Monday, 10 February 2014

15 ஆண்டு கால நாகப்பட்டினம் தொகுதி எம் பி



 நாகை தனி தொகுதி யில் இப்போது இருக்கும் உறுப்பினர் பற்றிய விபரம் வருமாறு :

A K S விஜயன் (தி.மு க ).


இவர் கடந்த 1999 ம் ஆண்டு நடைபெற்ற 13ம் மக்களவை தேர்தலில் அறிமுக வேட்பாளராக போட்டிட்டு இ .கம்யூ எம் .பி செல்வராசுவை சுமார் 22000 ஓட்டு வித்தியாசத்தில் தோற்கடித்தார் .இது அப்போது பெரும் வெற்றியாக பார்க்கப்பட்டது .
என் என்றால் வாஜ்பாய் பிரதமராக மக்கள் ஓட்டு போட்டு டெல்லிக்கு அனுப்பிவைத்தார்கள்
மும்மத மக்களின் தலங்கள் உள்ளத்தால் பி ஜே பி.கூட்டில் வென்று வரலாறு படைத்தது.

2004இல் மீண்டும் வந்தார் மக்களிடம் இப்போது சோனியா காந்தி கூட்டுக்குள்
மன்மோகன் சிங் ஆட்சியில் ஆளும் கூட்டணி எம்.பி ஆனார் .

2009  இல்மூன்றாம் முறையாக போட்டிட்டு சுமார் 50000 வாக்கு கள்  மேல் பெற்று  இ .கம்யூ செல்வராசை  வென்று மக்களவை தி.மு.க.தலைவர் என்னும் பதவி பெற்றார் .

மேலும் கட்சியின் நாகை மாவட்ட செயலாளர் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது .தீவிர ஸ்டாலின் ஆதரவாளர் .

சாதனைகள் என்ன சொல்லலாம் என்ன பார்த்தால் நாகூர் முதல் தஞ்சாவூர் வரை இருக்கும் அகலரயில் பாதை பணிகள் முடிந்து ரயில்கள் சென்றுவருகிறது .சேது சமுத்திரம் திட்டம் வந்தால் நாகை துறைமுகம் வளம் பெறும் என்றார் ஆனால் பயணிகள் கப்பல் போக்குவரத்து ,சரக்கு ஏற்றுமதி இறக்குமதி என நடந்த துறைமுகம் இப்ப மீன்பிடி துறைமுகமாக மட்டுமே செயல்படுகிறது . துறைமுகத்தை மேம்படுத்திப்பயணிகள் மற்றும் சரக்குபோக்குவரத்தை மீண்டும் தொடங்க வேண்டும் என்பது பல ஆண்டு கால கோரிக்கை .துறைமுகம் மேம்படுத்தப்பட்டால் நாகையில் தொழிற்சாலைகள் உருவாகலாம். அதன் மூலம்வேலைவாய்ப்பும்பொருளாதாரமும்உயரும்.ஆனால், மூன்று முறை எம்.பி-யாக இருந்தும் விஜயன் இதைக்கண்டு கொள்ளவே இல்லை ''  என்கிறார்கள் தொகுதி வாசிகள்.

திருவாரூர் மத்திய பல்கலைகழகம் ,நான்கு வழி சாலை அமைக்க இருந்த தஞ்சாவூர் -நாகை சாலை இப்ப இருவழி சாலையாக மாற்றி அமைக்கப்பட்டது .

