யாரும் வரும் வகையில் இருப்பதால் மாணவ மாணவிகளின் பாதுகாப்பு வேள்வி குறியாக உள்ளது .சட்டமன்ற நாடாளுமன்ற உள்ளூர் தொகுதி நிதியில் அமைத்து தந்தால் பயனுள்ளதாக அமையும் .
மேலும் நகராட்சி துவக்கப்பள்ளியில் பழைய கட்டிடங்கள் இடிக்கப்பட்டு புதியதாக வகுப்பறைகள் கட்டப்பட்டு வருகிறது .மேலும் கழிவறையும் புதியதாக கட்டப்பட்டு இருக்கிறது .நமதூர் நன்கொடையாளர்கள் மூலமாகவும் பள்ளி கட்டிடம் சில கட்டப்பட்டு உள்ளன .
மேல்நிலைப்பள்ளிக்கு முக்கியமாக சுற்றுசுவர் தேவைபடுகிறது .
பாதுகாப்பு இல்லா சூழ்நிலையில் மாணவ மாணவியர்கள் காணப்படு கிறார்கள் . மக்கள் பிரதிநிதிகள் உதவியுடன் இவைகள் செய்யமுடியும் முன்வருவார்களா ?
நகராட்சி துவக்கப்பள்ளி கொடிக்கால் பாளையம்
No comments:
Post a Comment