Tuesday 4 September 2018

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு திருவாரூர் மாவட்டத்தில் 9¾ லட்சம் வாக்காளர்கள்

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் தலைமை தாங்கி வரைவு வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர், அதிகாரிகள் முன்னிலையில் வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது:-

திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, திருவாரூர், நன்னிலம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. கடந்த ஜனவரி மாதம் 10-ந் தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின் படி 9 லட்சத்து 93 ஆயிரத்து 460 வாக்காளர்கள் இருந்தனர். இதில் 2 ஆயிரத்து 599 புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர். 12 ஆயிரத்து 330 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.

இதில் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 11 ஆயிரத்து 904 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 13 ஆயிரத்து 995 பெண் வாக்காளர்களும், ஒரு மூன்றாம் பாலின வாக்காளர் என மொத்தம் 2 லட்சத்து 25 ஆயிரத்து 900 பேர் உள்ளனர். மன்னார்குடி சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 19 ஆயிரத்து 718 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 24 ஆயிரத்து 780 பெண் வாக்காளர்களும், 5 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தம் 2 லட்சத்து 44 ஆயிரத்து 503 பேரும் உள்ளனர்.

திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 27 ஆயிரத்து 500 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 31 ஆயிரத்து 169 பெண் வாக்காளர்களும், 18 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 2 லட்சத்து 58 ஆயிரத்து 687 பேரும் உள்ளனர். நன்னிலம் சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 28 ஆயிரத்து 825 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 25 ஆயிரத்து 808 பெண் வாக்காளர்களும், 6 மூன்றாம் பாலின வாக்காளர்களும் ஆக மொத்தம் 2 லட்சத்து 54 ஆயிரத்து 639 பேரும் உள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் 4 லட்சத்து 87 ஆயிரத்து 947 ஆண் வாக்காளர்களும், 4 லட்சத்து 95 ஆயிரத்து 752 பெண் வாக்காளர்களும், 30 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 9 லட்சத்து 83 ஆயிரத்து 729 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர். இவ்வாறு கலெக்டர் கூறினார்.

இதில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொறுப்பு) பால்துரை, உதவி கலெக்டர்கள் முருகதாஸ் (திருவாரூர்), பத்மாவதி (மன்னார்குடி), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி, மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் பழனிவேல், இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகக்குழு உறுப்பினர் முருகானந்தம் மற்றும் தாசில்தார்கள், நகராட்சி ஆணையர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment