Friday, 21 February 2014

Kodikkalpalayam - வணிக வளாகம் திறப்பு விழா 20/2/2014

ஜமாஅத் வணிக வளாகம் முகப்பு 
முஹ்யித்தீன்  ஆண்டவர்கள் பள்ளிவாசல் வணிக வளாகம் 
 
 
     நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் ஊர் உறவின் முறை ஜமாஅத் சார்பாக நமதூர் பள்ளிவாசல் தெரு - தெற்குத்தெரு சந்திக்கும் பழைய மார்க்கெட் இருந்த இடத்தில் 52 பணப்பகுதி முலமாக சில நபர்களின் சூழ்ச்சியால் நீதிமன்றம் முதல் EB வரை பல்வேறு தடைகளை வென்று  சுமார் ரூ . 26 லட்சத்தில் சுமார் 2000 சதுரடியில்  பள்ளிவாசல் தெரு வை நோக்கி வங்கி கிளை அமைக்க இடமும் அதற்க்கு  எ டி எம் அமைக்க இடமும் கொண்டதாகவும் சரக்கு பாதுகாப்பு வசதி உடன் கடை ஒன்றும் கட்டப்பட்டு உள்ளன .தெற்குத்தெரு நோக்கி ஒவ்வொரு கடையும் தலா 100 சதுரடியில்  4 கடைகள் சம அளவில் அமைக்கப்பட்டு உள்ளன  .

    இவைகள் B & H Builers  இதயத்துல்லாஹ் அவர்களின் கட்டிட  மேற் பார்வையில் அதற்க்கு தனியாக குழுவை அமைத்து மகாஜன சபை வழி காட்டியது .சுமார் 6 மாத காலத்தில் இறைவனின் பெரும் கருணையால் கட்டிடமான உருபெற்றது .

     இறைவனின் பெரும் கருணையனால் ஹிஜ்ரி 1435 ரபியுல் ஆகிர் மாதம் பிறை 19 (2014ம் ஆண்டு பிப்ரவரி 20 ம்) நாள் வியாழன் மாலை வெள்ளி இரவு 9 மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பமானது .

      முதலாவதாக பள்ளிவாசல் இமாம்கள்  அப்துல் நாசர் ,அப்துல் ஜப்பார் தலைமையில் மௌலிது மஜிலிஸ் நடைபெற்றது .

கட்டிடத்தை   இந்த தலைமுறை ஜமாஅத்தார்கள் வரும் தலைமுறை ஜமாஅத் தர்களுக்கு அர்ப்பணம் செய்தார்கள்.



இதில் ஜமாஅத் தலைவர் ரபியுதீன் ,செயலாளர் ஜாகிர் ஹுசைன் , துணை தலைவர் ஜெஹபர் சேக் அலாவுதீன், பொருளாளர்
அப்துல் காதர் ,ஆடிட்டர் அப்துல் ரெஜாக் உள்ளிட்ட நிர்வாகஸ்தர்கள் , பிரதிநிதிகள் ,மத்லபுல் கைராத் கல்வி குழுமம் ,பைத்துல் மால் ,பெரியவர்கள் ,
ஜமாஅத் தார்கள், வளரும் தலைமுறையினர்  என பலர் கலந்து கொண்டனர் .















 
 
 

No comments:

Post a Comment