2018-2019-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி பாராளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார்.
அதன் முக்கிய அமசங்கள் வருமாறு:-
* ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.2.04 லட்சம் கோடி ஒதுக்கீடு; டிஜிட்டல் இந்தியா திட்டத்துக்கு 3073 கோடி ஒதுக்கீடு
* பாரத் நெட் திட்டம் மூலம் ஒரு லட்சம் கிராமங்களுக்கு இணையதள இணைப்பு தரப்பட்டுள்ளது
* மகளிருக்கான ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு 26 வாரங்களாக அதிகரிப்பு
* கங்கை நதியை தூய்மைப்படுத்த 187 புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும்
* கிராமங்களில் இணையதள வசதிகளை ஏற்படுத்த ரூ.10,000 கோடி நிதி ஒதுக்கீடு
* 5 ஜி சேவை குறித்து ஐ.ஐ.டி சென்னையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்
* உள்கட்டமைப்பு திட்டங்களை மேம்படுத்த 5.97 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு
* எம்.பி.க்களுக்கு படிகள் ஏப்ரலுக்கு பிறகு உயர்த்தப்படும்.பணவீக்கத்திற்கு ஏற்ப எம்.பி.க்களின் சம்பளம் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றியமைக்கப்படும்
* குடியரசு தலைவரின் சம்பளம் மாதம் ரூ.5 லட்சமாக அதிகரிப்பு
* துணை குடியரசு தலைவரின் சம்பளம் ரூ.4 லட்சமாக உயர்வு
* ஆளுநரின் சம்பளம் ரூ.3.5 லட்சமாக உயர்வு
* புதிதாக 81 லட்சம் பேர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர்.
* தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டம் மூலம் 10 கோடி ஏழை குடும்பங்களுக்கு இலவச மருத்துவ காப்பீடு .
* தனிநபர் வருமான வரி உச்சவரம்பில் எந்த மாற்றமும் இல்லை; வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ. 2.50 லட்சமாக தொடரும்.
* வருமான வரித்துறையின் கண்காணிப்பின் கீழ் பிட் காயின்கள் கொண்டுவரப்படும்; பிட் காயின் பணமுறையை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* நேர்மையாக வரி செலுத்தும் நபர்களுக்கும் விருதும், பரிசும் வழங்கப்படும்.
* மூத்த குடிமக்களுக்கு எல்.ஐ.சி மூலம் சிறப்பு திட்டம்;ஓய்வு ஊதியம் பெறுவோருக்கு 40,000 ரூபாய் வரை வட்டி வருமானத்தில் வரி பிடித்தம் இல்லை
* மருத்துவ காப்பீடுக்காக செய்யப்படும் செலவில் 50,000 ரூபாய் வரை ஓய்வு ஊதியம் பெறுவோருக்கு வரி விலக்கு
*வருமான வரி செலுத்துவோருக்கு நிரந்தர கழிவு ரூ.40 ஆயிரமாக உயர்வு
* பொதுமக்கள் தங்கத்தை எளிதாக மாற்றிக்கொள்ள வசதிகள் ஏற்படுத்தப்படும்
No comments:
Post a Comment