சென்னையில் நந்தனம் பகுதியில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா நடந்து வருகிறது. இதில் கலந்து கொண்ட முதல் அமைச்சர் பழனிசாமி உரையாற்றினார். அதில் அவர் பேசும்பொழுது, நாட்டில் பெண்கள் பாதுகாப்பில் மெட்ரோ நகரங்களில் ஒன்றான சென்னை முதலிடம் வகிக்கிறது என கூறினார்.
அவர் தொடர்ந்து, எம்.ஜி.ஆர். முதன்முறையாக முதல் அமைச்சராக பொறுப்பேற்ற பொழுது ரூ.330 கோடி விவசாய கடனை ரத்து செய்தவர்.
திரை துறையில் இருந்து வந்தவர்களில் முதல் அமைச்சராக மக்கள் ஏற்று கொண்டது எம்.ஜி.ஆரையே. தமிழகத்தின் சத்துணவு திட்டத்தினை மத்திய அரசே பின்பற்றுவதற்கு எம்.ஜி.ஆர். காரணம்.
எம்.ஜி.ஆர். என்ற சக்தி தோன்றியிருக்கா விட்டால் தமிழகத்தின் கதி நிர்கதியாகி இருக்கும். எம்.ஜி.ஆர். கட்சி அவரது படம் போன்று 100 நாட்களே இருக்கும் என்றவர்கள் கோட்டைக்கே வர முடியவில்லை.
எம்.ஜி.ஆர். புகழை பறைசாற்றும் வகையில் அரசு சார்பில் நாணயம், அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.
எம்.ஜி.ஆர். குடிசை வீடுகளுக்கு மின் வசதி செய்து கொடுத்தவர். தமிழக மக்களுக்காக கிருஷ்ணா குடிநீர் திட்டத்தினை செயல்படுத்தியவர். தனது சொத்துகளை பொது நலத்திற்கு விட்டு சென்றவர் என பேசினார்.
No comments:
Post a Comment