 தந்தி டி வி யில் ஒளிபரப்பு லிங்க் இப்ப கீழே உள்ளன

http://www.thanthitv.com/schedule/schedule.aspx?pgid=78





விவசாயமும், மீன்பிடித்தலும்தான் இங்கேபிரதானதொழில். 30 ஆண்டுகளுக்கு முன் எப்படி இருந்ததோ, அப்படியேதான்இருக்கிறது நாகை. பாதாளச்சாக்கடைக்காக கொத்திப்போட்டதால் மேடும் பள்ளமுமாகக்காட்சி அளிக்கின்றன நாகைநகரச்சாலைகள்.' 'தொகுதியில்எம்.பி-யைபார்க்கமுடியும். மற்றவர்கள் பார்த்தாலும் பார்க்காவிட்டாலும் காரில் உட்கார்ந்து கையை கூப்பியபடியே போவார் தெரியாதவராக இருந்தாலும் இனிக்க இனிக்கப்பேசுவார் . அவரைசந்திக்க முடியாது என்று யாருமே சொல்ல முடியாது  .எல்லாம் இருந்தும் என்ன?அவர் தொகுதிக்குப் பெரிதாக  எதையும்சாதித்துவிடவில்லை'' என்றுபரவலாகப்பொருமினார்கள் நாகை மக்கள்.



திருவாரூர் டு திருத்துறைப்பூண்டி அகல ரயில் பாதை திட்டம் கிடப்பில் போடப்பட்டதைப்பற்றி ஏகத்துக்கும் கொதிக்கிறார்கள் தொகுதிவாசிகள். ''சென்னை முதல் காரைக்குடி வரையிலான அகல ரயில் பாதை திட்டத்துக்கு நிதி ஒதுக்கி மயிலாடுதுறை முதல் திருவாரூர் வரை வேலைகள் நடந்தன .அடுத்த கட்டமாக திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை, காரைக்குடி வரை வேலைகள் நடைபெற வேண்டும்.ஆனால், கடைசியாக முடிக்க வேண்டிய பட்டுக்கோட்டை-  காரைக்குடி பணிகள் முதலில்  நடைபெறுகின்றன. இதற்கு காரணம் டி.ஆர்.பாலுதான். ரயில்வே போர்டு சேர்மனாக இருக்கும் அவர் அவருடைய பகுதிக்கு மட்டும் முதலில் வேலையை ஆரம்பித்திருக்கிறார். இதை விஜயனால் தட்டிக்கேட்க முடியவில்லை. திருவாரூர் டு திருத்துறைப்பூண்டி வேலைகள் நின்றதோடு அந்த வழியில் ஓடிய ரயில்களும் நிறுத்தப்பட்டுவிட்டன.



நன்றி ஜூனியர் விகடன் 

  
மேலும் விவசாயம் முக்கிய தொழிலாக இருப்பதால் காவிரி நீர் ஏற்கனவே வருவது இல்லை என்பதால் இப்பொது மீத்தேன் வாயு எடுபதாக திட்டம் தொடங்கினால் நிலம் எல்லாம் பாலைவனம் ஆக்க படுவதை தடுக்க எம் பி என்ன செய்தார்கள் ?
 
இப்ப திடீர் என்ன பொங்கல் வாழ்த்து போஸ்டர் ஒட்டப்பட்டு நான் இன்றும் தொகுதி பிரதிநிதி என காட்டி கொண்டனர் .தினசரிகளின் இப்ப போட்டோ இல்ல செய்திகள் வந்து தேர்தல் விரைவில் வர போகுது என்பதை நமக்கு கட்டியது .
வேட்பாளர் அல்லது கட்சி சின்னம் இதை தாண்டி மக்கள் வாக்களிப்பார்கள் என்பதை வரும் நாட்களின் நகரும் அரசியல் விளையாட்டுகளின் இறுதியில் தெரியவரும் .

 இப்ப 2014ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் அவரே மீண்டும் போட்டிக்கு வந்தால் தொகுதி வாக்காளர்கள் என்ன செய்வார்கள் வரவேற்ப்பா அல்லது  இல்லையா .
மீண்டும் பழைய முகமா அல்லது புதியவர் வருவாரா என்பதை தி. மு.க தலைமை எடுக்கும் முடிவை பொருத்து அமையும் .
 
முதல் கட்ட நிலவரம் இது மீண்டும் வேட்பாளர் பட்டியலுடன் இறைவன் நாடினால் சந்திக்கலாம் ....
 
 
 

No comments:

Post a Comment