Saturday, 31 March 2018
Friday, 30 March 2018
வெளியூர் மௌத் அறிவிப்பு 30/03/2018
புலிவலம் சாதுல்லா அவர்களின் மனைவியும் ரஹ்மத்துல்லா அவர்களின் தாயாரும் அடியக்கமங்கலம் மர்ஹூம் மகபூப் அலி , ஹாருன் ரஷீத் இவர்களின் சகோதரியுமான மெஹர் பானு அவர்கள் புலிவலம் தனது இல்லத்தில் மௌத்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
இன்று மாலை 5:30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.
Thursday, 29 March 2018
காவிரி வாரிய விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது
காவிரி விவகாரம் தொடர்பாக முதல்வர் பழனிச்சாமி தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார். ஆலோசனை கூட்டத்தில், துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, ஓ.எஸ்.மணியன், துரைக்கண்ணு உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்துகொண்டுள்ளனர். தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், பொதுப்பணித்துறை செயலர், அரசு தலைமை வழக்கறிஞர் ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.
சுப்ரீம் கோர்ட் அளித்த கெடு இன்றுடன் நிறைவடைவதையடுத்து முதல்வர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். சட்டரீதியாக எடுக்கப்பட வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் விதித்த 6 வார கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. ஆனால் இதுவரை மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை.
கர்நாடக சட்டமன்ற தேர்தல் வரும் மே 12ம் தேதி நடைபெற இருக்கிறது. அதை கருத்தில்கொண்டே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு தயங்குவதாக தமிழக அரசியல் கட்சிகளும் விவசாயிகளும் குற்றம்சாட்டுகின்றன.
இதற்கிடையே மேலாண்மை வாரியம் அமைக்காமல், மேற்பார்வை ஆணையம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவருவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், இன்றுடன் காலக்கெடு முடியும் நிலையில், இதுவரை எந்த வாரியமும் அமைக்கப்படவில்லை.
கால அவகாசம் முடியும் வரை பொறுத்திருப்போம் என தமிழக அரசு சார்பில் தொடர்ந்து தெரிவிக்கப்பட்டு வந்தது. ஆனால், இன்றுடன் அவகாசம் முடியும் நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தமிழக அரசு சார்பில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
Wednesday, 28 March 2018
Tuesday, 27 March 2018
Monday, 26 March 2018
நமதூர் நிக்காஹ் தகவல் 26/03/2018
நமதூர் ஜெயம் தெரு S M A முஹம்மது ஆசிக் அவர்களின் மகளார் ராஹிலா பானு மணமகளுக்கும் பாக்கம் கோட்டூர் அமானுல்லா அவர்களின் மகனார் முஹம்மது ஹனிபா மணமகனுக்கும் இன்ஷா அல்லாஹ் ஹிஜ்ரி 1439ம் ரஜப் பிறை 8 ( 26/03/2018) அன்று இரவு 7.05 மணிக்கு பாக்கம் கோட்டூர் ஜாமியா மஸ்ஜித் பள்ளிவாசலில் நடைப்பெறள்ளது.
மணமக்களுக்காக நமது பிரார்த்தனை (துஆ)
بارك الله لك وبارك عليك ، وجمع بينكما في خير .
Sunday, 25 March 2018
Saturday, 24 March 2018
Thursday, 22 March 2018
வெளியூர் மௌத் அறிவிப்பு 22/03/2018
நமதூர் காட்டுப்பள்ளி தெரு ஓஸ்தா வீட்டு மர்ஹூம் அப்துல் மஜீத் அவர்களின் மருமகனும் அடியக்கமங்கலம் அப்துல் கஃபூர் அவர்களின் மகனார் A.ஜெஹபர்சாதிக் அவர்கள் அடியக்கமங்கலம் புதுமனைத்தெருவிலுள்ள
தனது இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
*இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்!*
நல்லடக்கம் மாலை 5 மணிக்கு அடியக்கமங்கலத்தில் நடைபெறுகிறது.
தனது இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
*இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்!*
நல்லடக்கம் மாலை 5 மணிக்கு அடியக்கமங்கலத்தில் நடைபெறுகிறது.
