Wednesday, 28 February 2018
Tuesday, 27 February 2018
Monday, 26 February 2018
Kodikkalpalayam - தெரு பிரதிநிதிகளாக இதுவரை வெற்றி பெற்றவர்கள் விபரம்.
கொடிக்கால்பாளையம் முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் ஊர்உறவின் முறை ஜமாஅத் தேர்தல் 2018ல் இதுவரை தெரு பிரதிநிதிகளாக வெற்றி பெற்றவர்கள் விபரம்:
*மேலத்தெரு -காட்டுப்பள்ளி தெரு*
1. முஹம்மது ஆதம்
2. இனாயத்துல்லா
*பள்ளிவாசல் தெரு*
1.முஹம்மது ஜெஹபர்
2. அஷ்ரப் அலி
*பர்மா தெரு*
1.முஹம்மது சலாவுதீன்
2.சேக் முஹம்மது
*தெற்கு தெரு*
1.பஜாலுதீன்
2.முஹம்மது அப்துல் வகாப்
3.சுக்கூர் முஹம்மது
4.முஜிபுர் ரஹ்மான்
*நடுத்தெரு*
1.அஹமது ஜலீல்
2. ஜாகிர் ஹூசைன்
3.ஹபிபுல்லாஹ்
4.முஹம்மது அன்சாரி
5. சிராஜூதீன்
*வடக்கு தெரு*
1. அலி அக்பர்
2.முஹம்மது அலி
*ஜெயம் தெரு*
1.
2.
தேர்தல் நாள் 4.3.2018
*புதுமனைத்தெரு -மலாயத்தெரு*
1.
2.
தேர்தல் நாள் 4.3.2018
Sunday, 25 February 2018
Saturday, 24 February 2018
ரெயில்வே மேம்பால பணிகள் மீண்டும் தொடங்கப்படுமா
நிதி ஒதுக்கிய பின்னரும் இந்த பணிகள் கிடப்பில் போடப்பட்டு உள்ளதால் இதற்கு விடிவு காலம் எப்போது? என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலம் தாலுகா தலைநகரம் ஆகும். இங்கு மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு துறை அலுவலகங்கள், நீதிமன்றங்கள் அமைந்து உள்ளது. தேசிய மயமாக்கப்பட்ட மற்றும் தனியார் வங்கிகளும் உள்ளன. நூற்றுக்கணக்கான சிறு வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. நீடாமங்கலம் நகரில் மட்டும் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
கர்நாடகா, கேரளா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும், திருச்செந்தூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, கோவை, சேலம், மதுரை, திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்தும் தினமும் ஏராளமான அரசு மற்றும் தனியார் பஸ்கள் மற்றும் இதர வாகனங்கள் நீடாமங்கலம் வழியாக திருவாரூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, காரைக்கால் ஆகிய ஊர்களுக்கு சென்று வருகின்றன.
இதேபோல் அதிராம்பட்டினம், வேதாரண்யம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி ஆகிய ஊர்களில் இருந்து நீடாமங்கலம் வழியாக கும்பகோணம், வேலூர், திருவண்ணாமலை, சென்னை, புதுச்சேரி, திருப்பதி ஆகிய ஊர்களுக்கும் தினமும் ஏராளமான தனியார் மற்றும் அரசு பஸ்கள் சென்று வருகின்றன. இவை தவிர தினமும் நூற்றுக்கணக்கான லாரிகளும், மோட்டார் சைக்கிள்களும் நீடாமங்கலத்தை கடந்து சென்று வருகின்றன. இதனால் நீடாமங்கலம் தேசிய நெடுஞ்சாலை முக்கியத்துவம் வாய்ந்த போக்குவரத்து சாலையாக திகழ்கிறது.
நீடாமங்கலம் ரெயில் நிலையம் வழியாக நாள்தோறும் 5 எக்ஸ்பிரஸ் ரெயில்கள், 4 பயணிகள் ரெயில்கள் மற்றும் சரக்கு ரெயில்கள் சென்று வருகின்றன. இது தவிர வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில்களும் இயக்கப்படுகின்றன. இது தவிர தினமும் நிலக்கரி, நெல்மூட்டைகள் என சரக்கு ரெயில்களும் நீடாமங்கலம் வழியாக இயக்கப்படுகின்றன.
இதனால் நீடாமங்கலத்தில் ரெயில்வே கேட் ஒரு நாளைக்கு 17 முறை மூடப்படுகிறது. இவ்வாறு ரெயில்வே கேட் மூடப்படும் போதெல்லாம் அங்கு அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. சாலை விபத்துக்களும் ஏற்படுகின்றன. இதனால் திருச்சி, தஞ்சாவூரில் இருந்து நீடாமங்கலம் வழியாக திருவாரூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, காரைக்கால் செல்லும் நெடுஞ்சாலை பயணிகள் மேலும் காரைக்கால், வேளாங்கண்ணி, நாகப்பட்டினம், திருவாரூர், நீடாமங்கலம் வழியாக தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு செல்லும் பயணிகள் அன்றாடம் அவதிப்படுவது என்பது பலவருடங்களாக நிகழ்ந்து வருகிறது.
நீடாமங்கலத்தில் ரெயில்வே கேட் மூடப்படும் நேரம் நாள் ஒன்றுக்கு சராசரியாக 7 மணி நேரம் என்றும் அந்த நேரங்களில் எல்லாம் நெடுஞ்சாலை போக்குவரத்தில் பாதிப்பும், போக்குவரத்து நெருக்கடியும் ஏற்படுகிறது என்றும் அதற்காக மாற்று வழியாக புறவழிச்சாலைத்திட்டம் கொண்டு வர வேண்டும் எனவும் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே கோரிக்கை விடப்பட்டு வந்தது.
இதனையடுத்து கடந்த மத்திய அரசின் சார்பில் நீடாமங்கலம் புறவழிச்சாலை திட்டத்திற்கு முதலில் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. பின்னர் திருச்சி முதல் நாகப்பட்டினம் வரையிலான நான்கு வழிச்சாலை திட்டத்தினால் புறவழிச்சாலை திட்டம் கைவிடப்பட்டது. நான்கு வழிச்சாலை திட்டமும் திருச்சி முதல் தஞ்சாவூர் வரை நிறைவேற்றப்பட்டது. பின்னர் நிதி பற்றாக்குறை காரணமாக நான்கு வழிச்சாலைத்திட்டம் இருவழி சாலை திட்டமாக அறிவிக்கப்பட்டு அந்த பணியும் பல்வேறு காரணங்களால் தற்போது சரிவர நிறைவேறாமல் பணியில் மந்தம் ஏற்பட்டுள்ளது.
நீடாமங்கலம் போக்குவரத்து நெருக்கடிக்கு நிரந்தர தீர்வு காணவும், உள்ளூர் மக்கள் நிம்மதியாக கடை வீதிக்கு சென்று வர வசதியாகவும் இருக்க தமிழக முதல்-அமைச்சராக இருந்த மறைந்த ஜெயலலிதா, நீடாமங்கலம் ரெயில்வே மேம்பாலம் திட்டத்திற்காக அரசின் 110-வது விதியின் கீழ் ரூ.20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தார். அதனை தொடர்ந்து தமிழக நெடுஞ்சாலைத்துறையினர் அதற்கான மதிப்பீட்டை தயாரித்து மேம்பாலம் அமைவதற்கான வரை படத்தையும் தயாரித்தனர்.
