தேசிய செய்திகள்
தமிழகத்தில் கடற்பகுதியில் வேதாந்தா ஹைட்ரோகார்பன் எடுக்கும் என்பதால் பிரச்சினை இல்லை -மத்திய அமைச்சர்
தமிழகத்தில் காவிரி படுகை கடற்பகுதியின் 2 இடங்களில்தான் வேதாந்தா நிறுவனம் ஹைட்ரோகார்பன் எடுக்கும் என்பதால் பிரச்சினை வராது என மத்திய அமைச்சர் கூறி உள்ளார்.
புதுடெல்லி
தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க வேதாந்தா நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கபட்டு உள்ளது. மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. காவிரி டெல்டா படுகையில் ஹைட்ரோ கார்பன் எடுக்க வேதாந்தா நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. சிதம்பரம் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஓஎன்ஜிசிக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
பின்னர் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் காவிரியை ஒட்டிய கடல் பகுதியில் இருந்துதான் ஹைட்ரோ கார்பனை எடுப்போம் . ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கமாட்டார்கள் . தமிழகத்தில் காவிரி படுகை கடற்பகுதியின் 2 இடங்களில்தான் வேதாந்தா நிறுவனம் ஹைட்ரோகார்பன் எடுக்கும் என்பதால் பிரச்சினை வராது. என கூறினார்.
No comments:
Post a Comment