சத்தீஷ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மிசோரம் ஆகிய 4 மாநில தேர்தல்களில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்துகொள்ளும் வகையில் ஒப்புகைச்சீட்டு எந்திரம் பயன்படுத்தப்படும்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் இன்று முதல் உடனடியாக அமலுக்கு வருகிறது. சத்தீஷ்கர் மாநிலத்தில் 18 இடங்களுக்கு மட்டும் முதற்கட்ட தேர்தல் நவம்பர் 12-ஆம் தேதி நடைபெறும். 2-ம் கட்ட வாக்குப்ப்பதிவு நவம்பர் 20-ல் நடைபெறும்.
மத்திய பிரதேசம், மிசோரம் ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாக நவம்பர் 28-ஆம் தேதி தேர்தல் நடைபெறும்.
ராஜஸ்தான், தெலங்கானா டிசம்பர் 7-ந்தேதி தேர்தல் நடைபெறும்.
சத்தீஷ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மிசோரம், தெலுங்கானா ஆகிய 5 மாநில தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 11-ஆம் தேதி நடைபெறும்.
கர்நாடகாவில் ஷிமோகா, பெல்லாரி, மாண்டியா ஆகியவற்றில் இடைத்தேர்தல் 3-வது நவம்பர் மாதம் நடைபெற உள்ளது.
No comments:
Post a Comment