Wednesday, 26 February 2014

Kodikkalpalayam - சிமெண்ட் சாலையின் அவலங்கள்

     2007ம் ஆண்டு திருவாரூர் நகர பகுதியில் துவக்க பட்ட பாதாள சாக்கடைத் திட்டத்தால் தோண்டப் பட்ட நமதூர் தெருக்களில் பெரும் போராட்டகளுக்கு பிறகு சிமெண்ட் சாலைகள் போடப்பட்டன .ஜெயம் தெரு .மலாயா தெரு .வடக்கு தெரு ,புதுமனைத்தெரு  ஆகியன முதலிலும் பிறகு தெற்கு தெரு .தினா இப்ரம்ஷா தெரு அடுத்தும் போட பட்டன .கடைசியாக மேலத்தெரு ,நடுத்தெரு என நமதூரில் பர்மா தெருவை தவிர்த்து அனைத்து தெருக்களும் சிமெண்ட் சாலைகள் தான் .

மேலத்தெரு சிமெண்ட் சாலை தார் சாலையாக மாற்றபட்டது சில மாதத்திலேயே தார் சாலையாக காட்சி தந்தது .ஆனால் கடைத்தெரு
 நடுத்தெரு சந்திப்பு , பு துமனை தெரு வடக்குத்தெரு ,தெற்கு தெரு என மிகவும்  மோசமான பாதிக்கப்பட்டு நடக்கவே முடியாத சூழ்நிலையில் உள்ளது .சல்லிகள் போர்த்து வாகனங்கள் செல்ல
முடியாத நிலையில் இருக்கிறது .தெருவில் நடக்கமுடியாத நிலையில் இருக்கிறது .

நகரமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து முயற்சி செய்து வந்தாலும் நகராட்சி
 நிர்வாகம் இதில் அக்கறை கொண்டு விரைவாக பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது  தெரு மக்களின் கோரிக்கை செய்வார்களா ?



 
தெற்குத்தெரு பள்ளி சொல்லும் பிள்ளைகள்
புதுமனை தெரு 



No comments:

Post a Comment