பாராளுமன்ற எம்.பி.க்கள் ஆண்டுதோறும் தங்களின் சொத்துக்கணக்கை வெளியிட வேண்டும் என்ற விதியின் அடிப்படையில் பிரதம அலுவலகம் பிரதமர் மோடியின் சொத்து விபரங்களை வெளியிட்டுள்ளது. கடந்த மார்ச் 31-ம் தேதி வரையிலான சொத்து மதிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. பிரதமர் மோடியிடம் ரொக்கமாக கையிருப்பு கடந்த ஆண்டு ரூ.1.49 லட்சம் இருந்த நிலையில், இவ்வாண்டு ரூ. 50 ஆயிரத்திற்கு குறைவாக உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரிடம் ரூ. 48 ஆயிரத்து 944 ரொக்கமாக கையிருப்பு இருக்கிறது.
காந்திநகர் பாரத ஸ்டேட் வங்கியில் ரூ.11 லட்சத்து 29 ஆயிரத்து 690 டெபாசிட் செய்துள்ளார். மற்றொரு எஸ்பிஐ வங்கிக்கணக்கில் ரூ.1.7 கோடிக்கு டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடிக்கு சொந்தமாக காரோ, பைக்கோ கிடையாது. 2002-ம் ஆண்டு காந்திநகரில் ரூ.1.30லட்சத்துக்கு நிலம் வாங்கியுள்ளார். இப்போது அதனுடைய சந்தை மதிப்பு ரூ.1.கோடியாகும். மற்றவகையில் பரம்பரை சொத்துக்கள் ஏதும் மோடிக்கு இல்லை இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மோடியிடம் ரூ.1.38 லட்சம் மதிப்புடைய் 4 தங்க மோதிரங்கள் உள்ளன. முதலீடுகள் மற்றும் சொத்துக்கள் என மொத்தமாக அவருடைய சொத்து மதிப்பு ரூ. 2.28 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment