திருவாரூரில் உள்ள சாலையோர பானி பூரி கடைகளில் தரமான முறையில் உணவுகள் விற்பனை செய்யப்படுவதில்லை எனவும், தரமற்ற உணவுகள் விற்பனை செய்யப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன.
இதனை தொடர்ந்து திருவாரூர் மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் உத்தரவின் பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி டாக்டர் செல்வராஜ் தலைமையில் அலுவலர்கள் பாலுசாமி, விஜயகுமார், லோகநாதன், அன்பழகன் ஆகியோர் திருவாரூர் நகரில் உள்ள சாலையோர பானி பூரி கடைகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள பானி பூரி கடைகளில் விற்பனைக்காக வைத்து இருந்த உணவின் தரத்தினை பரிசோதனை செய்தனர்.
பின்னர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் செல்வராஜ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
திருவாரூரில் சாலையோர பானி பூரி கடைகளில் விற்கப்படும் உணவுகள் தரமாக உள்ளதா? என்பதை ஆய்வு செய்தோம். பானி பூரியில் கலக்கப்படும் உணவு பொருட்கள் தரமானதாக இருக்க வேண்டும். உடலுக்கு தீங்கான கலர் பவுடர்களை பயன்படுத்த கூடாது. மேலும் அங்கு தட்டுகளை கழுவதற்காக வாளியில் வைக்கப்பட்ட தண்ணீரை தூய்மையாக வைத்து கொள்ளவும், சுகாதாரமான குடிநீர் வழங்கிட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம். தரமற்ற முறையில் உணவுகள் விற்பனை செய்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

No comments:
Post a Comment