Friday 14 February 2014

Kodikkalpalayam - திருவாரூர் நகராட்சி வார்டு கவுன்சிலர்கள் வெளிநடப்பு

 
அறையில் தலைவர் ரகசிய ஆலோசனை திருவாரூர் நகராட்சி கூட்டம் 1 மணி நேரம் பிரேக்காத்திருந்து வெறுப்படைந்த காங், சுயேட்சைகள் வெளிநடப்பு.

திருவாரூர், :  திருவாரூர் நகராட்சி கூட்டம் தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் 13/02/2014  நேற்று நடைபெற்றது. துணை தலைவர் செந்தில், ஆணையர் உமா மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் துவங்கியதும், உறுதிமொழி எடுத்துக்கொண்டபின், கூட்டத்தை அரைமணிநேரம் ஒத்திவைப்பதாக கூறிவிட்டு தலைவர் தனது அறைக்கு சென்றார். அங்கு துணை தலைவர் செந்தில் மற்றும் சில கவுன்சிலர்களுடன் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.

கூட்ட அறையில் கூட்ட அறையில் காத்திருந்த காங்கிரஸ் கவுன்சிலர் ஜாகீர்உசேன், சுயேட்சை கவுன்சிலர்கள் வரதராஜன், கலிபுல்லா ஆகியோர் கூட்டத்தை புறக்கணித்து வெளியேறினர். பின்னர் மீண்டும் 5 மணியளவில் கூட்டம் துவங்கி நடைபெற்றது.

 இதில் திருவாரூர் நகராட்சிக்கு தற்போது நூற்றாண்டு நடைபெற்று கொண்டிருப்பதால் பல்வேறு வளர்ச்சி பணிகளுக்காக ரூ.9 கோடி மதிப்பில் திட்டம் போடப்பட்டு இந்த நிதியினை முழு மானியமாக அரசிடமிருந்து பெறுவது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. டெண்டர் விடப்பட்ட பணிகளுக்கான கமிஷன் தொகை சில கவுன்சிலர்களுக்கு கிடைக்கவில்லை என்றும், இதனால் அவர்கள் கேள்வி கேட்பதை தடுக்க அவர்களிடம் தலைவர் தன் அறையில் சமாதானம் பேசியதாகவும் கூறப்படுகிறது.

தினகரன் செய்தி நாள்  14/2/2014.

பின் செய்தி :

மக்களவை தேர்தல் வருவதால் அடுத்த மாதம் கூட்டம் நடைபெற முடியாது .எனவே இக்கூட்டத்தில் விவாதம் கடுமையாக இருக்கும் என்பதால்
அ தி மு க நகராட்சி தலைவர் தி மு க ஆளும்கட்சியாக இருப்பதால் அறையில் தனியாக கூட்டத்தை நடத்திவிட்டு பின்னர் சும்மா கூட்டறையில் ஆல் பாஸ் என தீர்மானகளை நிறைவேற்றி இருக்கிறார் .நகராட்சியே கமிஷன் பொறுத்தே இயக்குகிறது .பாதாள சாக்கடை திட்டம் 7ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது .

சாலைகள் ,சுகாதாரம் ,திடக்கழிவு,குடிநீர் மேல்நிலை தொட்டி  போன்றவை நகராட்சி நிர்வாகம் செய்கிறதா என்பதை நாம ஊர் தெருக்களில் பார்க்கலாம் .நாம வார்டு எம் சி கள் தொரடர்ந்து முயற்சி செய்தாலும் எல்லாமே ஆமை வேகம் தான்

100 ஆண்டுகள் கால நாம நகராட்சி இப்ப பிறப்பு சான்று முதல் அனைத்தும் லஞ்சம் கொண்டே செயல்படுகிறது .
 

No comments:

Post a Comment