Wednesday 14 March 2018

ஆதார் வழக்கில் தீர்ப்பு வழங்கும் வரை ஆதார் கட்டாயம் இல்லை என உச்சநீதிமன்றம் அறிவிப்பு


மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்களைப்பெற ஆதார் எண் கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. செல்போன் எண்கள்,வங்கி கணக்குகள் போன்றவற்றில் பயனாளர்கள் ஆதார் எண்ணை  வரும் மார்ச் 31 ஆம் தேதிக்குள் கட்டாயம்  இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 

இதற்கிடையில், மத்திய அரசு செயல்படுத்தி வரும் நலத் திட்டங்களுக்கு ஆதாரை கட்டாயமாக இணைக்க வேண்டும் என்பதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தின் அரசியல்சாசன அமர்வு முன் நடைபெற்று வருகிறது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இந்த மனுவை விசாரித்து வருகிறது.

 இந்த வழக்கில் இன்று இடைக்கால தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், ஆதார் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் வரை ஆதார் கட்டாயம் இல்லை என்று தெரிவித்துள்ளது. அதாவது, வங்கி கணக்கு, செல்போன் எண்களில் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு, ஆதார் வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் வரை நீட்டிக்கப்படுவதாக அரசியல் சாசன அமர்வு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment