நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் ஊர்உறவின் ஜமாஅத் தேர்தல் கடந்த பிப்ரவரி மார்ச் மாதங்களில் நான்கு ஞாயிற்றுக்கிழமைகளில் எட்டு கட்டங்களாக தெரு வாரியாக தேர்தல் முலமாக 21 தெரு பிரதிநிதிகளில் 20 பேர் தேர்வு செய்யப்பட்டார்கள். புதுமனைத்தெரு தேர்தல் மட்டும் நீதிமன்றம் வழக்கு காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது.
கடந்த ஆறு மாத காலமாக மேலத்தெரு பிரதிநிதியாக தேர்வு செய்யப்பட்ட முஹம்மது ஆதம் அவர்கள் நீதிமன்றத்தில் தடை ஆணை பெற்றதால் புதிய நிர்வாகிகள் தேர்தல் நடந்தும் மக்கள் பொதுசபை கூட்டம் நடைபெறவில்லை.
இதனால் தற்போதைய தலைவர் ஜலாலுதீன் தலைமையில் உள்ள நிர்வாகம் தொடர்ந்து செயல்பட்டு வந்தது.
இந்நிலையில் 02/09/2018 திங்கட்கிழமை இரவு 9மணிக்கு நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசலில் ஜமாஅத் அங்கத்தினர்கள் இடையே ஆலோசனை கூட்டம் தலைவர் ஜலாலுதீன் தலைமையில் செயலாளர் ஹாஜா நஜிபுதீன் ,துணைதலைவர் பொறுப்பு ஹபிபுல்லாஹ் உள்ளிட்ட நிர்வாகஸ்தர்கள் ,தெரு பிரதிநிதிகள் ,முன்னாள் தலைவர் ரபியூதீன் ,தேர்தல் அதிகாரிகள் ,புதியதாக தேர்வு செய்யப்பட்ட முஹம்மது ஆதம் உள்பட தெரு பிரதிநிதிகள், ஊர் பெரியவர்கள் ,இளைஞர்கள் உள்ளிட்ட நமது ஜமாஅத் அங்கத்தினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
இதில். சுமார் 3 மணிநேர காரசாரமான விவாதங்கள், கருத்து பரிமாற்றங்கள் என நடைபெற்று இறுதியில் ஜமாஅத் தேர்தலுக்கு இடையூறாக இருக்கும் நீதிமன்றம் வழக்கை திரும்ப பெற சம்மதம் தெரிவித்த முஹம்மது ஆதம் அவர்கள் எவ்வளவு சீக்கிரம் திரும்ப பெற்று வந்த உடன் ஒத்தி வைக்க ப்பட்ட புதுமனைத்தெரு பிரதிநிதி தேர்தல் நடந்த பொது மக்கள் சபை கூட்டம் கூடி அங்கீகாரம் வழங்க அடுத்து வரும் ஞாயிற்றுக்கிழமை நடந்த இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
No comments:
Post a Comment