ரெயில்வே உயரதிகாரிகளும், தமிழக நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்களும் வரைபடத்தை கொண்டு ரெயில்வே மேம்பாலம் அமையும் வாய்ப்புள்ள பகுதிகளை நேரில் ஆய்வு செய்தனர். அப்போது மேம்பாலம் அமைய சில காலம் ஆகும் என்பதால் உடனடியாக கீழ்பாலம் அமைக்க நடவடிக்கை எடுப்பதாக ரெயில்வே உயரதிகாரி உத்தரவாதம் அளித்தார். இதனையடுத்து மேம்பாலம் அமைக்க மத்திய அரசும் ரூ.44 கோடியே 47 லட்சத்தை ஒதுக்கீடு செய்தது. மேம்பாலம் அமைக்க மண் ஆய்வும் நடத்தப்பட்டது. அதோடு சரி... அதன் பின்னர் எந்த பணிகளுமே நடைபெறவில்லை.
இந்த மேம்பாலம் அமையும் பகுதியில்(ஒரத்தூர் கிராமம்) வேளாண்மை அறிவியல் நிலையம் உள்ளதால் அதற்கான நிலங்கள் பாதிக்கும் என கோவை வேளாண் பல்கலைக்கழகம் மூலம் அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டதால் மேம்பால பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதற்கு காரணம் என சொல்லப்படுகிறது.
எந்த காரணமாக இருந்தாலும் சரி, நீடாமங்கலத்தில் போக்குவரத்து நெரிசலுக்கு விடிவு காலம் எப்போது? என்பதுதான் பொதுமக்களின் ஒரே கேள்வியாக உள்ளது. போக்குவரத்து நெருக்கடி தீர்வதற்கு ஒரே வழி உடனடியாக மேம்பாலம் அமைத்திடும் பணியை துரிதப்படுத்திட வேண்டும் என்பதுதான் என பொதுமக்கள் தெரிவிக்கிறார்கள். இருவழிச்சாலை திட்டத்தை துரிதப்படுத்திட வேண்டும்.
அதே நேரத்தில் இந்த இரண்டு பணிகளுக்குமிடையே கீழ்பாலம் அமைக்கும் பணியை தொடங்கிட வேண்டும் என்பது தான் பொதுமக்களின் முக்கியமான கோரிக்கையாகும். நாள்தோறும் அவதிப்படும் பொதுமக்களுக்கு விடிவுகாலத்தை மத்திய. மாநில அரசுகள் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். இந்த கோரிக்கைளை நிறைவேற்ற போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சை-நாகை தேசிய நெடுஞ்சாலையில் நீடாமங்கலம் ரெயில்வே கேட், தஞ்சை சாலையில், ஒரத்தூர் ரெயில்வே கேட், ஆதனூர் ரெயில்வே கேட், நீடாமங்கலம்-திருவாரூர் சாலையில் வையகளத்தூர், கப்பலுடையான் ரெயில்வே கேட்டுகள் என 5 ரெயில்வே கேட்டுகள் உள்ளன. பயணிகள் ரெயில்கள், எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மற்றும் சரக்கு ரெயில்கள் செல்லும் நேரங்களில் இந்த ரெயில்வே கேட்டுகள் மூடுவதால் ஒவ்வொரு ரெயில்வே கேட்டுகளையும் கடந்து செல்வதற்குள் சாலை மார்க்கமாக செல்பவர்கள், பொதுமக்கள் மிகுந்த அவதிப்படுகிறார்கள். வேளாங்கண்ணி, நாகூர், திருநள்ளாறு போன்ற வழிபாட்டு ஸ்தலங்களுக்கு கார், வேன், பஸ் போன்ற வாகனங்களில் செல்பவர்களும் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே இதற்கு உடனடி தீர்வு மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

Friday, 23 February 2018
Thursday, 22 February 2018
சாலையோர பானி பூரி கடைகளில் தரமற்ற உணவு வழங்கப்படுகிறதா?
திருவாரூரில் உள்ள சாலையோர பானி பூரி கடைகளில் தரமான முறையில் உணவுகள் விற்பனை செய்யப்படுவதில்லை எனவும், தரமற்ற உணவுகள் விற்பனை செய்யப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன.