Wednesday, 21 March 2018
சவுதி அரேபியாவில் உயிரிழந்த வாலிபரின் உடலை மீட்டுத்தர வேண்டும் கலெக்டரிடம், தாய் கோரிக்கை
திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றியம் கண்டிரமாணிக்கம் பகுதியை சேர்ந்த கலியபெருமாள் மனைவி சாந்தா என்பவர் தனது குடும்பத்தினருடன் நேற்று கலெக்டர் நிர்மல்ராஜை சந்தித்து ஒரு கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றியம் கண்டிரமாணிக்கம் பெரிய தெருவில் வசித்து வருகிறேன். என்னுடைய மகன் அன்புச்செல்வம் (வயது 32). கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சவுதி அரேபியாவிற்கு டிரைவர் பணிக்கு சென்றார்.
இந்தநிலையில் கடந்த மாதம் 1-ந் தேதியன்று தனது மகன் அன்புச்செல்வம் மாரடைப்பால் உயிரிழந்ததாக அவருடன் பணிபுரிபவர்கள் தொலைபேசி மூலம் எங்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த நாங்கள் என்ன செய்வது என்று அறியாமல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தோம்.
உடலை மீட்டு தர வேண்டும்
50 நாட்கள் ஆகியும் எந்தவித தகவலும் பெற முடியவில்லை. உயிரிழந்த தனது மகனின் உடலையும் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து தனது மகன் அன்புச்செல்வனின் உடலை மீட்டு தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. தனது மகனின் உடலை மீட்டுத்தர கோரி மனு அளித்த சாந்தா மற்றும் அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
Tuesday, 20 March 2018
Monday, 19 March 2018
Sunday, 18 March 2018
Saturday, 17 March 2018
கொடிக்கால்பாளையம் ஜமாஅத் தேர்தல்பற்றிய ஒருவிளக்கம்
நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் ஊர்உறவின் முறை ஜமாஅத் தேர்தல் 2018ல் கடந்த பிப்ரவரி மாதம் துவங்கிய தெரு பிரதிநிதிகள் தேர்தலில் புதுமனைத்தெரு தவிர 20 பேர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள்.
இடையில் மேலத்தெரு பிரதிநிதி யாக வெற்றி பெற்ற முஹம்மது ஆதம் தற்போதைய தலைவர் ஜலாலுதீன் மற்றும் தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்றம் சென்று தடையாணை பெற்றதால் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெறவில்லை.வரும் மார்ச் 23ம் தேதி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை க்கு வரும்போது ஒருவேலை தடையாணையை விலக்கி கொண்டால் புதிய நிர்வாகிகள் பொறுப்பு ஏற்க தடை இருக்காது.
எனவே அதுவரை தற்போது உள்ள நிர்வாகிகள் மற்றும் தெரு பிரதிநிதிகள் பொறுப்பில் இருப்பார்கள்.
Friday, 16 March 2018
Thursday, 15 March 2018
Wednesday, 14 March 2018
ஆதார் வழக்கில் தீர்ப்பு வழங்கும் வரை ஆதார் கட்டாயம் இல்லை என உச்சநீதிமன்றம் அறிவிப்பு
மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்களைப்பெற ஆதார் எண் கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. செல்போன் எண்கள்,வங்கி கணக்குகள் போன்றவற்றில் பயனாளர்கள் ஆதார் எண்ணை வரும் மார்ச் 31 ஆம் தேதிக்குள் கட்டாயம் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையில், மத்திய அரசு செயல்படுத்தி வரும் நலத் திட்டங்களுக்கு ஆதாரை கட்டாயமாக இணைக்க வேண்டும் என்பதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தின் அரசியல்சாசன அமர்வு முன் நடைபெற்று வருகிறது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இந்த மனுவை விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில் இன்று இடைக்கால தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், ஆதார் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் வரை ஆதார் கட்டாயம் இல்லை என்று தெரிவித்துள்ளது. அதாவது, வங்கி கணக்கு, செல்போன் எண்களில் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு, ஆதார் வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் வரை நீட்டிக்கப்படுவதாக அரசியல் சாசன அமர்வு தெரிவித்துள்ளது.
