மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, இருசக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டுமென விதிகள் இருந்தும், அதை அரசு முறையாக அமல்படுத்தவில்லை என்றும், அதை அமல்படுத்த அரசுக்கு உத்தரவிட கோரியும், ராஜேந்திரன் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு ஐகோர்ட் நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மாவட்ட வாரியாக ஹெல்மெட் அணியாமல் சென்றவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் வசூலிக்கப்பட்ட அபராதம் ஆகியவை குறித்த அறிக்கையை தாக்கல் செய்தார்.
இதையடுத்து, கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அரசு முறையாக நடைமுறைப்படுத்தவில்லை என நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். மேலும், இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் போலீசார் ஹெல்மெட்டும், கார்களில் பயணிக்கும் காவல்துறை அதிகாரிகள் சீட் பெல்ட்டும் அணிகிறார்களா? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினால் மட்டும் போதாது என்று தெரிவித்தனர். காரில் செல்லும் அதிகாரிகள் கூட சீட் பெல்ட் அணிவது இல்லை மேலும், வழக்கின் மீதான தீர்ப்பு நாளை அறிவிக்கப்படும் எனக் கூறி, விசாரணையை ஒத்திவைத்தனர்.
No comments:
Post a Comment