இதனை தொடர்ந்து திருவாரூர் மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் உத்தரவின் பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி டாக்டர் செல்வராஜ் தலைமையில் அலுவலர்கள் பாலுசாமி, விஜயகுமார், லோகநாதன், அன்பழகன் ஆகியோர் திருவாரூர் நகரில் உள்ள சாலையோர பானி பூரி கடைகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள பானி பூரி கடைகளில் விற்பனைக்காக வைத்து இருந்த உணவின் தரத்தினை பரிசோதனை செய்தனர்.
பின்னர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் செல்வராஜ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
திருவாரூரில் சாலையோர பானி பூரி கடைகளில் விற்கப்படும் உணவுகள் தரமாக உள்ளதா? என்பதை ஆய்வு செய்தோம். பானி பூரியில் கலக்கப்படும் உணவு பொருட்கள் தரமானதாக இருக்க வேண்டும். உடலுக்கு தீங்கான கலர் பவுடர்களை பயன்படுத்த கூடாது. மேலும் அங்கு தட்டுகளை கழுவதற்காக வாளியில் வைக்கப்பட்ட தண்ணீரை தூய்மையாக வைத்து கொள்ளவும், சுகாதாரமான குடிநீர் வழங்கிட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம். தரமற்ற முறையில் உணவுகள் விற்பனை செய்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

Wednesday, 21 February 2018
இந்தியாவில் செல்போன் எண்கள் விரைவில் 13 இலக்கங்கள் கொண்ட எண்களாக மாற்றப்பட உள்ளதாக தகவல்
தேசிய செய்திகள்
இந்தியாவில் செல்போன் எண்கள் விரைவில் 13 இலக்கங்கள் கொண்ட எண்களாக மாற்றப்பட உள்ளதாக தகவல்
இந்தியாவில் செல்போன் எண்கள் விரைவில் 13 இலக்கங்கள் கொண்ட எண்களாக மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. #Tamilnews
புதுடெல்லி,
நாடு முழுவதும் தற்போது செல்போன்களுக்கான எண்கள் 10 இலக்கங்கள் கொண்டதாக வழங்கப்படுகின்றன. முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அனைத்தும் 10 இலக்க எண்ணில்தான் வாடிக்கையாளர்களுக்கு சிம்கார்டு எண்களை வழங்கி வருகின்றன. இந்த நிலையில், வரும் ஜுலை 1 ஆம் தேதி முதல் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு 13 இலக்க எண்கள் வழங்கப்படும் என்று பொதுத்துறை தொலைத்தொடர்பு துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் அறிவித்துள்ளது. எண்கள் மாற்றும் நடைமுறை அக்டோபர் 1 ஆம் தேதி துவங்கி டிசம்பர் 1 ஆம் தேதிக்குள் முடிவடையும் என்று பி.எஸ்.என்.எல் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் 13 இலக்க செல்போன் எண்களை வழங்கும் பணிகளை துவங்க வேண்டும் என்று தொலைத்தொடர்பு ஆணையம் வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனவரி 8 ஆம் தேதி இதற்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் பி.எஸ்.என்.எல். மூத்த அதிகாரி கூறியதாக ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தொலைத்தொடர்பு துறை வழிகாட்டுதலையடுத்து தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்கள் இதற்கான பணிகளை முன்னெடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பயனாளர்களின் பாதுகாப்பு அம்சங்களை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதன்படி, வரும் அக்டோபர் 1 ஆம் தேதி முதல், ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள செல்போன் எண்களை 13 இலக்க எண்களாக மாற்றும் நடைமுறைகள் துவங்கப்படும் எனவும் இந்த பணிகள் டிசம்பர் மாதத்திற்குள் முடிவடைய இலக்கு நிர்ணையிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஜூலை 1 ஆம் தேதிக்கு பிறகு அனைத்து புதிய செல்போன் எண்களும் 13 இலக்கங்களிலேயே வழங்கப்பட உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த முடிவு திட்டமிட்டபடி அமல்படுத்தப்படுமேயானால், அதிக இலக்கங்களை கொண்ட செல்போன் எண்களைப்பயன்படுத்தும் நாடாக இந்தியா மாறும். சீனாவில் தற்போது, 11 இலக்க செல்போன் எண்கள் பயன்படுத்தப்படுகின்றன. இது தவிர பிராஞ்சு பிராந்திய பகுதிகளில் உள்ள சில நாடுகளில் நீண்ட இலக்கங்களை கொண்ட செல்போன் எண்கள் பயன்படுத்தப்படுகின்றன.