Monday, 12 March 2018
Sunday, 11 March 2018
மதுபோதையில் வாகன சோதனை போலீசார் 3 பேர் பணியிடை நீக்கம்
திருவாரூர் அருகே மதுபோதையில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் 3 பேரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் உத்தரவிட்டார்.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் நெடுஞ்சாலை கண்காணிப்பு பிரிவு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் (வயது34), மற்றும் காவலர்கள் சரவணன் (40), ராமச்சந்திரன் (38) ஆகிய 3 பேரும் கடந்த மாதம் (பிப்ரவரி) 21-ந் தேதி இரவு திருவாரூர் அருகே உள்ள கொல்லுமாங்குடி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது 3 பேரும் மதுபோதையில் இருந்ததாக போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனனுக்கு தகவல் கிடைத்தது. இதுதொடர்பாக நன்னிலம் துணை போலீஸ் சூப்பிரண்டு அருண் விசாரணை நடத்தினார். விசாரணையில் போலீசார் 3 பேரும் மதுபோதையில் வாகன சோதனையில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனையடுத்து 3 பேரும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். பின்னர் ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டனர். இந்த நிலையில் மருத்துவ பரிசோதனை அறிக்கையில் 3 பேரும் சம்பவத்தன்று மதுகுடித்து இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் ராதாகிருஷ்ணன், சரவணன், ராமச்சந்திரன் ஆகிய 3 பேரையும் கடந்த மாதம் 26-ந் தேதி பணியிடை நீக்கம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் உத்தரவிட்டார்.
Saturday, 10 March 2018
Friday, 9 March 2018
ஜெயம் தெரு மற்றும். மலாயத்தெரு பிரதிநிதிகள் விபரம்
ஜெயம் தெரு.
1.அப்துல் லத்தீப்
2. முஹம்மது ஆசிக்
மலாயத்தெரு
1.துக்கன் ராஜா என்கிற சேக் முஹைதீன்
புதுமனைத்தெரு
1.
தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதுவரை 20 பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்கள்.
Thursday, 8 March 2018
நமதூர் மௌத் அறிவிப்பு 08/03/2018
நமதூர் கொடிக்கால்பாளையம் மேலத் தெரு தண்ணீர்குடத்தார் வீட்டு மர்ஹும் அப்துல் ரசீது அவர்கள் மனைவியும் ஏ. மௌலா அபூபக்கர் ஏ. ஹாஜா மெய்தீன் (ஹாஜாப்பா) ஏ. ஜாஹிர் உசேன் (செல்லத்தம்பி) ஏ. ஹஜ்ஜு முஹம்மது (ராஜா) இவர்களின் தாயருமான ஏ. ஹைருன்னசா Ex. M.C. அவர்கள் தனது இல்லத்தில் இன்று 8/3/2018 வஃபாத்தாகி விட்டார்கள்.
" இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் "
அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 9மணிக்கு இன்ஷா அல்லாஹ் நல்லடக்கம் செய்யப்படும்.
Wednesday, 7 March 2018
திருவாரூர் கடை வீதியில் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி
திருவாரூர், மாவட்டத்தின் தலைநகராக இருந்த போதிலும் நகரில் தேரோடும் 4 வீதிகளை தவிர அனைத்து சாலைகளும் மிக குறுகலாக உள்ளன. இதில் கடைவீதி எந்த நேரத்திலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், நடந்து செல்பவர்கள் மிகுந்த அவதிப்படுகின்றனர். கடை வியாபாரிகள், தங்கள் எல்லை தாண்டி சாலை வரை கடைகளை விரிவுப்படுத்தியுள்ளதாலும், நடைபாதை கடைகளின் ஆக்கிரமிப்பு போன்ற காரணங்களாலும் தான் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் கூறுகின்றனர். கடைவீதி உள்ளே கனரக வாகனம் செல்வதற்கு உரிய கால நேரத்தை போலீசார் நிர்ணயித்து அறிவிப்பு செய்துள்ளனர். ஆனால் இந்த விதிமுறைகளை யாரும் பின்பற்றுவதில்லை. எந்த நேரத்திலும் கனரக வாகனங்கள் வந்து செல்கின்றன. இதனை தடுக்க வேண்டிய போலீசார் ஆர்வம் காட்டுவதில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்தால் மட்டுமே போலீசார் வருவது என்பது வழக்கமாக இருந்து வருகிறது. குறிப்பாக கடைவீதியில் வாகனம் நிறுத்துவதற்கு என்று இடவசதி இல்லாமல் உள்ளது.
