இந்திய குடிமக்களுக்கு ஆதார் அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது, அரசின் நலத்திட்டங்களுக்கு ஆதார் அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இவ்விவகாரம் தொடர்பான பல்வேறு வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
இந்தியாவில் பெரும்பாலும் பாரதீய ஜனதா ஆட்சி செய்யும் மாநிலங்களில் பசு பாதுகாப்பு என்ற பெயரில் வன்முறைகளும், அதனால் உயிரிழப்புகளும் நடந்தது விமர்சனத்திற்கு உள்ளாகியது. பசு கடத்தல் காரர்கள், இறைச்சிக்காக கொண்டு செல்கின்றனர் என பசுவின் உரிமையாளர்கள் மற்றும் பசுவை வாங்கி செல்பவர்கள் தாக்கப்பட்ட சம்பவங்கள் உத்தரபிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து செய்தியாக வெளியாகியது. பது பாதுகாப்பு என்ற பெயரில் குண்டர்கள் நடத்தும் இந்த தாக்குதலை கண்டித்த சுப்ரீம் கோர்ட்டு மாநில அரசுக்கள் கடும் நடவடிக்கையை மேற்கொள்ள உத்தரவிட்டது.
இவ்விவகாரம் தொடர்பாக சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டில் நடந்த விசாரணையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ராஜஸ்தான், அரியானா மற்றும் உத்தரபிரதேச மாநில அரசுக்குக்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
குடிமக்களுக்கு ஆதார் அடையாள அட்டை நலதிட்டங்களுக்கு கட்டாயமாக்கப்பட்டது தொடர்பான வழக்குகள் மீதான விசாரணை சென்று கொண்டிருந்த போதே பசுக்களுக்கும் இதுபோன்ற அடையாள அட்டை வழங்க பா.ஜனதா அரசுக்கள் தரப்பில் முடிவு எடுக்கப்பட்டது.
மத்திய அரசும் கடந்த 2015-ம் ஆண்டு முதல் முறையாக பசுக்களுக்கு அடையாள அட்டையை வழங்கலாம் என்ற திட்டத்தை முன்மொழிந்தது.
இந்திய - வங்கதேச எல்லைப் பகுதியில் பசுக்கள் கடத்தப்படுவதை தடுக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் அகில் பாரத் கிருஷி கோ சேவா சங்கம் என்ற அமைப்பு மனு தாக்கல் செய்தது. இதுதொடர்பான விசாரணையின் போது பசு கடத்தலை தடுப்பது தொடர்பாக நிபுணர்கள் குழு அமைத்து பரிந்துரை அறிக்கை சமர்பிக்க கோர்ட்டு உத்தரவிட்டது. பசு கடத்தலை தடுக்க, குடிமக்களுக்கு வழங்கப்படும் ஆதார் அட்டை போன்று பசுக்களுக்கும் தனித்துவமான அடையாள சான்று வழங்கலாம் என்று உச்ச நீதிமன்றத்தில் நிபுணர்கள் குழு பரிந்துரை செய்தது.
இப்போது பசுக்களுக்கு ஆதார் போன்று அடையாள அட்டையை (12 இலக்க எண்கள் கொண்டது) வழங்க அரசு முன்நகர்ந்து உள்ளது. அதாவது முதல்கட்டமாக சுமார் 40 மில்லியன் பசுக்களுக்கு அடையாள எண்ணை வழங்குவதற்கு ரூ. 50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
மத்திய விவசாய துறையில் பால்வளத்துறையை சேர்ந்த அதிகாரி (பெயரை தெரிவிக்க விரும்பவில்லை) பேசுகையில், மத்திய அரசு பசுக்களுக்கு ஆதார் போன்ற அடையாள எண்ணை வழங்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளது. மத்திய அரசு ஏற்கனவே யுஐடி தொழில்நுட்பத்தை வாங்கி உள்ளது, மிகவும் குறைவான விலையிலே கிடைக்கப்பெற்று உள்ளாது. பசுக்களிடம் ரேகை எடுத்தல், இனம், வயது, பாலினம், உயரம் மற்றும் சிறப்பு அடையாளங்கள் என பயோமெட்ரிக் வகையில் தகவல்கள் சேகரிக்கப்படும். ஒவ்வொரு அட்டைக்கும் ரூ. 8 முதல் ரூ. 10 வரையில் செலவாகும் என கூறிஉள்ளார்.
மத்திய நிபுணர்கள் குழு பரிந்துரை செய்த தகவல்களில் முக்கியமானது பசுக்களின் உரிமையாளர்கள், அதனுடைய பதிவுக்கு முழு பொறுப்பாவார்கள். பசுக்களை பதிவு செய்து அதனுடைய அடையாளங்களை வழங்கி அட்டை பெறும் உரிமையாளர் அடுத்தவரிடம் அதன விற்பனை செய்யும் போது அடையாள அட்டையை அவரிடம் கொடுத்துவிட வேண்டும் என்பதாகும்.
No comments:
Post a Comment