Tuesday, 20 February 2018
Monday, 19 February 2018
Sunday, 18 February 2018
Saturday, 17 February 2018
இரண்டு கட்டமாக நடைப்பெற்ற தெரு பிரதிநிதிகள் தேர்தல் வெற்றி பெற்றவர்கள்
கொடிக்கால்பாளையம் முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் ஊர் உறவின்முறை ஜமாஅத் தேர்தல் 2018ல் இரண்டு கட்டமாக நடைப்பெற்று பிரதிநிதிகள் சபைக்கு தேர்வானவர்கள் விபரம்:
மேலத்தெரு காட்டுப்பள்ளி தெரு தொகுதி
1. முஹம்மது ஆதம்
2.இனாயத்துல்லா.
பள்ளிவாசல் தெரு தொகுதி
1.முஹம்மது ஜெஹபர்
2.அஷ்ரப் அலி
தெற்குதெரு
1.பஜாலுதீன்
2.முஹம்மது அப்துல் வஹாப்
3.சுக்குர் முஹம்மது
4.முஹிபுர் ரஹ்மான்
பர்மா தெரு
1.ஷேக் முஹம்மது
2.முஹம்மது சலாஹூதீன்
ஆக இதுவரை 10 பேர்கள் தேர்வு
Friday, 16 February 2018
Thursday, 15 February 2018
நமதூர் மௌத் அறிவிப்பு 15/02/2018
திருவாரூர் புதுத்தெரு மர்ஹூம் J P யூசுப் அவர்களின் சகோதரரும் இவர்களின் தகப்பனாருமான ஜியாவூதீன் அவர்கள் மௌத்
Wednesday, 14 February 2018
வெளிநாடுகளில் மருத்துவம் படிக்கச் செல்பவர்களுக்கும் ‘நீட்’ தேர்வு கட்டாயம்
இந்தியாவில் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் படிக்க விரும்பும் மாணவர்கள் ‘நீட்‘ என்னும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை எழுதுவது கடந்த 2016-ம் ஆண்டு கட்டாயமாக்கப்பட்டது. இந்த நிலையில் வெளிநாடுகளில் மருத்துவ படிப்பை மேற்கொள்ள இந்தியாவில் இருந்து ஆண்டு தோறும் சுமார் 7 ஆயிரம் மாணவர்கள் செல்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் கல்வித் திறன் சரிவர மதிப்பீடு செய்யப்படாத நிலையில் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் மருத்துவம் படிப்பதற்கு மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவது மத்திய அரசின் கவனத்துக்கு வந்தது.
இதையடுத்து வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் மருத்துவம் படிக்கச் செல்லும் மாணவர்களும் ‘நீட்‘ தேர்வை கட்டாயம் எழுதவேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று அதிரடி உத்தரவு பிறப்பித்தது. 2002-ம் ஆண்டு இந்திய மருத்துவ கவுன்சில் பரிந்துரை செய்திருந்த மதிப்பீட்டு தேர்வு விதிமுறைகளின்படி இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருக்கிறது.
தற்போது, வெளிநாடுகளில் மருத்துவம் படிக்கச் செல்லும் மாணவர்கள் இந்திய மருத்துவ கவுன்சிலிடம் இருந்து பெறும் அடிப்படைச் சான்றிதழை சமர்பித்தாலே போதும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tuesday, 13 February 2018
வெளியூர் மௌத் அறிவிப்பு 13/02/2018
நமதூர் முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் சிப்பந்தி கொடைக்காணல் அப்பா மவுத்
நமதூர் மௌத் அறிவிப்பு 13/02/2018
நமதூர் தாஜ்பிராக்ஷா தெரு மர்ஹூம் வெ.சி.அ. இமாம்ஷா அவர்களின் மகனார் வெ.சி.இ.முஹம்மது ஈசா அவர்கள் திருவாரூர் புதுத்தெரு நாலுகால் மணடபம் அருகில் உள்ள இராமநாதன் நகர் சித்திரை தெருவில் மௌத்.
அன்னாரின் ஜனாஸா நாளை 14/02/2018 புதன் காலை 10.30 மணிக்கு நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

Monday, 12 February 2018
சட்டசபையில் ஜெயலலிதா உருவப்படத்திற்கு முன் நின்று செல்பி எடுத்து கொண்ட அதிமுக எம்.பி,- எம்எல்ஏக்கள்
முன்னாள முதல்-அமைச்சர் ஜெயலலிதா உருவப்படத்தை சட்டசபை அரங்கில் அமைக்க வேண்டும் என்று அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று ஜெயலலிதா உருவப்படம் சட்டசபை அரங்கில் அமைக்கப்பட்டுள்ளது.
இன்று காலை சட்டசபை அரங்கில் ஜெயலலிதா உருவப்பட திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதற்காக சட்ட சபை நுழைவு வாயில் மற்றும் பேரவை மண்டபம் மலர்களால் அலங்கரிக் கப்பட்டிருந்தது.
சட்டசபையில் இன்று சபாநாயகர் இருக்கை இருந்த இடத்தில் 6 இருக்கைகள் போடப்பட்டு இருந்தன. அதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, சபாநாயகர் தனபால், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், கொறடா ராஜேந்திரன் ஆகியோர் அமர்ந்து இருந்தனர். அவர்களுக்கு சபாநாயகர் தனபால் நினைவு பரிசு வழங்கினார். விழா 9.30 மணிக்கு தொடங்கியது.
துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் வரவேற்று பேசினார். ஜெய லலிதா உருவப்படத்தை சபாநாயகர் தனபால் திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பேசினார்கள்.
நிகழ்ச்சியில் ஜெயலலிதா பேசிய உரை சட்டசபையில் ஒலிபரப்பப்பட்டது. 9.53 மணிக்கு நிகழ்ச்சி நிறை வடைந்தது.
படத்திறப்பு நிகழ்ச்சியில் அ.தி.மு.க. எம்.பி.க்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், அ.தி.மு.க. மாவட்ட செய லாளர்கள், அரசு வக்கீல்கள், போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
விழாவில் அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். பிர தான எதிர்க்கட்சியான தி.மு.க.வினர் அமரும் இருக்கையில் அவர்கள் அமர்ந்தனர். துரைமுருகன் இருக்கையில் மதுசூதனன் அமர்ந்து இருந்தார். பி.எச்.பாண்டி யன், பொன்னையன், கே.பி. முனுசாமி, தமிழ்மகன் உசேன், புதுவை அன்பழகன், பாலகங்கா, வைத்திலிங்கம், வேணு கோபால் கலந்து கொண்டனர்.
யாருக்கும் குறிப்பிட்ட இருக்கைகள் ஒதுக்கப்படவில்லை. விருப்பப்பட்ட இடங்களில் அனைவரும் அமர்ந்து இருந்தனர். விழா முடிந்ததும் ஜெயலலிதா படம் முன்பு நின்று எம்.எல். ஏ.க்கள் “செல்பி”எடுத்துக் கொண்டனர்.
Sunday, 11 February 2018
Saturday, 10 February 2018
Subscribe to:
Posts (Atom)