இதனால் கடை வாசலில் வாகனங்களை நிறுத்த வேண்டும். கடைக்காரர்கள் கடையை விரிவுப்படுத்தியது, வழிமுறை படுத்த முடியாத சாலையோர கடைகள் போன்ற காரணங்களால் வாகனங்களை நிறுத்த முடியாமல் திணறி வருவதாக கூறப்படுகிறது. இதே போல பிரதான சாலையாக உள்ள பனகல் சாலை நிமிடத்திற்கு, நிமிடம் வாகன நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றது. இந்த பாதையை ஒரு வழி பாதையாக மாற்றினால் தான் போக்குவரத்து நெருக்கடியில் இருந்து தப்ப முடியும்.
ஆக்கிரமிப்பு அகற்றும் பணி முறையாக நடைபெறவில்லை என நகராட்சி நிர்வாகத்தை பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். சம்பிரதாயத்திற்கு பணிகள் நடைபெறாமல் ஆக்கிரமிப்பினை முழுமையாக அகற்றி, நிரந்தர தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். எனவே அரசியல் கட்சிகளின் தலையிடுகள் இன்றி மக்கள் நலன் கருதி கடைவீதியில் ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றுவதில் மாவட்ட நிர்வாகம் முழு கவனம் செலுத்த வேண்டும் என நகர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனால் கடை வாசலில் வாகனங்களை நிறுத்த வேண்டும். கடைக்காரர்கள் கடையை விரிவுப்படுத்தியது, வழிமுறை படுத்த முடியாத சாலையோர கடைகள் போன்ற காரணங்களால் வாகனங்களை நிறுத்த முடியாமல் திணறி வருவதாக கூறப்படுகிறது. இதே போல பிரதான சாலையாக உள்ள பனகல் சாலை நிமிடத்திற்கு, நிமிடம் வாகன நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றது. இந்த பாதையை ஒரு வழி பாதையாக மாற்றினால் தான் போக்குவரத்து நெருக்கடியில் இருந்து தப்ப முடியும்.
ஆக்கிரமிப்பு அகற்றும் பணி முறையாக நடைபெறவில்லை என நகராட்சி நிர்வாகத்தை பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். சம்பிரதாயத்திற்கு பணிகள் நடைபெறாமல் ஆக்கிரமிப்பினை முழுமையாக அகற்றி, நிரந்தர தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். எனவே அரசியல் கட்சிகளின் தலையிடுகள் இன்றி மக்கள் நலன் கருதி கடைவீதியில் ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றுவதில் மாவட்ட நிர்வாகம் முழு கவனம் செலுத்த வேண்டும் என நகர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tuesday, 6 March 2018
Monday, 5 March 2018
திருவாரூர் மாவட்டத்தில் 1 லட்சத்து 80 ஆயிரம் டன் நெல் கொள்முதல்
திருவாரூர் மாவட்டத்தில் 1 லட்சத்து 47 ஆயிரத்து 200 எக்டேர் பரப்பளவில் சம்பா சாகுபடி நடைபெற்றது. தற்போது அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பெரும்பாலான இடங்களில் எந்திரங்கள் மூலம் அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது.
விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை கொள்முதல் செய்வதற்காக தேவையான இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. இதுவரை 1 லட்சத்து 80 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அதற்கான தொகை விவசாயிகள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.
விவசாயிகளிடம் இருந்து எந்தவித இடையூறுகளும் இல்லாமல் நெல் கொள்முதல் செய்ய உரிய நடவடிக்கை மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது. கொள்முதல் செய்யப்பட்ட நெல் சேமிப்பு நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு அரவைக்காக மாவட்டத்தில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற மில்களுக்கும், தேவைக்கு அதிகமானவைகளை அரவைக்காக வெளி மாவட்டங்களுக்கு சரக்கு ரெயில் மூலமும் அனுப்பி வைக்கப்படுகிறது. இதுவரை 8 ஆயிரம் டன் நெல் வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
Sunday, 4 March 2018
Saturday, 3 March 2018
Friday, 2 March 2018
Subscribe to:
Posts (Atom)