திருவாரூர் மாவட்டத்தில் 1 லட்சத்து 47 ஆயிரத்து 200 எக்டேர் பரப்பளவில் சம்பா சாகுபடி நடைபெற்றது. தற்போது அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பெரும்பாலான இடங்களில் எந்திரங்கள் மூலம் அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது.
விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை கொள்முதல் செய்வதற்காக தேவையான இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. இதுவரை 1 லட்சத்து 80 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அதற்கான தொகை விவசாயிகள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.
விவசாயிகளிடம் இருந்து எந்தவித இடையூறுகளும் இல்லாமல் நெல் கொள்முதல் செய்ய உரிய நடவடிக்கை மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது. கொள்முதல் செய்யப்பட்ட நெல் சேமிப்பு நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு அரவைக்காக மாவட்டத்தில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற மில்களுக்கும், தேவைக்கு அதிகமானவைகளை அரவைக்காக வெளி மாவட்டங்களுக்கு சரக்கு ரெயில் மூலமும் அனுப்பி வைக்கப்படுகிறது. இதுவரை 8 ஆயிரம் டன் நெல் வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment